இந்த உலகத்தில் வெற்றியை அடைய வேண்டும் என்றால் நம்முடைய பாதை ஒரு நேரான நேர்க்கோட்டில் செல்லும் அம்பு போல இருக்க வேண்டும். இந்த உலகத்தில் எல்லோருமே நல்லவர்களாக இருந்தால் வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும் ஆனால் இங்கே இருப்பவர்கள் அனைவருமே நல்லவர்கள் என்று சொல்ல முடியாது. மனித வாழ்க்கையின் உண்மை என்னவென்றால் இந்த வாழ்க்கை என்பது துன்பங்களும் துயரங்களும் நிறைந்தது. மனக்கசப்புகளை கடந்து அனைவரிடமும் அன்பை கொடுக்க வேண்டும். தேவைகள் இருப்பவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்து வாழும் வாழ்க்கையே ஒரு சிறப்பான வாழ்க்கை என்று சொல்லலாம். ஆனால் போதுமான பணம் இல்லாததால்- உடல்நலம் சார்ந்த குறைபாடுகளால்- மோசமான சூழ்நிலைகள் என நிறைய காரணங்கள் இருக்கலாம். இந்த உலகத்தில் வெற்றியாளர்களை மட்டுமே எல்லோருமே கொண்டாடுகிறார்கள். தோல்வி அடைந்த மனிதர்களுக்கு அந்த தோல்விக்கு பின்னால் நிறைய காரணங்கள் இருக்கிறது. ஆனால் அந்த காரணங்களை பற்றி யாருமே கவலைப்படுவது இல்லை. தோல்வி அடைந்தவர்களை கேட்டுப்பாருங்கள். அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கும் குறைகள், பிரச்சனைகள் மற்றும் தனிப்பட்ட நிறைய விஷயங்கள்தான் அந்த தோல்விக்கு காரணமாக இருக்கும். வாழ்க்கை ஒரு போராட்டம்தான் - வாழ்வே ஒரு வியாபரம்தான் என்ற வார்த்தைகளை போல இந்த உலகமே மிகவும் மோசமானது. இதனால் ஒரு ஒரு தனிப்பட்ட மனிதரும் வெற்றியை அடைவதற்காக போராட வேண்டும். ஒரு திரைப்படம் அதனுடைய கதைக்களத்தில் மிகப்பெரிய அளவில் ஒரு கற்பனையான பிரபஞ்சத்தை உருவாக்குகிறது. அதுபோலவே கடவுள் எல்லோருக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கையை கொடுத்துள்ளார். கடவுள் இருக்கிறார். அவரே எல்லோரையும் காப்பாற்றுவார். இந்த உலகத்தில் எல்லோருமே நல்லவர்கள் கிடையாது. கான்செர் போன்ற உயிரை கொல்லும் நோய்கள் இருக்கும்போது இந்த உலகமே வெறுப்பாக இருக்கும், அடுத்த நாள் காலை கண்கள் விழிக்கும்போது வாழ்க்கை நரகமாக இருக்கும், அடுத்த நாள் உயிரோடு இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வோம், பணம் இல்லாமல் நோயை குணப்படுத்த முடியாத நிலையில் வாழ்க்கை மிகவும் கஷ்டமாக இருக்கும். இந்த கடவுளின் சோதனைக்கூடமா ? எல்லோருமே கடவுளின் சோதனை எலிகளா ? கடவுள் எல்லோருக்கும் இவ்வளவு கஷ்டத்தையும் வலிகளையும் கொடுக்க காரணம் என்ன ? மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது, என்னுடைய மனது பேசக்கூடிய மொழியை இந்த எழுத்துக்களால் மொத்தமாக சொல்லிவிட முடியுமா என்று எனக்கு புரியவில்லை. இல்லை இந்த எழுத்துக்களால் என்னுடைய கடினமான வாழ்க்கையை சொல்ல முடியாது. இங்கே பெர்சனல்லாக ஒரு விஷயம் சொல்ல ஆசைப்படுகிறேன். நான் என்னுடைய வாழ்க்கையின் ஒரு ஒரு நொடிக்கும் என்னுடைய இரத்ததை கொடுத்து போராடி இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கை நான் கஷ்டப்பட்டு உருவாக்கிய ஒரு விஷயம். இங்கே அதிகபட்சத்துக்கு போகாமல் நான் அடங்க மாட்டேன். நான் ஒரு போர் வீரன். எனக்கு தோல்வி இருக்கிறது. என்னுடைய அறிவுத்திறனை கொண்டு மட்டுமே பிரச்சனைகளை சரிசெய்வது என்பது ரொம்ப பெரிய விஷயம். ஆனால் நான் யாருக்குமே பாதிப்பு உருவாக்காமல் பண்ணவேண்டும் என்றால் என்னுடைய அறிவுத்திறன்னை மட்டுமே பயன்படுத்தி எல்லாவற்றையும் முடிக்க வேண்டும். உங்களுக்கு யாராவது பிரச்சனை கொடுத்தால் அவர்கள் உங்களால் அடிக்கப்பட வேண்டும் என்று கெஞ்சுகிறார்கள். தயக்கம் வேண்டாம் அவர்களின் ஆசைப்படி சிறப்பாக செய்துவிடுங்கள்.
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ
நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...

-
எழுத்தாளர் ஜோடி சுபா — சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் — இன்றைய காலத்திய மிகவும் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார்கள். குறி...
-
சுஜாதா ரங்கராஜன், தமிழ் இலக்கியத்தின் மிகப் புகழ்பெற்ற நவீன எழுத்தாளர்களில் ஒருவராக, அறிவியல், தொழில்நுட்பம், மற்றும் மனித உணர்வுகளை திறம்பட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக