சனி, 4 அக்டோபர், 2025

losing money in business tamil

ஒரு வணிகப் பின்னடைவில் எல்லாச் சேமிப்பையும் இழப்பது பிரச்சனைகளில் மிகப்பெரியது, ஆனால் இழப்பின் குறிப்பிட்ட காரணங்களை முறையாகக் கண்டறிவதன் மூலம் மீட்பு தொடங்குகிறது. இவ்வாறு இழந்த பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று புதிதாக அனைத்தையும் தொடங்குங்கள்.

ஒவ்வொரு நாணயத்தின் வெளியேற்றத்தையும் முறையாக தோல்வி மதிப்பாய்வு செய்து, மேலும் வடிகால்களைத் தடுக்க திறமையின்மை அல்லது மோசமான முதலீடுகளின் பகுதிகளைக் குறிக்கவும்.  அடுத்து, அனைத்து அத்தியாவசியமற்றவற்றையும் குறைப்பதன் மூலமும், ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்வதன் மூலமும், புதிய வருவாய் நீரோட்டங்கள் அல்லது ஆராயப்படாத சந்தை வாய்ப்புகளைத் தேடும் போது லாபகரமான செயல்பாடுகளில் மட்டுமே கவனம் செலுத்துவதன் மூலமும் செலவுகளை ஒழுங்குபடுத்துங்கள்.  

உங்கள் நிலைமையை புறநிலையாக மதிப்பிடவும், மறுசீரமைப்பு விருப்பங்களை பரிந்துரைக்கவும் மற்றும் படிப்படியான மீட்சிக்கான தகுந்த உத்திகளை வழங்கக்கூடிய வெளிப்புற நிதி ஆலோசகர்களை ஈடுபடுத்துவதைக் கருத்தில் கொள்ளுங்கள்.  

கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்ளவும் நம்பிக்கையைத் தக்கவைக்க வாடிக்கையாளர்களுடனும் சப்ளையர்களுடனும் தொடர்பை வலுப்படுத்தவும், தொழில்முனைவோரின் அழுத்தங்களைப் புரிந்துகொள்ளும் தொழில்முறை ஆலோசனைகள் அல்லது சக குழுக்களின் மூலம் உங்கள் சொந்த உணர்ச்சி ரீதியான பின்னடைவை ஆதரிக்கும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்முறைகளை ஏற்றுக்கொள்வது.  

இந்த மீட்புப் பயணத்திற்கு பொறுமை மற்றும் இடைவிடாத தழுவல் தேவை—எல்லா கற்றல்களையும் பதிவுசெய்தல், அடையக்கூடிய சிறிய இலக்குகளை நிர்ணயித்தல் மற்றும் உங்கள் முயற்சிகளை மெதுவாக திசைதிருப்ப வேண்டும், எனவே இந்த கடினமான அத்தியாயம் புத்திசாலித்தனமான, மேலும் நெகிழ்ச்சியான எதிர்கால முயற்சிகளுக்கு அடித்தளமாகிறது

GENERAL TALKS - போதுமான பொருளாதாரம் அவசியம்

 



போதுமான பொருளாதாரம் இல்லை என்றால் அந்த பொருளாதாரத்தை வைத்திருக்கும் மக்களுக்கு மற்றவர்களை விட அதிகமான குறைவான அளவில் மரியாதை கொடுக்கப்படுகிறது. 

பணக்கார நாடு பணக்கார மக்கள் ஏழை நாடு ஏழை மக்கள் என்ற பிரிவினையைப் போல பணக்கார மொழி பணக்கார மரியாதை ஏழை மொழி ஏழை மரியாதை என்று இப்படிப்பட்ட பிரிவினையை நாம் எப்போதும் கண்டு கொண்டுதான் இருக்கிறோம். 

இந்த பிரிவினை சமூகத்தில் இருந்து எடுப்பதும் மிகவும் சரியான விஷயம் தான் இந்த பிரிவினையை எடுப்பதன் மூலமாக கலை என்பது அனைவரையும் சேர்ந்த அடையக்கூடிய ஒரு சிறந்த விஷயமாக மாற்ற முடியும். 

ஒரு கலை என்பது எதனால் பெரிய விஷயமாக கருதப்படும் வேண்டும் இதனால் சிறிய விஷயமாக கருதப்பட வேண்டும் என்று சொல்லாமல் சமமாக மதிக்கப்பட வேண்டும். 

திருக்குறள் போன்ற பயனுள்ள கருத்துக்களின் புத்தகம் விற்காத விலைக்கு ஒரு மாடர்ன் ஆர்ட் விற்கப்படுகிறது என்றால் இது நிச்சயமாக பொருளாதாரம் சார்ந்த பிரச்சினை தான் என்பதை நீங்களே கண்கூடாக பார்க்க முடியும்

இதனை நீங்கள் மொழியை சார்ந்த பிரச்சனையாக கருத வேண்டாம் பொருளாதாரம் சார்ந்த பிரச்சனையாக கருதுங்கள் அப்போதுதான் இந்த வகையான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். 

