இந்த கதை அமெரிக்காவின் உயர்நிலை பள்ளிக்கூடத்தில் படிக்கும் இரண்டு தோழிகள் அவங்க வாழ்நாள் முழுக்க படிப்பிலும் புத்தகங்களிலும் மட்டுமே ஃபோகஸ் பண்ணியதாக பள்ளிக்கூடத்தின் கடைசி நாட்களில் யோசிப்பதில் இருந்து தொடங்குகிறது. அவர்கள் உடன் படித்தவர்கள் எல்லாம் நன்றாக படிக்கவில்லை என்றாலும் வாழ்க்கை மொத்தமும் பார்ட்டி பண்ணியே செலவு பண்ணினாலும் பெரிய காலேஜ் போவதற்கும் தொழில்களை தொடங்கவும் பெரிய கம்பெனிக்களில் வேலை செய்வதற்கும் என்னென்ன பண்ண வேண்டுமோ எல்லாவற்றையும் பண்ணிவிட்டார்கள். இதனால் ஒரு முறையாவது அவர்களுடைய வாழ்க்கையில் ஒரே ஒரு முறையாவது பார்ட்டிக்கு சென்று அட்டென்ட் பண்ண வேண்டும் என்று வீட்டை விட்டு கிளம்பும் இந்த நெருக்கமான தோழிகள் அந்த நாட்களில் எத்தனை கலகலப்பான விஷயங்களை சந்திக்கிறார்கள் என்று செம்ம காமெடியாக சொல்லும் ஒரு படம்தான் இந்த BOOKSMART - பொதுவான அமெரிக்க கலாச்சாரத்தில் இருக்கும் பள்ளிக்கூடங்களின் சிஸ்டம் ரொம்ப மோசமான முறையில் இருக்கிறது என்ற வாதம் ஒரு பக்கம் இருந்தாலும் இந்த படம் குறைவான பட்ஜெட்ல எடுக்கப்பட்டு ரொம்ப பெஸ்ட்டாகவே கிளைமாக்ஸ் வரைக்குமே கொண்டுபோய் இருக்கிறார்கள் என்பதால் கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள். மிஸ் பண்ண வேண்டாம் !
No comments:
Post a Comment