Friday, November 24, 2023

CINEMA TALKS - VISWASAM - TAMIL REVIEW - திரை விமர்சனம் !


ஃபேன்ஸ் நிறைய நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்து வெளிவரக்கூடிய ஒரு படம் என்பதால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்புகள் என்று பார்த்தால் ரொம்பவுமே அதிகம். இந்த படம் கண்டிப்பாக ஃபேமிலியோடு பார்க்கலாம் அவ்வளவு தரமான திரைப்படம். இந்த படம் போலவேதான் வாரிசு என்ற படமும் ஒரு அளவுக்கு ஃபேமிலி ஆடியன்ஸ்ஸை இம்ப்ரஸ் பண்ண முயற்சி பண்ணியது ஆனாலும் இந்த படத்தை அந்த படத்தால் கண்டிப்பாக வெற்றி அடைய முடியாது. அதுக்கு காரணம் இருக்கிறது. இந்த படத்துடைய கதை , தன்னுடைய மனதுக்கு சரி என்று பட்டால் தயங்காமல் வன்முறையை பயன்படுத்தி எதிரிகளோடு மோதும் கிராமத்து அரிசி மில் உரிமையாளர் தூக்குதுரை , இங்கே தற்காலிக முகாம் அமைக்க வரும் டாக்டர் நிரஞ்சனாவுடன் நடந்த சந்திப்புகள் ஆரம்பத்தில் மோதலாக இருந்தாலும் பின்னாட்களில் காதலாக மாறுவதால் இரு இல்லத்தின் சம்மதத்துடன் திருமணம் நடக்கிறது. சில ஆண்டுகளுக்கு பின்னால் துரை எதிரிகளால் தாக்கப்படவே அவருடன் இருந்த குழந்தை மேலே அடிபடவும் ஒரு அம்மாவாக குழந்தையின் பாதுக்காப்பு முக்கியம் என்று கருதும் நிரஞ்சனா துரையை விட்டு பிரிந்து வெளியூரில் தனியாக தங்கி குழந்தையை வளர்க்கிறாள். காலம் செல்ல செல்ல மகளை பார்க்க செல்லும் துரை அங்கே கொலைகார அமைப்புகள் மகளை கொல்ல முயற்சிப்பதை கண்டறிந்து பிரச்சனைகளை உடைக்க களம் இறங்குவதுதான் இந்த விஸ்வாசம் படத்தின் கதை. ஒரு படமாக விஸ்வாசம் ரொம்பவே நன்றாக இருந்தது. கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எமோஷனல் காட்சிகளை இந்த படத்தில் ரொம்ப நன்றாகவே பண்ணி இருப்பார்கள். அதுவும் இந்த படத்துக்கு ஒரு பிளஸ் பாயிண்ட்தான். காட்சிகள் ரொம்ப வண்ணாமயமாக இருக்கிறது. மியூசிக் கூட பிரமாதம்தான். இங்கே 2019 இல் இப்படி ஒரு ரொம்பவுமே ரசிக்கும்படியான ஒரு ஃபேமிலி படம் கொடுத்த சிவா அவர்களுக்கு எப்படி ப்ராஜக்ட் பெஸ்ட்பிரதர் சோதப்பியது என்பது இன்னுமே எனக்கு புரியாத புதிராகத்தான் இருக்கிறது. நிறைய ஃபேமிலி வேல்யூக்கள் நிறைந்த ஒரு நல்ல கமர்ஷியல் படம்தான் இந்த விஸ்வாசம் அதனால் கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பாருங்கள் !

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...