செவ்வாய், 21 நவம்பர், 2023

CINEMA TALKS - PASSENGERS - TAMIL REVIEW - திரை விமர்சனம் !


பூமியை விட்டு வெகுதொலைவில் இருக்கும் ஒரு கிரகத்தில் நிரந்தரமான முறையில் சென்று தங்குவதற்காக ஒரு விண்வெளி பயணம். பல வருடங்கள் ஆனாலும்  இந்த விண்வெளி கப்பலின் நிரந்தர ஆழ்நிலை தூக்கத்தின் மெஷின்னில் இருந்து வெளியே வரவே கூடாது. அப்படி வெளியே வந்தால் மறுபடியும் மெஷின்னுக்குள் உள்ளே போக முடியாது. இப்படி ஒரு தர்மசங்கடமான நிலையில்தான் நம்ம கதாநாயகர் ஜேம்ஸ்ஸின் மெஷின் சேதம் அடையவே உயிரோடு வெளியே வருகிறார் நம்ம ஜேம்ஸ். திரும்பவும் மெஷின்னுக்குள் போக முடியாமல் தனிமையில் எத்தனை நாட்களைத்தான் அந்த யாருமே இல்லாத விண்கலத்தில் வாழ முடியும் ? அவரை தவிர்த்து மீதம் இருக்கும் 5237 பேரும் உறக்கத்தில் இருப்பதால்லும் பணக்காரர்கள் சாப்பிடும் சாப்பாட்டில் இருந்து பயன்படுத்த முடிந்த இடங்கள் வரைக்கும் எல்லவற்றுக்குமே இவர் ஒரு வொர்க்கர் லைசென்ஸ்ஸில் இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டடு இருப்பதாலும் இன்னுமே ரொம்ப சோகமாக மாறிவிடுகிறார். இவர்களுக்கு மத்தியில் உயிரோடு இருப்பதே வேஸ்ட் என்று தற்கொலை பண்ணிக்கொள்ள செல்லும்போது ஒரு யோசனை வந்து ரொம்ப புத்திசாலியான இன்னொரு பெண்ணின் ஆழ்நிலை தூக்கத்தின் மெஷின்னை உடைத்து அந்த பெண்ணையும் எழுப்பிவிடுகிறார். அந்த பெண் மெம்பர்ஷிப் இருக்கும் பயணி என்பதால் விண்கலத்தின் நிறைய இடங்களுக்கும் தரமான சப்பாட்டுக்கும் அக்செஸ் கிடைக்கிறது. ஆனால் வாழ்க்கை இப்படியே சென்றுவிடவில்லை. ஒரு கட்டத்தில் ஆராவுக்கு உண்மைகள் தெரியவரும்போது ஜேம்ஸ்ஸை மொத்தமாக வெறுக்க ஆரம்பிக்கிறார். ஆனால் அடுத்ததாக மெஷின் பழுதால் உறக்கத்தில் இருந்து வெளியே வரும் தலைமை அதிகாரி காஸ் இப்போது அந்த விண்கலமே வெடித்து சிதறும் ஆபத்தில் இருப்பதை கண்டுபிடிக்கிறார். இங்கே உயிரோடு நடமாடும் இந்த மூன்று பேரும் அந்த விண்கலத்தை காப்பாற்றுகிறார்களா என்பதே இந்த படத்தின் கதை. இந்த படத்தை பற்றி கண்டிப்பாக இன்னொரு போஸ்ட் போட வேண்டும். இந்த படத்தை கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பாருங்கள். 

கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 10

  ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை  கவனித்தத...