புதன், 22 நவம்பர், 2023

CINEMA TALKS - VALIMAI - TAMIL REVIEW - திரை விமர்சனம் !


கிட்டதட்ட மூன்று வருடத்துக்கு இடைவெளி கொடுத்து வெளிவந்த படம் என்பதால் நிறைய எதிர்பார்ப்புகளோடு வெளிவந்த படம் வலிமை. இந்த படம் ரொம்பவுமே டிஃபரெண்ட்டான படமா என்று கேட்டால் அதுதான் இல்லை. பொதுவான கமர்ஷியல் படங்களின் கதைதான் என்றாலும் சம்பவங்களை எக்ஸ்ஸிக்யூஷன் பண்ணியிருக்கும் விதம் இந்த படத்தில் ரொம்பவுமே அருமையாக இருக்கும். இமாஜின் பண்ணி பாருங்களேன் நம்ம தமிழ் சினிமாவில் ரொம்பவுமே புத்திசாலித்தனமான வில்லனாக ஒரு இளைஞர் பட்டாளத்தையே போதைக்கும் பணத்துக்கும் அடிமைப்படுத்தி நிறைய சம்பாதித்து வெளியே வந்தால் மரணம் என்று பயமுறுத்தி நெட்வொர்க் அமைத்து வைத்து இருக்கும் வில்லன். இங்கே அவனுடைய இந்த ஆபரேஷன்னை கண்டுபிடிக்கவே நிறைய கடினமான விஷயங்களை பண்ணி ஒரு துணிவான காவல்துறை அதிகாரியாக AK ஒரு பாதுகாப்பு அமைப்பை அமைத்து தடுத்து நிறுத்த முயற்சிக்கும்போதுதான் நிலைமையை இன்னும் சிக்கலாக மாற்றுவதற்காக அவருடைய சொந்த தம்பியுமே அந்த கொலைகார அமைப்பில் இருக்கிறார் என்று தெரியவருகிறது. நம்ம தமிழ் சினிமாவில் நிறைய பொடன்ஷியல் கொடுத்த ஸ்மார்ட்டான வில்லன்கள் என்றால் கொஞ்சம்தான். இந்த வகையில் நரேன்னை சேர்த்துக்கொள்ளலாம். நிறைய வருடங்கள் காத்திருந்ததால் தரமான பைக் ஸ்டண்ட் , ஃபைட் காட்சிகள் மற்றும் பைக் சேஸ்ஸிங் காட்சிகள் இடம்பெற்று உள்ளது. ஃபேமிலி சென்டிமெண்ட் படத்துக்கு ரொம்ப ரொம்ப LAG ! பையனுக்காக அம்மா உண்ணாவிரதம் இருப்பதும் குடும்பத்தை ஒன்றாக வைத்து இருக்க படும் பாடுகளும் படத்துக்கு படத்துடைய ஸ்டைல்லிஷ்ஷான க்ரைம் திரில்லிங் டோன்க்கு ரொம்பவுமே சம்மந்தமே இல்லாமல் இருந்தது. இன்னொரு பக்கம் இந்த படத்தில் நடக்கும் சில காட்சிகள் மெட்ரோ படத்தில் ஏற்கனவே பார்த்த காட்சிகள்தான். இந்த போஸ்ட் படிக்கும் நீங்களும் இந்த இரண்டு விஷயங்களை சரியானதாக புரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக ஒரு கமர்ஷியல் படமான வலிமை ஆடியன்ஸ்க்கு ரொம்பவுமே தவிர்க்க முடியாத விழிப்புணர்வு கருத்தை கொடுத்து இருக்கிறது, இந்த படத்துக்கு அடுத்த படம் துணிவு படத்தில் இந்த படத்தில் இருந்த மிஸ்ஸான விஷயங்களை எல்லாமே கொடுத்து சிறப்பாக ஒரு பிரசன்டேஷன் கொடுத்து இருப்பார் இயக்குனர் ஹேச். வினோத். இந்த படத்துடைய கருத்துக்கள் ரொம்ப நேர்மையானது. ஃபேமிலியோடு பார்க்க வேண்டிய படம். பெஸ்ட் !

கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 10

  ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை  கவனித்தத...