திங்கள், 20 நவம்பர், 2023

CINEMA TALKS - SACHIEN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

இன்னைக்கு தேதிக்கு கூட மக்கள் எதிர்பார்க்கும் கதை என்ன ? ஒரு பெரிய பட்ஜெட் ரொமான்டிக் காமெடி - நம்ம ஹீரோ ரொம்ப ஸ்டைல்லா பணக்கார பையனாக வாழ்க்கை பற்றி கவலைப்படாமல் என்ன ஆனாலும் எதிர்காலம் பிரகாசமான ஒரு பையனாக இருக்க வேண்டும். இங்கே ஹீரோ காதலிக்கும் பொண்ணு ஒரு புத்திசாலியான அழகான அடம்பிடிக்கும் சுய மரியாதை உள்ள ஒரு பொண்ணு என்று இருக்க வேண்டும். ஆரம்பத்தில் மோதலில் தொடங்கும் ஒரு உறவு நிறைய பாடல்களும் கொஞ்சம் சண்டைக்காட்சிகளும் கடந்த பின்னால் காதலில் முடிவு அடைய வேண்டும். கிளைமாக்ஸ்ஸில் நிறைய ஸ்வரஸ்யமான சம்பவங்களை எல்லாம் கடந்து ஒரு காதல் வெற்றி அடைய வேண்டும். அன்பே வா படத்தில் இருந்து ரொமான்டிக் காமெடி என்றால் வொர்க் அவுட் ஆகும் ஒரு கான்செப்ட் இதுதான். நம்ம சச்சின் படத்திலும் இதேதான் ஆனால் கொஞ்சம் கமர்ஷியல் படமாகவும் சேர்த்து எடுத்து இருக்கிறார்கள். இந்த படத்தில் பாடல்கள் , நகைச்சுவை , ரொமான்ஸ் , ஆக்ஷன் என்று எல்லாமே ரொம்ப நன்றாக இருக்கும். புது இயக்குனராக இருந்தாலும் படத்தை ரொம்ப பெஸ்ட்டாக கொடுத்து இருப்பார். விஜய் - ஜெனிலியா கேரக்டர் டிசைன் ரொம்ப பென்டாஸ்டிக்காக இருக்கும். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ரொம்ப ரொம்ப அழகான காமிரா வொர்க் இருப்பதால் பாடல்களை பார்க்கும்போது நம்ம மனது மொத்தமுமே படத்துக்குள் தொலைந்துபோய்விடும். இந்த படத்தை பார்க்கும்போதுதான் பணக்கார வீட்டு பையனாக பிறந்து இருக்கலாம் என்ற ஐடியா மனதுக்குள் தோன்றுகிறது. காரணம் என்னவென்றால் இப்போது எல்லாம் காதலிப்பதை வெளிப்படையாக சொல்லவே ஒரு எக்கனாமிக் சப்போர்ட் தேவைப்படுகிறது. இந்த பிரச்சனைக்கு இயக்குனர் கிளைமாக்ஸ்ஸில் ஒரு நல்ல மெசேஜ் கொடுத்து உள்ளார். உண்மையான காதலை பணம் என்பதை காரணம் காட்டி விட்டுக்கொடுத்து சென்றுவிட கூடாது. சரியோ தவறோ சொல்லிவிட வேண்டும் என்று அன்பே வா காலத்தின் இன்னொரு வேரியேஷனை படத்தில் கொடுத்து உள்ளார். இந்த படத்தின் சச்சின் - ஷாலினி காதல் கதை சிம்பிள் ஆகவும் பெஸ்ட்டாகவும் இருப்பதால் படம் நீங்காத நினைவாக மனதுக்குள் இருக்கிறது. இன்னும் நிறைய காலேஜ் காதல் படங்கள் வந்தாலும் இந்த படத்தை மிஞ்சிவிடுமா என்பது சந்தேகம்தான். 

கருத்துகள் இல்லை:

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...