Wednesday, November 22, 2023

HEADSET போட்டு பாட்டு கேட்பது நல்ல விஷயமா ? - ஒரு கட்டுரை !!

 





ஹெட்செட்களைப் பயன்படுத்துவது ரொம்ப டேன்ஜர் ! இன்னைக்கு நான் 150/- க்கு ஒரு ஹெட்செட் வாங்கினேன் ஆனால் ஒரு வாரத்தில் வேலை செய்யவே இல்லை. கடைக்கு போனாலும் காசை திரும்ப கொடுக்க மாட்டார்கள் ! காசு வீணாக போகிறது ! 150/- என்பது தின கூலி இல்லையா ? அப்போதான் புரிந்துகொண்டேன் ஹெட்செட் ஒரு மட்டமான விஷயம் ! கொடுக்கும் காசுக்கு வோர்த் இல்லை. காரணம் என்னன்னு சொல்கிறேன் ! இங்கே ஹெட்ஃபோன் சவுண்ட் வெச்சு கேட்டால் ரொம்ப காலத்திற்கு ஹெட்ஃபோன்கள் கேட்டதால் நிரந்தரமா  காது கேட்காமல் போக வாய்ப்பு உள்ளது. காது நோய்த்தொற்றுகள்: நீண்ட காலத்திற்கு ஹெட்செட்களை அணிவது காதில் ஒரு சூடான மற்றும் ஈரமான சூழலை உருவாக்கிரும், பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்று அபாயம் வேற இருக்கு ! காது ஓரத்தில் இருக்கும் தேவையற்ற தூசு துணுக்குகளை காதுக்கு உள்ளே கொண்டு போய்விடும் ! இந்த வயர்கள் ரொம்ப எளிமையாகவே டேமேஜ் பண்ணிவிடும் என்பதால் ஸ்பீக்கர் வாங்கினால் ஆவது காசு மிச்சம் என்று நினைத்துக்கொள்ளலாம்.  நீண்ட காலத்திற்கு ஹெட்செட்களை அணிவது காதுகள் மற்றும் தலையைச் சுற்றி பிரஷர் அல்லது வலியை ஏற்படுத்தும். ஹெட்செட்டில் பயன்படுத்தப்படும் பொருட்களான  பிளாஸ்டிக் சேராமல் போனால் அலர்ஜி நிறைய வரும் !. கவனச்சிதறல் மற்றும் குறைக்கப்பட்ட விழிப்புணர்வு: நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் அல்லது வாகனம் ஓட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடும்போது ஹெட்செட்களை அணிவது சூழ்நிலை இன்னும் மோசம் ! பைக் விபத்துக்களின் அபாயத்தை அதிகரிக்கும். ஹெட்செட்களின் அதிகப்படியான பயன்பாடு நம்ம நண்பர்களை பேச விடாமல் பண்ணிவிடும். மோசமான ஆடியோ தரம் இருக்கற ஹெட்ஃபோன்களை என்னவென்று சொல்ல ! இருக்கும் காசுக்கு 450/- ரூபாய் என்றாலும் வீட்டுக்கு ஒரு சேர் வாங்கலாம் !!  1000/- ரூபாய் இருந்தால் தோசைக்கல் வாங்கலாம் குறைந்த தரமான ஹெட்செட்டுகள் அதிகமா காசு போட்டு வாங்கினாலும் நன்றாக இருக்காது, இது இசை, திரைப்படங்கள் பார்க்கும் சந்தோஷத்தை குறைக்கிறது. இங்கேயும் சில ஹெட்செட்டுகள் எல்லா சாதனங்களுடனும் இணக்கமாக இருக்காது, இது இணைப்பு அல்லது செயல்பாட்டு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இப்படி ஒரு மட்டமான ப்ராடக்ட்டை பத்து முறைக்கு மேலே நான் கம்மி விலை என்பதற்காக வாங்கியுள்ளேன் என்பதே மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது. இனிமேல் ஹெட்செட் வேண்டாம் ஆண்டவரே ! இல்லங்க நானும் நினைக்கிறேன் அன்னைக்கு ஹெட்செட் வாங்க நான் சேர்த்த காசு எல்லாமே எவ்வளவு கஷ்டப்பட்டு சேர்த்த காசு !! வெறும் மூன்று நாட்களில் காலி ஆவதுக்கா நான் சேர்த்தேன் ! இருந்தாலும் இதுவுமே ஒரு நன்மைக்குதான் என்று நினைத்துக்கொள்வேன் ஒரு தரமான ப்ராடக்ட் வாங்குவது எவ்வளவு முக்கியமான விஷயம் என்று இந்த ஒரு விஷயத்தில்தான் நான் புரிந்துகொண்டேன் !

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...