Monday, November 20, 2023

WHEN I ASK THE QUESTION OF WHY THIS ? - E1 - TAMIL CINEMA ANALYSIS - திரை விமர்சனம் :

 பொதுவாக ஒரு சில படங்களில் கதையை முடிக்கவே தெரியாமல் முடித்து இருப்பார்கள் , இன்னொரு சில படங்களில் கதையே இருக்காது வெறுமனே பொழுது போக்கு அம்சங்களுக்காக இந்த படம் வெளிவந்து இருக்கும் இந்த படங்கள் பற்றிய கருத்துக்களை இந்த WHY THIS பகுதியில் பார்க்கலாம் !


1. கால கூத்து :

" மொத்த படமுமே நன்றாக இருந்தாலும் கிளைமாக்ஸ் சொதப்பலோ சொதப்பல்  இங்கே பிரசன்னாவின் காதல் எதார்த்தமாக ஆரம்பம் ஆகவும் கொஞ்சம் நன்றாக சென்று கடைசியில் தோல்வி அடைந்து தரைத்தளம் உடைந்து போன கப்பலாக நடுக்கடலில் மூழ்கிவிடுகிறது இருந்தாலும் பிரசன்னா ரொம்ப கஷ்டப்பட்டு கலையரசனின் காதலை சேர்த்து வைப்பார் , கல்யாணம் எல்லாம் முடிந்து வாழ்க்கை தொடங்கும்போது எதிரிகளால் மூன்று பேரும் தீர்த்துக்கட்டப்பட்டு கிளைமாக்ஸ்ஸில் பாதிக்கப்பட்ட கடைசி உயிர்கள் இவைகளாக இருக்கட்டும் என்று மரண பழைய டயலாக் விட்டு படம் முடிந்தால் எப்படி இருக்கும். ஒரு நல்ல ஹீரோக்களை சப்போர்ட் பண்ணவில்லை , நல்ல ஹீரோயின்களை சப்போர்ட் பண்ணவில்லை. நல்லதோர் வீணை செய்து நலன்கேட புழுதியில் எறிந்த கதைதான் கிளைமாக்ஸ். இந்த மாதிரி கிளைமாக்ஸ்ஸில் சாகடிக்க வேண்டிய அவசியமே இல்லாதபோது என் அண்ணனுக்கு நான் பண்ணுவேன் என்பது போல டேலண்ட் உள்ள நடிகர்களை வைத்து செய்வது உங்களுக்கு நியாயமா ? கமெண்ட்டில் பதிவு பண்ணுங்கள் !


2. காசேதான் கடவுளடா :

மிர்ச்சி சிவா எனக்கு ரொம்பவுமே ஃபேவரட் ஆக்டர் - இவருடைய அனைத்து படங்களிலும் நல்ல கான்செப்ட் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் வேல்யு இருக்கும் ஆனால் இந்த படம் மொத்ததின் பாரத்தையும் சிவா , கருணாகரன் , ஊர்வசி , யோகி பாபு , பிரியா ஆனந்த் என்று டாலெண்டட் ஆன நடிகர்கள் மற்றும்தான் காப்பாற்றி இருக்கிறார்கள். சுப்பு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பிளாக் மெயில் காட்சிகள் தப்பாக இருக்கிறது. காமெடிக்கு என்றாலும் தப்பாக இருக்கிறது. ரீமேக்குக்காக பங்களா செட் போட்டு எடுத்த இந்த படம் உண்மையான படத்துக்கு அவமான சின்னம். உண்மையான படத்தில் நடித்தவர்கள் இந்த படத்தை பார்த்தால் மனசுக்கு ரொம்ப கஷ்டப்பட்டு விடுவார்கள். விஜய் டிவி புகழ் வெறும் 45 வினாடிகள் மட்டும்தான் படத்தில் இருக்கிறார் ஆனால் போஸ்டர்ரில் அவருடைய முகத்தை போட்டு மக்களை ஏமாற்றலாமா ? காசு மற்றும் நேரம் கொடுத்து பார்க்க வேண்டிய இந்த படம் 35 நாட்களில் அவசர அவசரமான முறையில் நிறைய பிரச்சனைகளால் எப்படியோ ஷூட்டிங்கை முடித்து வெளிவந்து உள்ளது. பொன் வைக்கும் இடத்தில் பூ வைக்கலாம் ஆனால் சாக்லேட் பேப்பர் வைக்க கூடாது ! கடைசியாக சொல்லப்போனால் நடிகர்கள் ரொம்ப கஷ்டப்பட்டு இந்த படத்தை காப்பாற்றி இருக்கிறார்கள். 



3. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் :

இந்த படத்தில் வடிவேலு அவர்களின் ஐகானிக் நான்-ரேயலிஸ்டிக் காமெடிக்களை கண்டிப்பாக காலகாலமாக வடிவேலு காமெடிக்களை ரசிக்கும் ரசிகர்களுக்கு போதுமானதாக இருந்திருக்கலாம் ஆனால் புது ஜெனரேஷன்க்கு போடாது. போன இரண்டு படங்களில் இருப்பது போல இல்லாமல் இந்த படத்துக்கு பக்காவான ப்ரொடக்ஷன் வேல்யூ இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர்கள் மற்றும் எக்ஸ்ஸல்லன்ட் பெர்ஃபார்மன்ஸ் இருந்தாலும் அவுட் ஆஃப் லாஜீக் காமெடிக்கள் நன்றாகவே வொர்க் அவுட் ஆகி இருந்தாலும் படத்தில் என்னமோ மிஸ்ஸிங் ! கிளைமாக்ஸ் இன்னும் பெட்டர்ராக இருந்து இருக்கலாம். நடிப்பு என்றால் சின்ன சின்ன ஜூனியர் ஆக்டர்ஸ் கூட ரொம்ப பிரமாதமாக நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள் ஒரு அளவுக்குதான் எண்டர்டெயின்மெண்ட் வேல்யூ ஆனால் காமெடி வேல்யூ வேற லெவல். இருந்தாலும் புது ஜெனெரேஷன்க்கு கொஞ்சமும் பொருத்தி பார்க்க முடியாத ஒரு படம். வடிவேலு அவர்களின் காமெடி ஸ்டைல்க்கு ஒரு லேகஸி ரெஸ்பெக்ட் என்றுதான் இந்த படத்தை சொல்ல முடியும். செலக்ட் பண்ணிய ஆடியன்ஸ்க்கு மட்டும்தான் !  

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...