Sunday, November 19, 2023

CINEMA TALKS - NO TIME TO DIE - TAMIL REVIEW - திரை விமர்சனம் !





 இந்த படம் நான் பார்த்த மற்ற ஜேம்ஸ் பாண்ட் படங்களில் இருந்து ரொம்ப வித்தியாசமானது. இந்த படத்துடைய கிளைமாக்ஸ் பற்றி பேசவேண்டாம் கண்டிப்பாக ஸ்பாய்லர்ராக மாறிவிடும். ஜேம்ஸ் பாண்ட் இப்போது தனித்து இருக்கிறார். MI-6 இன் மிஷன்களில் இல்லாமல் ஒரு அமைதியான தனிமையான வாழ்க்கையை வாழ நினைக்கிறார் , ஜேம்ஸ் பாண்ட் மற்றும் மேடலின் ஸ்வான் கல்யாணம் செய்துகொண்டு சந்தோஷமான வாழ்க்கை வாழவேண்டும் என்று ஆசைப்பட்டாலும் இவர்களின் காலம் இவர்களை சோதிக்கிறது. இவர்கள் பிரிந்துவிடுகிறார்கள் ஆனால் பல வருடங்களுக்கு பின்னால் ஜேம்ஸ் பாண்ட் புதிய 007 ஏஜெண்ட் நோமியால் மறுபடியும் மிஷன்னுக்கு கொண்டுவரப்படும்போது ஸ்பேக்ட்டர் ஆர்கானிஷேஷனை எதிர்க்கும் புதிய வில்லன் ஸாஃப்பின்னின் துல்லியமான இரத்ததில் கலக்கும் நானோ பாட்ஸ்ஸின் தாக்குதல்களில் இருந்து எல்லோரையும் காப்பாற்ற வேண்டிய நிலை ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் ஜேம்ஸ் பாண்ட் மற்றும் மேடலின் ஸ்வான்னின் மகள் மேதில்ட்டா ஸ்வான்னுக்கும் உயிருக்கு ஆபத்து இருப்பதால். கண்ணுக்கே தெரியாத நானோ பாட்ஸ்ஸின் ஆபத்தான வலையில் இருந்து எப்படி எல்லோரையும் காப்பாற்றுகிறார் என்றுதான் படத்தின் கதை. பொதுவாக படத்தை எடுப்பவர்கள் மற்ற படங்களியும் பார்த்து எடுக்க வேண்டும். இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரங்களை ஒரு ஒரு சின்ன சின்ன காட்சியிலும் காலி பண்ணிக்கொண்டே இருக்கிறார்கள். இரத்ததில் கலக்கும் நானோ பாட்ஸ் நம்பும் படியாக இல்லை என்றாலும் நிஜத்தில் கொஞ்சம் யோசித்து பாருங்களேன். இந்த மாதிரி நானோ பாட்ஸை உருவாக்கி மனிதர்கள் உடல் பட்டாலே கரைத்துவிடும் என்று ப்ரோக்ராம் பண்ணிவிட்டார்கள் என்றால் பின்னால் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது அதனாலேயே இதுவரைக்குமே நடந்த ஜேம்ஸ் பாண்ட் கதைகளில் ரொம்ப இண்டென்ஸ்ஸான கதை ரொம்ப இண்டென்ஸ்ஸான ஆக்ஷன் இந்த படத்தில்தான் இருக்கிறது. ஆனால் கிளைமாக்ஸ்தான் சோதப்பலோ சொதப்பல். நாங்களும் ஸ்டோரி ஆர்க்கை முடிக்கிறோம் என்று முடித்துவிட்டார்கள். இனிமேல் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யாரோ ? அவெஞ்சர்ஸ் படங்களில் இன்பினிட்டி சாகா என்று ஒரு கதை முடிந்த பின்னால் மேல்டிவேர்ஸ் சாகா என்று எப்படி கிடைத்த ஒரு வரிகளை எல்லாம் கதைகளாக மாற்றி டெக்னாலஜிக்களை களம் இறக்குகிறார்களோ அதேபோல ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்குமே பண்ணினால் போதுமான எக்ஸ்ஸைட்மெண்ட் கிடைக்காது. எல்லாமே டெக் மயம் என்று கதைகளை எழுதினால் மனிதத்தன்மை என்பது படங்களில் குறைந்துவிடும் அதுக்கு இந்த படம்தான் ஒரு நல்ல எக்ஸாம்பில் , பேசிக்காக இந்த படம் நல்ல படம்தான் ஆனால் கிளைமாக்ஸ் மட்டுமே என்ன சொன்னாலும் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. 


No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...