Wednesday, November 22, 2023

இன்னைக்கு நான் ஒரு முக்கியமான விஷயத்தை கண்டுபிடிச்சு இருக்கிறேன் !




இந்த வாழ்க்கை ரொம்பவுமே கஷ்டமான ஒரு கேம். இங்கே ஜெயிக்கறது நடக்காத காரியம் ! - வெயிட் ! ஜெய்க்கறது நடக்காத காரியமா ? இந்த வார்த்தையை உங்களுடைய மனசுக்குள்ள விதைத்தது யாரு ?  இங்கே நீங்கள் என்ன முயற்சி பண்ணினாலும் தோற்றுப்போவது போல ஒரு பின்னணி புரோகிராம் இயங்குவதாக உங்களுக்கு தோன்றுகிறதா ? இன்னைக்கு வரைக்கும் கிட்டதட்ட 240 நிமிஷம் இல்லைன்னா அதுக்குமே மேல நான் டைப் பண்ணி வைத்து இருந்த ஆவணங்கள் எப்படியோ டெலீட் ஆகிவிடுகிறது. இதுக்கு காரணமாக நான் கடவுளை சந்தேகப்படனுமா ? அடிப்படையில் இங்கே எங்கேயோ ஒரு தப்பான பேட்டர்ன் இருப்பதாக எனக்கு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது. இந்த ஒரு விஷயத்துல எனக்கு கோபம்தான் ! உண்மையை சொல்லப்போனால் வாழ்க்கையில் எல்லா விஷயத்திலும்மே எனக்கு கோபம்தான். இந்த வாழ்க்கை நிறைய பாரபட்சம் நிறைந்தது. இங்கே ஜெயிக்கவில்லை என்றால் கண்டிப்பா ரொம்பவுமே கீழ்த்தரமான முறையில் நடத்துவார்கள். ஆனால் நடந்த இந்த விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்களேன். அடிப்படையில் இது ஒரு மிஷன் ஃபால்ட். ரொம்ப மேலோட்டமான முறையில் பார்த்தால் இது ஒரு மிஷன் ஃபால்ட்டாக மட்டும்தான் இருக்கும் ஆனால் உண்மையில் கடவுள் பின்னணியில் வேலையை காட்டி என்னை வேண்டுமென்றே தோற்கடித்து அவமானப்படுத்தி இருக்கிறார். இந்த ஒரு நொடி என்னை இன்னமும் அதிகமாக பாதித்த ஒரு நொடி. நான் தனியாக இருக்கிறேன் என்பதற்காக கடவுள் இவ்வளவு கொடுமைகளை எனக்கு பண்ணுவதை என்னால் அனுமதிக்க முடியாது. இங்கே எல்லோருமே விருந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது என்னை மட்டுமே வெறும் தட்டை நக்கிக்கொண்டு போகவேண்டும் என்று கடவுள் இப்படி பண்ணுவது நியாயமே இல்லாதது. என்னுடைய வாழ்க்கையில் நானும் நிறைய விஷயங்களை பார்த்துவிட்டேன் ஆனால் எல்லா விஷயத்திலும் கடவுள் என்னை நேருக்கு நேராக அவமானப்படுத்தி இருக்கிறார். கடவுள் தன்னை மேல்மட்டத்தில் இருப்பவர் என்று சொல்லிக்கொண்டாலும் அடிமட்டத்தில் இருப்பவர்கள் யாரையுமே கடவுள் கொடுமைக்கு உள்ளாக்குவதை நான் அனுமதிக்க மாட்டேன். இந்த உலகம் எனக்கானது. வெறும் கையோடு நான் சாகமாட்டேன். வாழ்க்கையை கஷ்டமாக மாற்றுகின்ற விஷயங்களை கண்டுபிடித்து ஆராய்ச்சி பண்ணி கொன்றுவிட்டால் வாழ்க்கை ரொம்பவுமே சுலபமாக மாறிவிடும். வாழ்க்கை நன்றாக இருக்கும். நான் நிறைய கஷ்டங்களை பட்டுட்டேன். எனக்கு கஷ்டம் கொடுத்தவங்க எல்லோருமே நல்லா இருக்கிறார்கள் ஆனால் நான் இனிமேலும் கஷ்டப்பட வேண்டும் அதாவது வெறும் தட்டை நக்கவேண்டும் என்றால் அது நடக்காது. இந்த மாதிரியான