வியாழன், 2 நவம்பர், 2023

CINEMA TALKS - THE LEGEND - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!



THE LEGEND - பொதுவாக லேஜெண்ட் படம் ஒரு கமர்ஷியல் பிலிம்மாக எடுக்கபட்டதால் கமர்ஷியல் பிலிம்களுக்கு தேவையான எல்லா விஷயங்களையும் இந்த படம் கொடுத்து இருக்கிறது. 5 பாடல்கள் 3 சண்டைக்காட்சிகள் நிறைய லொகேஷன் சாய்ஸ் , நிறைய காஸ்ட்யூம்ஸ் டிசைன் ஆனால் ஃபார்முலா ரொம்ப தொண்ணூறுகளின் சாயல் இருக்கிறது. ஒரு சில நேரங்களில் 70 களின் சாயல் வரைக்குமே சென்றுவிடுகிறது. ஹீரோ ஹீரோயின் , வில்லன்கள் , காமெடியன்ஸ் , பேக்ரவுண்ட் ஆக்டர்ஸ் , கெஸ்ட் ஆக்டர்ஸ் என்று எல்லோருமே அவங்களால் முடிந்த அளவுக்கு பெஸ்ட்டாக கொடுத்து இருப்பதால் இந்த படம் வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. மற்றபடி பிளாட் மற்றும் ஸ்கிரீன் பிரசன்டேஷன் ரொம்ப ரொம்ப ரொம்ப அவுட் டேட்டட் என்பது ஆடியன்ஸ்ஸாக பார்க்கும்போதே புரிந்துகொள்ள முடியும். ஒரு கான்செப்ட் கொண்டுவரும்போது ரொம்ப கவனமாக கொண்டுவர வேண்டும். உலகம் சுற்றும் வாலிபன் என்று ஒரு எம். ஜி. ஆர் படம். அந்த படத்தில் மின்னல்லுடைய சக்தியை ஒரு சின்ன பொருளுக்குள் அடைத்து அறிவியல் கண்டுபிடிப்பாக சைண்டிஸ்ட் எம்.ஜி.ஆர் வைத்து இருப்பார். இன்னொரு எம்.ஜி.ஆர் சப்போர்டிங் ரோல் பண்ணி இருப்பார். கமர்ஷியல் படம்தான் பெரிய கான்செப்ட்தான் இருந்தாலும் டிஸப்பாயிண்ட்மெண்ட் பண்ணவே இல்லையே ? அந்த படத்துல வொர்க் அவுட் ஆன மேஜிக் இந்த படத்துல எப்படி மிஸ் ஆகியிருக்கும் ? இத்தனை சிரமம் எடுத்து எதுக்காக பேசுகிறேன் என்றால் ப்ரொடக்ஷன் வேல்யூ மற்றும் நடிப்புக்கும் பிலிம் மேக்கிங்க்கும் இந்த படத்துக்குள் கொடுத்து இருக்கும் டேடிகேஷன் ரொம்ப ரொம்ப அதிகம். ஒரு பிலிம் என்றபோது இருக்க வேண்டிய ஸ்டண்டர்ட்ஸ்ஸை கொண்டு வரவேண்டும் என்பதற்காக பிலிம்மையே விட்டுக்கொடுத்த படமாகத்தான் என்னால இந்த படத்தை பார்க்க முடிகிறது. சரவணன் அவருடைய பெஸ்ட் கொடுத்து இருப்பார் மேலும் இந்த படத்தின் அனைவருமே அவர்களுடைய பெஸ்ட்டைத்தான் கொடுத்து இருப்பார்கள். நெகட்டிவ்வாக அல்லது பாசிட்டிவ்வாக பார்க்க முடியாத ஒரு எக்ஸ்பெரிமெண்ட் ஃப்யூச்சர்ராக இந்த படம் இருக்கிறது. 

கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 10

  ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை  கவனித்தத...