இந்த உலகத்தில் நடக்கும் எல்லா விஷயங்களிலும் ஒரு மெக்கானிக்கல் பேலன்ஸ் இருக்கிறது ஆனால் அந்த பேலன்ஸ் உடைந்து போனால் என்ன ஆகும் ? அதுதான் கிளைமேட் சேஞ்ச் என்ற இந்த ப்ராப்ளம். இந்த பிரச்சனையை நிரந்தரமான முறையில் சரிபண்ண முடியுமா ? அதுக்கு நிறைய பணம் தேவை , இன்னும் கொஞ்சம் சயின்ஸ் தேவை ! உண்மையை சொல்லப்போனால் இந்த பிரச்சனையை அடிப்படையில் இருந்து சரிபண்ண வேண்டும் என்றால் அதிகமாக முயற்சிகளை பண்ண வேண்டும் , அரசாங்க அமைப்புகளும் தனியார் நிறுவனங்களும் உதவி பண்ணினால் மட்டும்தான் இந்த பிரச்சனையை சரிபண்ண முடியும் , பல வருடங்கள் இந்த பிரச்சனைக்காக தேவைப்படும். இல்லைன்னா பண்ணிய கிளைமேட் சேஞ்ச் நம்ம செய்த செயல்களின் கர்மா (கர்ம பலன்) என்ற அளவில் இன்பினிட்டி என்ற அளவுக்கு பாவக்கணக்கு எழுதிவிடும். நாம் எத்தனை புண்ணியம் பண்ணினாலும் பூமிக்கு நாம் பண்ணிய பாவத்தை நம்மால் மன்னிக்கவே முடியாது. கிளைமேட் சேஞ்ச்சை தடுக்க வேண்டும் என்று ஒரு முயற்சியை எடுத்தால் அதனை இன்னைக்கே எடுக்க வேண்டும், இந்த நொடியே எடுக்க வேண்டும், ஒரு நொடி தாமத்திப்பதும் வேஸ்ட் ஆனது. நான் இந்த வார்த்தைகளை மோட்டிவேஷன்க்காக சொல்லவில்லை. ஒரு செகண்ட் , வெறும் ஒரு செகண்ட்டில் உலக அளவில் குறைந்தது 1000 கிலோ கழிவுகள் மற்றும் குப்பைகள் ஆவது மக்களால் பூமியில் போடப்பட்டு இருக்கும். நாளைய நாள் என்பது ஒரு பொய்யான விஷயம். இன்னைக்கு இருக்கும் நாள்தான் நிரந்தரமானது. அதனால் கிளைமேட் சேஞ்ச்சை பற்றி முடிவு எடுக்க வேண்டும் என்றால் இன்னைக்கே எடுக்க வேண்டும். இங்கே எல்லோருமே கிளைமேட் சேஞ்ச் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் இருக்கிறது என்று நம்பிக்கொண்டு இருக்கிறோம். இன்னமும் கிளைமேட் மாறும் பிரச்சனைகள் எல்லாமே நம்ம கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகத்தான் கற்பனை பண்ணிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் உங்களுக்கு உண்மை தெரியுமா ? வானிலை மாற்றம் இப்போதே அதனுடைய அதிகபட்ச மோசமான நிலையில் உள்ளது. புயலால் வீடுகள் பாதிக்கப்படுகிறது. பருவ மழை இல்லாமல் விவசாயம் மற்றும் தானிய உற்பத்தி குறைகிறது. இப்படி விவசாயமே அடி வாங்கினால் சாப்பாட்டின் தயாரிப்பு விலை ரொம்பவே அதிகமாக மாறிவிடும். பெரிய கம்பெனிகள் இலாபம் அடைந்து நன்றாக இருக்கிறது ஆனால் சின்ன கம்பெனிகள் மற்றும் பொது மக்கள் கடங்களில் விழுந்து நஷ்டம் அடைவார்கள். பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்கள் ஆவார்கள். ஏழைகள் இன்னும் ஏழைகள் ஆவார்கள். வானிலை என்பது ஒரு மிகப்பெரிய நெகட்டிவ் இம்பாக்டை இந்த உலகத்தில் உருவாக்கும் அளவுக்கு சக்திவாய்ந்த ஒரு விஷயம். இருக்கும் உலகத்தையே அழித்துக்கொண்டு இருந்தால் வாழ்க்கையில் சந்தோஷமே இருக்காது. நம்ம எதிர்காலம் அழிவை நோக்கி பயணிக்கிறது. வயதான காலத்தில் சந்தோஷமாக இருந்துவிட முடியுமா ? எல்லோருமே எல்லோர் மேலும் வெறுப்பில் இருப்பார்கள் காரணம் என்னவென்றால் உலகம் மொத்தமும் கடுமையான உணவு பஞ்சம் தண்ணீர் பஞ்சம் வந்துவிடும். உணவும் தண்ணீரும் கொடூரமான விலைக்கு விற்கப்படும். சாப்பாடு இல்லாதவர்கள் எதையுமே சாப்பிட முடியாமல் சாப்பாட்டை கொள்ளை அடிக்கும் நிலைக்கு இந்த உலகம் மாறிவிடும். இந்த நேரத்தில் இந்த டெக்ஸ்ட்டை யாராவது படித்தால் உடனடியாக நடவடிக்கை எடுங்கள். இது ஒரு பெரிய பிரச்சனை !
TAGS : TAM,IL REVIEW , TAMIL ANALYSIS , TAMIL CINEMA , HOLLYWOOD CINEMA TAMIL DUBBED , TAMIL MOVIES , FILM GEEK , TECH , RANDOM TAMIL , GENERAL TAMIL , TAMIL TALKIES , SIMPLE TAMIL , TAMIL BLOG , TAMIL WEBSITE , TAMIL SONGS , VALAIPOO , TAMIL OLD MOVIES , BEST TAMIL , NICE TAMIL , TAMIL SEARCH ENGINE , TAMIL CONTENT , SUPPORT TAMIL , TAMIL VAAZHGA , TAMIL VIBES , TAMILAN VIBES , BEST OF TAMIL SONGS , ISAIMINI , ISAI TAMIL , TAMIL ARTICLE , KATTURAI , VINVELI , ULAGAM , YOSANAIவெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Subscribe to:
Post Comments (Atom)
GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !
ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...
-
ஊதா ஊதா ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் சொல்லடி அவனுக்கு நான் ச...
-
பணமும் நம்பிக்கை துரோகங்களும் - இங்கே மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய பொருட்கள் அவனை எப்போழுதுமே கைவிடுவதில்லை. காரணம் என்னவென்றால் அ...
No comments:
Post a Comment