அடக்குமுறையை என் மேலே செலுத்தி கடவுள் என்னை அடக்குவது எனக்கு பிடிக்கவில்லை. இங்கே ஆரம்பத்தில் இருந்து எனக்கு எதுவுமே கிடைக்க கூடாது என்று கடவுள் நுணுக்கமான திட்டங்களோடு சின்ன சின்ன செயல்களை பண்ணுவதோடு பெரிய செயல்களையும் பண்ணுகிறார். இங்கே நானும் நிறையவே இழந்துவிட்டேன். நான் கெஞ்சினாலும் என்னை கடவுள் மன்னிக்கப்போவது இல்லை என்றும் நான் தவறே செய்யாமல் தண்டனைகளை அனுபவிக்க வேண்டும் என்றும் கடவுள் நியாயமற்ற காரணங்களை சொல்கிறார். இந்த டெலீட் ஆன பதிவுகளை போட்டு நான் பிளாக்கில் சம்பாத்தித்து இருந்தால் கிடைக்கும் 50 ரூபாய்யில் ஏதாவது பொருட்களையாவது வாங்கி இருப்பேன் ஆனால் கடவுள் 50 ரூபாய் மற்றும் 5 மணி நேரம் என்னுடைய வாழ்க்கையில் வீணாக போகவேண்டும் என்றே பண்ணிவைத்துவிட்டார். நான் ஒன்றும் பொழுது போகவில்லை என்று பிளாக் வைத்து நடத்தவில்லை. எனக்கு பணம் வேண்டும். நானும் நிறைய சம்பாதித்து கம்பெனி ஆரம்பிக்க வேண்டும் என்றுதான் பிளாக்-களை நடத்திக்கொண்டு இருக்கிறேன். கடவுள் என்னை முட்டாள் என்று சொல்லி கடவுள் எனக்கு பண்ணுகிற வஞ்சகமான விஷமான நடவடிக்கைகளை மறைக்க கூடாது. நீங்கள் உயர்வாக இருக்க வேண்டும் என்றால் அடுத்தவர்களை தாழ்வாக நடத்த கூடாது. நான் யாராக இருக்கிறேன். நான் என்ன பண்னினேன். நான் என்ன பண்ணிக்கொண்டு இருக்கிறேன். நான் என்ன பண்ணப்போகிறேன் எல்லாமே எனக்கு தெரியும். நான் முடிவு பண்ணிய வகையில் நடந்தால்தான் எல்லாருக்குமே நல்லது. இங்கே நீங்கள்தான் புத்திசாலி என்றால் எனக்கு தேவையான விஷயங்கள் கிடைக்காமல் நான் முட்டாளாகவே இருக்கவேண்டும் என்ற கேவலமான எண்ணத்தை விட்டுவிடுங்கள். நான் என்னுடைய வேலையை பார்க்கிறேன். எனக்கான சம்பளம் வருவதை தடுக்க வேண்டாம். இங்கே என்னுடைய கோபம் ரொம்பவுமே அதிகமான அளவுக்கு உள்ளது. நான் என்றால் நான் ஒருவன் மட்டுமே என்று கிடையாது எல்லோருமே கஷ்டப்படுகிறார்கள். எல்லோருமே வருத்தப்படுகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையின் விதி சந்தோஷமாக இருப்பதே பின்னால் எதுக்காக அவர்கள் வருத்தப்பட வேண்டும் ! கடவுள் பின்னும் இந்த நரம்பு வலையில் நான் மாட்டிக்கொண்டு இருக்கலாம் ஆனால் என்னுடைய கோபம் இந்த நரம்பு வலையை எரித்துவிடும் என்று நான் நம்புகிறேன். இந்த விளையாட்டில் நான் வெற்றி அடைய வேண்டும் என்றால் என்னுடைய கோபம் அதனுடைய அதிகபட்சத்துக்கு போகவேண்டும். கடவுளுடைய அனைத்து செயல்களையும் அந்த கோபம் எரிக்க வேண்டும். இதைத்தான் நான் கண்டுபிடித்து இருக்கிறேன். கோபம்தான் பாதுகாப்பு. கோபம் இல்லை என்றால் அடித்து அவமானப்படுத்தப்படுவார்கள். கோபம் இருந்தால் கடவுளால் கூட எதுவுமே பண்ண முடியாது. 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...