Sunday, November 19, 2023

CINEMA TALKS - TAG - TAMIL REVIEW - திரை விமர்சனம் !



இணைபிரியாத 5 நண்பர்கள் பள்ளிக்கூட காலங்களுக்கு பின்னால் கூட வருடம் ஒரு முறை மே மாதம் அன்று TAG என்ற துரத்தி பிடிக்கும் விளையாட்டை விளையாடுகிறார்கள் , இதுவரைக்குமே அந்த விளையாட்டில் தோற்றுப்போகாத ஒரு நண்பர்தான் ஜெர்ரி , மற்ற நான்கு நண்பர்கள் என்னதான் முயற்சி பண்ணினாலும் ஃபிட்னஸ் கோச் வேலையில் இருக்கும் ஜெர்ரி எப்படியாவது தப்பித்து எஸ்கேப் ஆகிவிடுகிறார். இப்படியே எல்லா வருடங்களும் சென்றுக்கொண்டு இருக்கும்போது ஒரு நாள் இவருக்கு திருமணம் என்று தெரிந்துகொண்டு எப்படியாவது இவரை இந்த வருஷக்கணக்காக நடக்கும் TAG கேம்மில் ஒரே ஒரு முறையாவது தோற்கடிக்க வேண்டும் என்று நிறைய மாஸ்டர் பிளான்கள் போடுகிறார்கள் இந்த துல்லியமான பிளான்களும் மேலும் அதனால் நடக்கும் ஸ்வரஸ்யமான சம்பவங்கள்தான் இந்த மொத்த படமுமே சொல்லி இருக்கிறது , ஒரு சில நேரங்களில் ஒரு சில படங்கள் பார்க்க ரொம்ப சாதாரணமான வகையில் இருந்தாலும் படம் பார்த்த பின்னால் ரொம்ப நல்ல உணர்வு கிடைக்கும் அப்படிப்பட்ட ஒரு படம்தான் TAG. ஒரு ஃபிரண்ட்ஷிப் பிரியக்கூடாது என்பதற்காக வருடம் வருடம் எந்த நாட்டில் இருந்தாலும் எவ்வளவு தொலைவில் என்னென்ன பண்ணிக்கொண்டு இருந்தாலும் ஒரு TAG கேம்மே சின்ன பையன்களை போல விளையாடிக்கொண்டு இருப்பது படத்தில் வேற லெவல்லில் வொர்க் அவுட் ஆகியுள்ளது. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா 30 வருடங்களாக இந்த TAG விளையாட்டை வருடம் ஒரு முறை விளையாடிக்கொண்டு இருக்கும் நிஜமான நண்பர்களை கொண்டு அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டுதான் இந்த படம் உருவாக்கப்பட்டு உள்ளது. படத்தில் நண்பர்களாக நடித்துள்ள எல்லோருமே ரொம்ப சிறப்பாக நடித்துள்ளார்கள். ஃபேமிலியோடு பார்க்காமல் ஃபிரண்ட்ஸ் எல்லோருமே சேர்ந்து இந்த படத்தை பார்த்தால் வேற லெவல்லில் இருக்கும். பள்ளிக்கூடம் மற்றும் காலேஜ் முடிந்ததும் பிரிந்துபோகும் நட்பு வட்டாரமாக ஃபிரண்ட்ஷிப் பாடல்களை போட்டு படத்தை முடிக்காமல் வருஷம் ஒரு முறை சந்தித்து ஒரு மாத காலம் அலப்பறைகளை பண்ணும் இந்த நண்பர்கள் மனதை கவர்ந்துவிடுகிறார்கள். கோச் , டாக்டர், பிசினஸ் மேன் , டிரக் அடிட் என்று வேறு வேறு வேலைகளில் இருந்தாலும் நண்பர்களாக இருப்பதால் ஸீன் போட்டுக்கொள்ளாமல் எதார்த்தமாக பழகும் இந்த நண்பர்களை 2 K கிட்ஸ் இன்ஸ்பிரேஷன்னாக எடுத்துக்கொள்வது நல்லது. மொத்தத்தில் ஒரு தரமான ஃபிரண்ட்ஷிப் படம். கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பாருங்கள். இந்த மாதிரி நிறைய தமிழ் சினிமா முதல் உலக சினிமா வரை வெளிவந்த நிறைய படங்களின் விமர்சனங்களை தெரிந்துகொள்ள நம்முடைய வலைத்தளம் NICE TAMIL BLOG - ஐ கண்டிப்பாக சந்தா பொத்தான் மற்றும் ஃபாலோ பொத்தான்களை அழுத்தி சப்ஸ்க்ரைப் பண்ணிக்கொள்ளவும். இந்த வலைப்பூவின் அனைத்து போஸ்ட்களையும் படிக்கவும், இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும். வலைப்பூவின் கமிட்டி சார்பாக வாழ்த்துக்கள். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...