செவ்வாய், 21 நவம்பர், 2023

CINEMA TALKS - YAARADI NEE MOHINI - TAMIL REVIEW - திரை விமர்சனம் !


காதலுக்காக குடும்பத்துடைய மதிப்பை விட்டுக்கொடுக்க மனசு இல்லாத ஒரு நல்ல ரோமான்டிக் பிலிம்தான் இந்த படம். இந்த படம். வாசு ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு நல்ல சாஃப்ட்வேர் நிறுவனத்தில் அவர் காதலிக்கும் பெண்ணான கீர்த்தியை இம்ப்ரஸ் பண்ண வேண்டும் என்ற காரணத்துக்காக சேர்கிறார். நிறைய நாட்களுக்கு பின்னால் வேலைக்கு செல்ல முடிவு எடுத்ததால் அவருடைய அப்பா ரொம்பவுமே சந்தோஷம் அடைகிறார். இவர்களுடைய காதல் ஒரு கட்டத்தில் கீர்த்தியால் நிராகரிக்கப்படவும் வாசுவின் அப்பா சமாதானம் அடைய கீர்த்தியிடம் பேசியபோது கீர்த்தி அவமானப்படுத்துகிறாள். அடுத்த நாள் வாசுவின் அப்பா காலமாகிறார். இதனை அடுத்து கீரத்திதான் வாசுவின் நண்பன் சீனுவுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் என்று தெரிந்ததும் காதலை குடும்பத்தின் சந்தோஷததுக்காக விட்டுவிடலாம் என்று முயற்சி பண்ணும் இந்த காதலர்களின் வாழ்க்கையில் என்ன நடந்தது. கொஞ்சம் கொஞ்சம் தமிழ் சினிமா ஆடியன்ஸ் எதிர்பார்ப்புக்கு ஏற்றது போல எமோஷன்ஸ் நிறைந்த இந்த படத்தில் காமெடி , பாடல்கள் , ஆக்ஷன் என்று எல்லாமே கொஞ்சம் கலந்து கொடுத்து இருக்கிறார்கள். கிளைமாக்ஸ்ஸில் தனுஷ் இப்போது நேசிக்கும் புதிய குடும்பத்துக்காக காதலை விட்டுக்கொடுக்க போராடும் காட்சிகளில் ரொம்பவுமே எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கிராமத்து குடும்பமாக இருக்கும் அனைத்து துணை நடிகர்களும் சின்ன சின்ன ரோல்கள் பண்ணி இருந்தாலும் நன்றாகவே பண்ணிக்கொடுத்து இருப்பார்கள். படத்தின் முதல் பாதி எமோஷனல்லான நகர்ப்புற காதல் கதை என்றால் அடுத்த பாகம் ஃபேமிலி செண்டிமெண்ட்ஸ் நிறைந்த ஒரு கிராமத்து கதை. யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை எப்போதுமே நம்மை படத்துக்குள்ளே கொண்டு சென்றுவிடும் இந்த படத்திலும் சின்ன சின்ன காட்சிகளுக்கு கூட பொருத்தமான பின்னணி இசை நன்றாகவே கதையின் களத்துக்கு உதவிகரமான முறையில் இருக்கிறது. ரொமான்ஸ் படங்கள் பிடிக்கும் என்றால் இந்த படத்தை பட்டியலில் சேர்த்துக்கொள்ளுங்கள். 

கருத்துகள் இல்லை:

TAMIL BLOGSPOT POSTS - 2K26 - EPISODE 003 - நம்முடைய உலகம் மாறுகிறது

  நண்பர்களே, இந்த உலகம் இந்த நாட்களில் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. அந்த மாற்றத்தின் வேகத்தை நம்மால் உணர முடிவதில்லை, அவ்வளவுதான். நீங்...