Monday, November 20, 2023

CINEMA TALKS - PROMETHEUS & ALIEN COVENENT - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

இந்த இரண்டு படங்களையும் அடுத்தடுத்து பார்த்தால் ஒரு தரமான ஸ்பேஸ் ஹாரர் படத்தை பார்க்கலாம் இந்த படங்கள் அந்த அளவுக்கு உங்களை பயமுறுத்திவிடும். XENOMORPH - ஷேனோமார்ஃப் என்ற ஏலியன் உயிரினம் பற்றிய ஒரு ஆரிஜின் கதையாக தொடங்கும் படம்தான் ப்ரோமோதியஸ். ஆரம்பத்தில் ஒரு பழைய ஸ்டார் மேப் சொன்ன தடங்களை எல்லாம் வைத்து எப்படியோ ப்ரோமோதியஸ் விண்வெளி கப்பலில் உயிரை பணயம் வைத்து ஒரு ஸ்பேஸ் ஆராய்ச்சி குழுவினர் LV-223 என்ற காடுகள் நிறைந்த கிரகத்தில் களம் இறங்குகின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடங்களை ஆராய்ச்சி பண்ணி இஞ்சீனியர்ஸ் என்று சொல்லப்படும் அந்த கிரகத்தின் பழைய மனிதர்களுக்கு இருக்கும் அறிவுத்திறனை எடுக்க பண்ணும் முயற்சிகளில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் எப்படி ஒரு புது ஏலியன் உருவாக காரணமாக மாறுகிறது என்பதை சொல்லும் ஒரு பக்காவான ஹாரர் படம். படத்தின் தொடக்கம் மற்றும் பின்னணி இசை உண்மையில் வேற லெவல்லில் இன்னொரு ஏலியன் உலகத்துக்கே கொண்டு போய்விடும். நான் இந்த பட வரிசையின் அடுத்த பாகங்களாக கருதப்படும் பழைய படங்கள் ALIEN , ALIENS , ALIEN 3 , RESURRUCTION மற்றும் PREDATOR படங்களை எல்லாம் பார்த்தது இல்லை. ஆனால் ஒரு ஏலியன் படம் என்பதால் சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக ஆர்வத்தை கொடுத்ததால் இந்த படத்தை பார்த்தேன். கிளைமாக்ஸ் டிஸப்பாயிண்ட்மெண்ட்தான் ஆனால் படத்துக்கு பொருத்தமாக இருக்கிறது.  


இந்த படத்துக்கு அடுத்த பாகம்தான் ஏலியன் : கோவனன்ட் - இந்த படத்தின் சம்பவங்களை தொடர்ந்து 11 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த விண்வெளி கப்பல் ஆராய்ச்சிக்கு இறங்குகிறது. (ஸ்பாய்லர் அலர்ட் - இவர்களுக்கும் கிளைமாக்ஸ்ல சங்குதான் !) - மறுபடியும் ஆராய்ச்சிக்கு இறங்கும் இவர்கள் கவனமாக இருந்தாலும் இந்த முறை இன்னும் மோசமாக ஏலியன் உயிரினங்களின் தூசுக்கள் காற்றில் கலந்து இருப்பதால் இவைகள் பட்டால் கூட மனித உடலை பயன்படுத்தி உயிரோடு வந்துவிடும் என்று நிலைமை இருக்கிறது. கிளைமாக்ஸ்ஸில் எப்படி உயிரோடு இருக்கும் ஆன்ட்ராய்ட் ரோபோட் பண்ணுகின்ற ஆராய்ச்சிகள் கஷ்டப்பட்டு இறங்கிய விண்வெளி ஆராய்ச்சியாளர்களை காலி பண்ணுகிறது என்று ரொம்ப பயமுறுத்தும் இன்னொரு ஏலியன் சயின்ஸ் ஃபிக்ஷன் கதைதான் இந்த ஏலியன் : கோவனன்ட் படம். சென்ற படத்தில் விட்டுப்போன சில கதைகளை இந்த படத்தில் முடித்து உள்ளார்கள் இந்த இரண்டு படத்திலும் லொகேஷன் , கிராபிக்ஸ் மற்றும் மியூசிக் எல்லாமே அவுட் ஆஃப் பாக்ஸ்ஸில் ஒரு உண்மையான வேற்று கிரகத்தில் இருப்பது போலவே படம் ஆக்கப்பட்டு உள்ளது ரோம்பவுமே பிரமாதமான விஷயம் ! இந்த படங்கள் சயின்ஸ் ஃபிக்ஷன் ரசிகர்களுக்காக மட்டும் எடுக்கப்பட்டது. ஜெனெரல் ஆடியன்ஸ்க்கு கண்டிப்பாக பொறுமை பத்தாது. திரைக்கதை அவ்வளவு மெதுவாக நகரும். 

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...