இந்த உலகத்தில் யாராவது கஷ்டப்படும்போது அவங்களை காப்பாற்ற வேண்டும் என்று முயற்சி பண்ணுவாதே ரொம்ப அரிதான விஷயம். ஆனால் இந்த படத்தில் ஒரு கிராமத்தையே வெறும் 7 பேர் முன்னே பின்னே அதிகமான அறிமுகம் கூட ஆகாதவர்களாக இருந்தாலும் ஒன்றாக சேர்ந்து ரொம்ப பெரிய கொலைகார தலைவன்னிடம் இருந்து காப்பாற்றி இருப்பார்கள். இந்த படம் ரீமேக்தான். செவன் சாமுராய் என்ற ஒரு பழைய படத்தின் கான்செப்ட்ல எடுத்த படம். இயக்குனர் மிஷ்க்கின் அவருக்கு ரொம்பவுமே பிடிச்ச படம் என்று சொன்ன ஒரு படம் இந்த செவன் சாமுராய், ஒரு சில படங்களுக்கு ரீமேக் அவசியமே இல்லை என்று தோன்றும் ஆனால் இந்த படம் ஒரு ரீமேக் படமாக ஒரு அருமையான கதையை சொல்லியுள்ளது. எப்படி சாதாரணமான ஏழு பேர் ஒன்றாக சேர்ந்து அந்த கிராமத்தையே தனித்து போராடி ஜெயித்து அந்த கிராமத்து மக்களின் கடவுளாக மாறுகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதை. பொதுவாக சினிமா என்பது நிறைய வில்லன்களால் மக்கள் பாதிக்கப்படும்போது ஒரு ஹீரோ களத்தில் இறங்கி நேருக்கு நேராக சண்டை போடுவது மட்டுமே கிடையாது என்றும் ஒரு நல்ல சினிமா ஒரு தனிநபர் அல்லது அமைப்பு மற்றவர்களுடைய நன்மைக்காக உயிரையும் உடலையும் இழந்தாலும் முழுமையாக நேருக்கு நேராக போராடி ஒரு கிராமத்து மக்களுடைய குடும்பத்தையும் குழந்தைகளையும் காப்பாற்றுவதாக கூட கதையில் இருக்கலாம் என்று சொல்லியிருக்கும் இந்த படம் கண்டிப்பாக நான் பார்த்த ஒரு சிறந்த திரைப்படம் ! நீங்களும் கண்டிப்பாக பாருங்கள்.
No comments:
Post a Comment