Thursday, November 16, 2023

CINEMA TALKS - THE LOKESH CINEMATIC UNIVERSE - VIKRAM - 2022 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 நான் முன்னதாக சொன்னது போல லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படம் வந்தபோது இந்த சினிமாட்டிக் யுனிவெர்ஸ் கான்செப்ட் பற்றியெல்லாம் நான் கெஸ் கூட பண்ணவில்லை. விக்ரம் படம் வெளிவந்து நான் பார்த்தபோதுதான் வேற லெவல் வேர்ல்ட் பில்டிங் இந்த படத்தில் இருந்ததை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. நீங்கள் கைதி படம் பார்த்தால் உங்களுக்கு தெரியும் அந்த படத்தில் மென்ஷன் பண்ணப்பட்ட கோஸ்ட் வேற யாருமே இல்லை நம்ம அருண் குமார் விக்ரம் அதாவது கமல் ஹாசன் தான், கமல் இந்த படத்தில் ரொம்பவுமே பிரமாதமாக பெர்ஃபார்மன்ஸ் கொடுத்து இருப்பார். இந்த படம் நிறைய கமர்ஷியல் படங்களின் இன்ஸ்பிரேஷன் என்றாலும் படம் பார்க்க ரொம்ப ஆக்ஷன் அட்வென்சர் டிராமாவாக நிறைய எண்டர்டெயின்மெண்ட் வேல்யூ நிறைந்த படமாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் படங்களின் ஐகானிக் நைட் டைம் ஃபைட் ஸீன்கள், போதைப்பொருட்கள் கடத்தும் நெட்வொர்க்குடன் மோதல் , ஹீரோ பாஸ்ட்க்கு இருக்கும் பில்ட் அப் , வில்லன்களின் மனசாட்சி இல்லாத கொலைகள் என்று ஆக்ஷன் படங்களுக்கான நிறைய காட்சிகள் படத்தில் இருந்தாலும் இந்த படத்தின் கிரியேடிவிட்டி வேறு ஒரு லெவல்லில் இருந்தது. 80 ஸ் படத்தின் சுஜாதா ரங்கராஜன் அவர்களின் கதைக்கு ஒரு சின்ன கனெக்ட்டிவிட்டி கொடுத்தாலும் படம் ஒரு ஸ்டாண்ட் அலோன்  படம்தான் , நான் முன்னதாக சொன்னது போல ரொம்ப கிரியேட்டிவ்வாக யோசித்து எடுக்கப்பட்ட படம் என்பதால் கிளைமாக்ஸ் வரைக்கும் வில்லன்களின் நேரடியான மோதல் மட்டும்தான் கதையாக இருப்பதால் பகத் பசில்லின் இன்வெஸ்டிகேஷன்ல இருந்து கதை தொடங்குகிறது. அருண்குமார் அவருடைய பையன் போதைப்பொருள் கடத்தல் கும்பலால் கொல்லப்பட்டதால் அவருடைய முன்னால் இராணுவ சிறப்பு ரகசிய அமைப்பாக இருக்கும் பிளாக் ஸ்குவாட்டை களத்தில் இறக்கி நேருக்கு நேராக போதைப்பொருள் நெட்வொர்க்குடன் மோதுகிறார். இதனால் அவருடைய குடும்பத்துக்கும் ஆபத்துக்கள் வருகிறது அவருடைய அமைப்பிலும் நிறைய பேருடைய உயிர் போகிறது. இத்தனை விஷயங்களை செய்து நிலைமையை கட்டுப்பட்டுக்குள் கொண்டுவந்தாலும் கிளைமாக்ஸ்ஸில் இந்த கும்பலின் கொலைகார தலைவனான ரோலெக்ஸ் என்ட்ரி. பொதுவாக தமிழ் சினிமா ஆடியன்ஸ்க்கு பிடித்த மாதிரி இந்த கதை இருக்கிறது. பழைய படம் வல்லவன் ஒருவன் பார்த்தால் தெரியும் ஜெயஷங்கர் ஒரு உளவுத்துறை அதிகாரியாக ரொம்ப பெரிய நெட்வொர்க்கை கிளைமாக்ஸ்ஸில் கண்டுபிடித்து பிலாஸ்ட் பண்ணுவார். அந்த படம் செம்ம ஹிட். காரணம் ஆடியன்ஸ்க்கு ரொம்பவே புதிதாக இருந்த ஐடியா. அதே ஃபார்முலாதான் நம்ம விக்ரம் படத்திலும் இருக்கிறது. செய்யவேண்டிய விஷயங்களை முடித்துவிட்டு வெற்றி தியேட்டர்ரில் இருந்து வெளியே வரும் காட்சிகளில் எல்லாம் எழுந்து நின்று கைகளை தட்டி விசில் அடிக்கலாம் அப்படி ஒரு மாஸ்!! கமல்ஹாசன் ஒரு கமர்ஷியல் ஹீரோவாக ரொம்ப பெஸ்ட்டாக பண்ணிய ஒரு ஆக்ஷன் படம் என்று இந்த படத்தை சொல்லலாம். இப்போது ஜவான் மாதிரியான கமர்ஷியல் விஜிலண்ட் படங்களை எல்லாம் பார்த்தால் நீங்கள் ஒரு பெரிய பட்ஜெட் படமாக நிறைய ஸாங்க்ஸ் மற்றும் நிறைய சண்டைகளை பார்க்கலாம். ஆனால் இந்த படத்தில் படத்துக்கு தேவை என்பதால் மட்டும்தான் எல்லா காட்சிகளுமே இருக்கிறது. தேவை இல்லாத காட்சிகள் என்று எதுவுமே இல்லை. இன்னொரு பெரிய சர்ப்ரைஸ் என்னவென்றால் ஏஜெண்டு டீனா கேரக்டர் டிசைன் வேற லெவல். ஒரு காட்சியில் வந்தாலும் ஸ்கிரீன்னை எடுத்துக்கொள்கிறார்.  கைதி படத்துடய நிறைய ஹெய்ப் கொடுத்து கிளைமாக்ஸ்ல சூர்யாவை ரோலெக்ஸ்ஸாக (மன்னிக்கவும் ரோலெக்ஸ் சாராக) களம் இறக்கி அடுத்த பாகத்துக்கு இப்போது ஒரு பெரிய எதிர்பார்ப்பை கொடுத்துவிடலாம் என்று லொகேஷ் சிறப்பாக கிளைமாக்ஸ் கொடுத்துள்ளார். நெக்ஸ்ட் பார்ட் மற்றும் லொகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸ்க்கு ரொம்பவுமே எனக்கு எதிர்பார்ப்புகள் இருக்கிறது. நம்ம தமிழ் சினிமாவுக்கு இந்த படம் ஒரு பெரிய சக்ஸஸ் என்றுதான் சொல்ல வேண்டும்.குறிப்பாக கமர்ஷியல் படங்களுக்கு மத்தியில் அதே அளவுக்கு மாஸ் காட்டும் ஒரு சுத்தமான க்ரைம் டிராமா இந்த படம்.  

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...