Thursday, November 2, 2023

CINEMA TALKS - DSP - TAMIL FILM - REVIEW - திரை விமர்சனம் !

 


இந்த படத்துடைய இன்ட்டன்ஷன் மொத்தமாகவே ஒரு நல்ல ஃபேமிலி கமர்ஷியல் படம் கொடுப்பதிலதால் ஃபோகஸ் பண்ணப்பட்டு இருக்கிறது. நம்ம தமிழ் சினிமாவில் ஸ்டோரிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் படங்கள் என்றாலும் கமர்ஷியல்லான நகச்சுவை , கலாய்த்தல் , ஸாங்க்ஸ் , திரைக்கதை மற்றும் கிளைமாக்ஸ்ல ஹீரோ வில்லன் ஃபேஸ் ஆஃப் என்று நிறைய கமர்ஷியல் விஷயங்களை கொடுக்கும்போது படம் இன்னுமே ரசிக்கும்படியாக இருக்கும் அதே நேரத்தில் ஒரு ஸ்டோரி லைன்லை ஒரு பெரிய ஃபீயூச்சர் லெந்த் பிலிம்மாக கொண்டுவரவும் முடியும். இந்த படம் ரொம்பவே நன்றாக இருக்கிறது. ஒரு சில பார்ட்ஸ்களில் வொர்க் அவுட் ஆகிறது. கிளைமாக்ஸ் இன்னுமே கொஞ்சம் நன்றாக வொர்க் பண்ணி இருக்கலாம். எதுக்காக ஹீரோவுடைய ஃப்ரெண்ட்க்கு மட்டும்தான் கடைசியில கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டுவது போல படத்தின் கிளைமாக்ஸ்ஸை முடிக்க முயற்சி பண்ணுகிறார்கள். இல்லை.. கடைசியில் ஹீரோ வில்லன் ஃபேஸ் ஆஃப் என்றால் இந்த மாதிரி ஒரு ரொம்ப பெரிய டர்னின்க் பாயிண்ட் ஹீரோ வில்லன்னுக்கு அவசியம் என்று நினைப்பது தவறு இல்லை. ஆனால் இந்த ஒரு குறிப்பிட்ட கிளைமாக்ஸ் காட்சியில் படத்துக்கு அப்போது வரைக்கும் இருந்த கிரியேட்டிவ்னஸ் இல்லாமல் போகிறது. இந்த படத்தில் கதையை பார்த்துக்கொண்டோம் என்றால் வன்முறையை தேர்ந்தெடுத்து வளரும் அரசியல் புள்ளியாக இருக்கும் ரவியும் அப்பாவின் பூக்கடை மார்க்கெட்டை பார்த்துக்கொண்டு நண்பர்கள், காதல் , குடும்பம் என்று இன்னொரு வாழ்க்கையில் வாழ்ந்துகொண்டு இருக்கும் வாஸ்கோடகாமாவும் (ஹீரோவின் பெயர் இதுதான் ?) தனித்தனி வாழ்க்கையில் இருக்கின்றனர். ஒரு நிலத்தகராறு காரணமாக வில்லன் நமது ஹீரோவின் மாமாவை கொன்றுவிடுகிறார் ஆனால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாத காரணத்தால் வில்லன் தப்பிவிடுகிறார், தங்கையின் திருமணம் அன்று பஸ் ஸ்டாண்ட்டில் நடக்கும் சண்டையில் என்னதான் ஹீரோவை வில்லனால் ஜெயிக்க முடியாமல் போனாலும் வில்லன் அனைவரையும் கொலை மிரட்டல் கொடுத்து ஹீரோவை ஊரை விட்டு துரத்திவிடுகிறார். கொஞ்சம் வருடங்களுக்கு பின்னால் DSP யாக திரும்பவும் ஊருக்கு வரும் ஹீரோ வளர்ந்து எம். எல். ஏ ஆக இருக்கும் வில்லனை எப்படி பழிக்கு பழி வாங்குகிறார் என்றுதான் படத்தின் கதைக்களம் இருக்கிறது. இந்த படத்தில் பாடல் காட்சிகள் பேசிக்காக பொதுவான எல்லா பாடல் காட்சிகளை போலவும்தான் இருக்கிறது. எக்ஸல்லண்ட்டான ஆக்டிங் சாய்ஸ் , பொருத்தமான ரோல்ஸ், இது எல்லாமேதான் பெரும்பாலும் இந்த படத்துக்கு பிளஸ் பாயிண்ட்டாக இருக்கிறது. புகழ் இந்த படத்தின் கெஸ்ட் அப்பியரன்ஸ் மட்டும் கொடுத்து டிஸப்பாயிண்ட்மென்ட் பண்ணாமல் ஹீரோவின் ஃப்ரெண்ட்டாக படத்தில் நல்ல பெர்ஃபார்மன்ஸ் கொடுத்துள்ளார். மெயின் ஹீரோ மற்றும் ஹீரோயின் கூடவுமதான் படத்துக்கு பெரிய சப்போர்ட். ஒரு ஒரு சின்ன சின்ன காட்சியிலும் கூட ரொமான்டிக் படங்களுக்கு உரித்தான கலகலப்பான காட்சிகள் கொடுக்கப்பட்டு உள்ளது. கிளைமாக்ஸ் இன்னும் பெட்டர்ராக வொர்க் பண்ணி இருக்கலாம். இன்னும் இன்னொவேஷன்னாக இருந்து இருக்கலாம் இதுதான் என்னுடைய கருத்து.

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...