போன முறை தி மேக்னிஃப்பிஸன்ட் செவன் படத்தை பார்த்தோம் ஆனால் இந்த முறை அந்த படத்துக்கு அப்புடியே நேர் ஆப்போஸிட்டான ஒரு படம் பார்க்கலாமா என்றால் அதுதான் சிக்ஸ் அண்டர்க்ரவுன்ட் . பொதுவாக நெட்ஃப்லிக்ஸ் என்ன பண்ணுவார் என்றால் நம்ம இரும்புத்திரை அர்ஜூன் மாதிரி "என்னால முடியும் ! நான் அதனால பண்ணுவேன் !" என்றுதான் எப்போதுமே காட்டுவார். ஒரு நாட்டில் கெட்டவர்கள் , கொலைக்காரர்கள், கொள்ளைக்காரர்கள் அதிகமாக இருந்தால் அந்த நாட்டின் அரசாங்கம் காப்பாற்றும் என்று விட்டுவிடலாம் ஆனால் அரசாங்கமே தப்பாக இருந்தால் என்ன பண்ணுவது ? அதுதான் இந்த படத்தின் கதைக்களம் , பெயர்களை இல்லாத ஆறு தனிப்பட்ட திறமைமிக்க ஆட்கள் ஒரு பணக்கார ஹீரோவின் பணத்தை வைத்து மாடர்ன் டே சுதந்திர போராட்டம் நடத்தியாவது அந்த நாட்டுக்கு விடுதலை வாங்கி கொடுக்கிறார்கள். இந்த படம் மைக்கேல் பேயின் தயாரிப்பு என்பதால் அதிரடி சரவெடிக்கு பஞ்சமே இல்லாமல் நகர்கிறது. ஃபேமிலியுடன் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் ஒரு சில காட்சிகள் உங்களை அடிவாங்க வைத்துவிடும் என்பதால் தனியாக பார்ப்பது உங்களுடைய ஹெல்த்க்கு நல்லது. சூப்பர்ஹீரோ படங்கள் ஒரு பக்கம் இருக்க சாதாரண மனிதர்கள் ரொம்ப அசாதாரணமான ஸ்டண்ட் ஆக்ஷன் பண்ணும் படங்கள் ரொம்ப குறைவுதான். துல்லியமான வி. எஃப். எக்ஸ் இருப்பதால் ஒரு ப்ரெசெண்ட்டேஷன் பாயிண்ட் ஆஃப் வியூல பார்க்கும்போது ஆடியன்ஸ்க்கு குறையே வைக்காமல் ஆக்ஷன் காட்சிகளை அள்ளி அள்ளி கொடுத்து இருக்கும் இந்த படத்தை கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள் !
No comments:
Post a Comment