Thursday, November 2, 2023

CINEMA TALKS - BIOSPHERE - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 ஒரு சில படங்கள் செம்ம டிஸப்பாயிண்ட்மெண்ட்டாக இருக்கும். அதாவது அந்த படம் எதுக்காக பார்த்தோம் என்று யோசிக்க வைத்துவிடும். அப்படிப்பட்ட படங்களை விமர்சனம் பண்ணவே முடியாது. ஒரு புது விமர்சனத்தையும் தாண்டி வேற லேவல்க்கு அந்த படம் இருக்கும். அப்படிப்பட்ட படங்களை எல்லாம் இந்த பகுதியில் பார்க்கலாம். சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களை எல்லாம் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று ஆசைப்படும் சயின்ஸ் ஃபிக்ஷன் ஆடியன்ஸ்க்கு இந்த படம் ஒரு போஸ்ட் அபொகலிப்டிக் (ஸ்பெல்லிங் கரெக்ட்டாக எழுதிவிட்டேனா ?) படம்மாக இருக்கிறது. மொத்த ஒரு மணி நேரம் இருபது நிமிஷமும் வெறும் இரண்டு பேர்தான் கதையில் இருக்கிறார்கள். இந்த படத்துடைய கதையை சொன்னால் செம்ம மட்டமான ஸ்பாய்லர் ஆகிவிடும். படத்தை கொஞ்சம் கொஞ்சம் காமெடி பண்ணி நகர்த்த முயற்சி பண்ணி இருக்கிறார்கள். மார்க் டப்லஸ் மற்றும் ஸ்டர்லின்க் பிரவுன் என்று இந்த படத்தில் நடித்து இருக்கும் இரணடு பேரும்தான் இந்த படத்தை தாங்கி இருக்கிறார்கள். இந்த படம் சயின்ஸ் இல்லாத சயின்ஸ் ஃபிக்ஷன் என்று சொல்ல முடியாது. ஒரு சோதனை அடிப்படையிலான படம். ப்ரொடக்ஷன் சென்று ஃபைனல் வரை கொண்டுபோய் வெளிவந்து இருப்பதால் இந்த படத்தை அவ்வளவாக ஆடியன்ஸ் அடிப்படையில் குறை சொல்ல முடியாத அளவுக்கு எடுத்து இருக்கிரார்கள். நைட் ஷியாமளன்னின் கிளாஸ் படம் நினைவுக்கு வருகிறதா ? அந்த படம் போலத்தான் கான்செப்ட்ல கொஞ்சம் டிஸப்பாயிண்ட்மெண்ட் ஆனால் ப்ரொடக்ஷன் அப்பறம் பிரசன்டேஷன்னில் சோதப்பவில்லை. இருந்தாலும் மெயின் கான்செப்ட் கொஞ்சம் தர்மசங்கடமாக இருப்பதால் நண்பனோடு சேர்ந்து பார்த்தால் நண்பன் நம்மை ஏற இறங்க பார்த்துவிடுவான். அப்படிப்பட்ட படம் இந்த படம். உங்களுக்கு பார்த்தே ஆகவேண்டும் என்றால் ஒரு முறை பாருங்கள். இல்லை என்றால் ரெஸிடேன்ட் ஈவில் படங்களை பிஞ்ஜ் வாட்ச் பண்ணுங்கள். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...