Sunday, November 26, 2023

RANDOM TALKS WITH NICE TAMIL BLOG - EPISODE - 005 - TAMIL MAGAZINE




  இந்த உலகமே யாருக்குமே கட்டுப்படாமல் மிகவும் வேகமாக சென்றுக்கொண்டு இருக்கிறது இல்லையா ? இந்த உலகத்தில் காடுகள் மற்றும் மரங்கள் எல்லாமே மிகவும் முக்கியமானது. நம்ம மனித வாழ்க்கைக்கு அவசியமானது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கமால் கொஞ்சம் வெளியே வாருங்கள், இந்த ஏ சி காற்று கொடுக்கும் செயற்கையான குளிரை விடவும் இயற்கையான தூய்மையான மரங்கள் கொடுக்கும் அன்பு நிறைந்த நிழல் வேறு எங்கு கிடைக்கும். ஹோட்டல் சாப்பாட்டுக்கும் வீட்டில் செய்யும் சாப்பாட்டுக்கும் இருக்கும் வித்தியாசம் போலதான் செயற்கையான விஷயங்களில் பணம் இருக்கும் ஆனால் இயற்கையான விஷயங்களில் அன்பு மட்டும்தான் இருக்கும். மாதாந்திர தொகையாக மரம் என்னைக்குமே பணம் வசூல் செய்வது இல்லை, மரங்கள் எல்லாமே இந்த உலகத்துடைய மாயாஜாலம் மட்டுமே. உண்மையான ஒரு க்ரேட் ஆன மாயாஜாலம். என்றைக்கக்காவது மரங்களை பார்த்தால் எல்லா மரத்துக்கும் ஒரு சின்ன தாங்க்ஸ் சொல்லுங்க.. காரணம் என்னவென்றால் இனிமேலும் உங்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு இன்னமும் 200 ஆண்டுகள் கடந்த பின்னால் கிடைக்காமலே போகலாம். மரங்கள் என்னைக்குமே உங்களுடைய நட்பு வட்டாரங்கள் போலதான். உங்களுக்கு எப்போதுமே சப்போர்ட் பண்ணும், இங்கே மரங்களை கடந்து வேறு ஏதேனும் சிறப்பான விஷயங்கள் தரமான விஷயங்கள் உங்களுடைய கண்களுக்கு பட்டால் நிச்சயமாக நீங்கள் கொடுக்க வேண்டிய விலையும் அதிகமாகவே இருக்கும், 


நானும் வாழ்க்கைல நம்ம தமிழ் படம் சிவா சார் மாதிரி ஒரே பாட்டு போட்டு ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்குவேன் அப்படின்னு பார்த்தா முடியலையே ? அப்படின்னு நினைக்கறவங்களுக்கு ஒரு சின்ன நினைவுபடுத்தல்.. லைஃப்ல சக்ஸஸ் இல்லையா ? பிரச்சனையை விடுங்க.. மிஸ்டேக் உங்க மேலையே இல்லை.. அப்புறம் எதுக்கு கவலைப்படனும்.. ஒரு குட்டி கதை.. ஒரு அரசியல் கட்சியில் மிகப்பெரிய தலைவர் ஒரு பள்ளிக்கூடத்துக்கு சுதந்திர தின விழாவுக்காக வருகிறார். பள்ளியில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேடையில் பேசும்போது தலைவர் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒரு பையன் இப்படி கேள்வி கேட்டான் "வணக்கம் சார், நான் இங்கே அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் இருந்து படிக்க வருகிறேன்.. உங்ககிட்ட நான் கேட்கணும் அப்படின்னு நினைக்கற கேள்வி என்னவென்றால் 'நான் வருங்காலத்தில் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தை உருவாக்கி ஒரு சிறந்த மனிதராக இருக்கணும்னு ஆசைப்படுகிறேன்.. அதனால வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும் என்றால் என்ன செய்யனும்.." அப்படின்னு கேட்டான். 

