இந்த படத்துடைய கதை ஒரு புதையலை கண்டுபிடிக்க இரண்டு தனித்தனி வில்லன்கள் போராடிக்கொண்டு இருக்கின்றனர். இப்போது சம்மந்தமே இல்லாமல் இந்த பிரச்சனையில் களம் இறங்கும் நம்ம ஹீரோ இந்த புதையலை பற்றி தெரிந்துகொண்டு சாமர்த்தியமாக புதையலை கொள்ளை அடிக்கவேண்டும் என்று இன்னொரு திட்டம் தீட்டுகிறார். கடைசியில் என்ன ஆகிறது என்று ஒரு விறுவிறுப்பான அட்வென்சர் கதையை வித்தியாசமான செட்டிங்கில் கொடுத்துள்ளார். இந்த படமே இன்னொரு யுனிவெர்ஸ்ஸில் நடப்பது போல படம் முழுக்க வெஸ்டர்ன் கலந்த ஒரு பீரியட் டிராமா ஜெனர் இருக்கிறது. கொஞ்சம் கூட இந்த படம் அதனுடைய ஸ்டைல்லில் விட்டுக்கொடுக்கவே இல்லை. ஸாங்க்ஸ் நிறைய படங்களில் இடத்தை நிரப்ப பயன்படுத்துவதாக இல்லாமல் கதைக்கு தேவைப்படுவதனால் மட்டும்தான் ஸாங்க்ஸ் இருக்கிறது. நீங்கள் தியேட்டர்ல கொடுக்கும் டிக்கெட்க்கு வழக்கமான கமர்ஷியல் சினிமா என்று இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான கதை , கொஞ்சம் புதுமையான திரைக்கதை . ரொம்ப மாறுபட்ட ஆக்ஷன் காட்சிகள், சாமர்த்தியமான முறையில் சம்பவங்களை அமைத்து கதையை நகர்த்திக்கொண்டு இருக்கும் ஒரு ஸ்மார்ட்டான ஹீரோ என்று ஒரு படம் பார்க்க வேண்டுமா ? கட்டாயமாக இந்த படம் நீங்கள் பார்க்க வேண்டிய ஒரு படம். கதையில் களத்திலும் விஷுவல்ஸில் நேர்த்தியிலும் கொஞ்சம் கூட குறைவைக்கவே இல்லை. பிளாட் மற்றும் நடிப்பு திறன் வேற ஒரு லெவல்லில் இருக்கிறது. ஒரு ஸீன் கூட போர் அடிக்கும் ஸீன்னாக இல்லாமல் கதைக்கு தேவைப்பட்ட ஸீன்னாக இருக்க வேண்டும் அதே சமயத்தில் ஆடியன்ஸ்க்கு என்டர்டேன்மெண்ட் கொடுக்கும் ஸ்டைல்லிலும் இருக்க வேண்டும் என்பதில் இயக்குனர் ரொம்ப கவனமான முறையில் செயல்பட்டு இருக்கிறார். சினிமாட்டோகிராஃப்பி மற்றும் ஆர்ட் வொர்க்ஸ் வேற லெவல். இந்த கதையே வேற மாதிரியான ஒரு புதுமையான லொகேஷன் செட்டப்ல நடப்பதால் லொகேஷன்ஸ்ல இருந்து காஸ்ட்யூம்ஸ் வரைக்கும் எல்லாமே இன்னொரு கட்டத்தில் இருக்க வேண்டும் என்பதால் ப்ரொடக்ஷன் டிசைன் கண்டிப்பாக அவுட் ஆஃப் பாக்ஸ்ஸில் இருக்க வேண்டும். இந்த மாதிரி படங்கள்தான் என்டர்டைன்மெண்ட் நிறைந்த கமர்ஷியல் சினிமாவுக்கு தேவை. சின்ன பசங்களுக்கு இந்த படத்தை அவ்வளவாக பொறுத்தி பார்த்து வரவேற்பு கொடுக்க முடியாமல் போகலாம் ஆனால் சினிமாவை நேசிக்கும் மக்களுக்கு இந்த படம் எவ்வளவு அழகான ஒரு கிரியேட்டிவ்வான ஃபிக்ஷன் வொர்க் என்று கண்டிப்பாக புரியும். இந்த படம் வெற்றிப்படமாக இருக்க வேண்டிய படம். காலம் கண்டிப்பாக இந்த படத்துக்கும் படத்தின் அனைத்து குழுவினருக்கும் நிறைய சப்போர்ட் கொடுக்க வேண்டும். என்னுடய பாராட்டுக்கள் கண்டிப்பாக இந்த படத்தின் படக்குழுவில் உள்ள அனைவருக்குமே இருக்கும். இந்த படம் எனக்கு பெர்சனல்லாக பிடித்து இருந்தது. நிறைய படங்கள் நம்ம கல்ச்சர் ரெஃபரென்ஸ்ஸஸை இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்ட்ஸ்க்கு எடுத்துக்கொண்டு செல்ல முயற்சி பண்ணி இருக்கிறது ஆனால் இந்த படம் நம்ம கல்ச்சர் ரெஃபரென்ஸ்ஸை வெற்றிகரமாக இன்டர்நேஷனல் லெவல் சினிமாவுக்கு கொண்டு சேர்த்துவிட்டது.
No comments:
Post a Comment