ஒரு அரசியல் தலைவராக எப்போதுமே பிரச்சனைகளை நேருக்கு நேராக சந்தித்து அனுபவம் பெற்று இன்றைக்கு பிரச்சனைகளை கடந்து நல்ல நிலையில் இருக்கும் அரசியல் தலைவர் இவ்வாறாக பதில் சொன்னார்.. "வாழ்க்கையில் வெற்றி அடையனும் என்றால் ஒரு சின்ன விஷயத்தை புரிஞ்சுக்கணும்.. மாணவர்களே. நீங்க புரிஞ்சுக்க வேண்டிய விஷயம் என்னன்னா , இந்த உலகத்தில் வெற்றியும் தோல்வியும் நம்மலே உருவாக்கிக்கொண்ட விஷயங்கள்தான், ஒருவாரால் ஒரு விஷயத்தை சிறப்பாக செய்ய முடிஞ்சா இன்னும் சொல்லப்போனா அவரோடு மற்றவர்களை கம்பேர் செய்யும்போது அதாவது ஒப்பிட்டு பார்க்கும்போது சிறப்பாக செய்து முதன்மையானவர்களா இருந்தாங்கன்னா அவர்களை வெற்றியாளர்கள் என்று சொல்கிறோம், உண்மையில் ஒரு துறையில் சிறப்பாக செயல்படுபவர்களை அந்த துறையில் வெற்றியாளராக அறிமுகப்படுத்துகிறோம், ஆனால் வாழ்க்கையில் முக்கியமானது வெற்றி அடைவதும் முதல் மதிப்பெண் எடுப்பதும் அல்ல, இப்போ யாராவது நமக்கு தெரிஞ்சவங்களை சந்திக்கும்போது முதலில் என்ன கேட்கிறோம் ? நீங்க வெற்றி அடைஞ்சச்சா ? உங்க குடும்பத்தில இருக்கறவங்க எல்லோரும் வெற்றிகரமா தோல்விகளை இல்லாம இருக்காங்களா ? அப்படினா கேட்போம் ? நல்லா இருக்கீங்களா அப்படின்னுதானே கேட்போம், இங்கதான் இருக்கு எதார்த்தமான ஒரு உண்மை, இங்கே உடல் நலமும் மன நலமும் மட்டும்தான் ரொம்பவுமே முக்கியம், அதனால்தான் முடிந்த வரைக்கும் நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் நன்மைகளை செய்யணும், முடிந்தால் கஷ்டப்படும் யாராக இருந்தாலும் அவங்களுக்கும் நன்மைகளை செய்யணும், இந்த உலகம் என்னைக்குமே போட்டியும் பொறாமையும் நிறைஞ்சது, உங்க எதிர்கால வாழ்க்கையில் கஷ்டங்களை சந்திக்கும்போது கிடைக்கும் அனுபவ அறிவு இந்த உலகத்தில் ஜெயிக்க வேண்டும் என்றால் இந்த போட்டி பொறாமை எல்லாம் உள்ள மனிதர்களை கடந்து வந்தால் மட்டும்தான் முடியும் அப்படிங்கற ஒரு உண்மையை உங்களுக்கு புரியவேக்கும், இங்கே மனதை பொறுத்தவரைக்கும் எப்போதுமே நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்கணும், இங்கே எங்கே ஒரு மனிதருக்கு கஷ்டமாக இருந்தாலும் கடைசியில் அந்த கஷ்டத்துக்கு காரணமாக இருப்பது அறியாமே என்ற விஷயம்தான். அதனாலதான் அனைவருக்கும் கல்வி என்பது ரொம்பவுமே அவசியமானது, ஒரு மனிதன் நிஜமாகவே ஜெயிக்க விரும்பினால் சரியான இடத்தில் சரியான நேரத்தில் சரியான செயல்களை செய்தால் மட்டும்தான் முடியும், வெறும் பேச்சு மட்டும் வெற்றிகளை கொடுக்காது, அதனால் வாழ்க்கையில் வெற்றியானது அறிவுப்பூர்வமான முடிவுகளும் அனுபவம் நிறைந்த செயல்களிலும் இருக்கிறது என்பதுதான் நான் இங்கே முன் வைக்கும் கருத்து" என்று சொன்னார். 

இதுதாங்க வாழ்க்கையுடைய எதார்த்தம், இந்த உலகத்தில் தோல்வி அடைஞ்சவங்க எல்லோருக்கும் உடனடியாக வங்கிக்கணக்கில் நிறைய பணத்தை பரிசாக கொடுத்தால் வெற்றியை விட தோல்விக்கு மதிப்பு அதிகமாகும் இல்லையா ? ஆக ஒரு விஷயத்தி வெற்றி அடைவதும் தோல்வி அடைவதும் நாமே உருவாக்கிக்கொண்டு இருக்கும் விஷயங்கள்தான், உண்மையாகவே நமக்கு தேவைப்படுவது நலம் மட்டும்தான், உடல் நலம், மன நலம். சுற்றுச்சூழல் நலம், இந்த விஷயங்கள் எல்லாமே இருந்தால் வாழ்க்கை ரொம்பவுமே சிறப்பாகவும் தரமாகவும் இருக்கும் என்பதுதான் ஒரு சிறந்த கருத்து. 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...