மனிதர்களுக்குள்ளே இருக்கக்கூடிய போட்டி பெரும்பாலும் ஒரு ஓட்டப்பந்தயம் என்றுதான் மற்றவர்களை நினைக்கிறார்கள் ஆனால் மனிதர்கள் குடியிருக்க கூடிய போட்டி இதனை விடவும் ஆழமான ஒரு விஷயம். 

இந்த மனிதருக்குள்ள இருக்கக்கூடிய போட்டி இப்போது எல்லாம் வாழ்க்கை ஒரு போராட்டம் தான் வாழ்வே ஒரு வியாபாரம் தான் என்பது போல மற்றவர்களோடு எந்த வகையிலும் எந்த எல்லைகளையும் கடந்து மோதக்கூடிய பகைமையை தான் உருவாக்கி விடுகிறது. 

உங்களுக்கு பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லையோ உங்களுடைய வீட்டை விட்டு நீங்கள் வெளியே வந்தால் இந்த பகைமையை நீங்கள் கண்டு கொண்டுதான் இருக்கிறீர்கள். இந்தப் பகைமை நிறைந்த மனப்பான்மை மாற வேண்டும் எல்லோருமே ஒருவருக்கொரு ஆதரவாக இருக்க வேண்டுமென்றால் நாம் எல்லோருமே இணைந்த இணைந்த ஒரே ஒரு சமுதாயமாக செயல்பட வேண்டும். 

இத்தனை பிரிவினைகளுக்கு உள்ளே இது போன்ற ஒரு இணைந்த சமுதாயத்தை உருவாக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். இந்த சமுதாயத்தில் அடிப்படைகள் பிரிவினையை வைத்து லாபம் பார்க்கக்கூடிய நிறைய பேர்கள் உருவாகி விட்டனர். 

GENERAL TALKS - தமிழை எப்படியும் பிறமொழிகள் மிஞ்சுகிறது !

 


இன்றைக்கு தேதிக்கு துல்லியமாக ஆங்கிலம் தெரிந்தவர்கள் மிகப் பெரிய நிறுவனங்களில் சிறப்பான வேலைகளில் இருக்கிறார்கள்.  மேலும் இவர்கள் நிறைய சம்பளமும் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த விஷயம் எதனால் தமிழ் மொழிக்கு அதிகாரம் கிடைக்கவில்லை என்பதற்கான காரணத்தை விளக்குகிறது. 

இந்த குழப்பமான எக்கனாமிக்கல் சிஸ்டம் தான் ஆங்கில விஷயங்களுக்கு அதிகமான பணத்தை கொடுக்கும் பணம் சம்பந்தப்பட்ட மொழியாக மாற்றி விடுகிறது ஆனால் தமிழ் என்ற மொழி இப்போது அதிகமாக பணம் சம்பாதிக்க கூடிய மொழியாக இருக்கிறதா என்று கேட்டால் வாய்ப்புகள் குறைவுதான். ஒரு வருடத்திற்கு தமிழ் மொழியில் மட்டும் 260 திரைப்படங்களுக்கு மேல் வருகிறது

இது மிகவும் சராசரியான எண்ணிக்கை தான். இந்த திரைப்படத்தின் பயன்களாக சொல்லப்படக்கூடியது தமிழ் மொழிகளும் தமிழ் கருத்துக்களும் பெரும்பாலும் நிறைய மக்களை சேர்ந்தடைகிறதா ? என்றால் அதுதான் கிடையாது. 

இதுவே ஆங்கிலம் என்ற மொழியை எடுத்துக் கொள்ளுங்கள் என வருடத்துக்கும் மிகவும் குறைவான அளவிலான படங்கள்தான் ஆங்கிலத்தில் வெளி வருகிறது. ஆனால் உலகம் முழுவதும் இந்த படங்கள் மிகச் சிறப்பான வெற்றியை அடைய காரணம் என்னவென்றால் இவர்களிடம் நிறைய பணம் இருக்கிறது 

இவர்களுடைய ப்ரொடக்ஷன் வேல்யூவை நம்முடைய ப்ரொடக்ஷன் வேல்யூவால் கண்டிப்பாக மிஞ்ச இயலவில்லை. இவர்களுடைய இந்த புரொடக்ஷன் வேல்யூவை வைத்துக் கொண்டே இவர்களால் மக்கள் கனவுகளும் எதிர்பாராத காட்சிகளை உருவாக்கப்படுகிறது அதனால் வெற்றியும் அடைய முடிகிறது. 

இதிலிருந்து என்ன புரிகிறது என்றால் ஒரு மொழியுடைய முன்னேற்றம் அந்த மொழியில் எத்தனை விஷயங்கள் உருவாகிறது என்பதை பொறுத்து அல்ல ஆனால் அந்த மொழி பேசுபவர்களிடம் எந்த அளவுக்கு பணவரவு இருக்கிறது என்பதை பொறுத்ததுதான். பொருளாதாரம் என்பது ஒரு மொழியை காப்பாற்றுவதற்கு கூட தேவைப்படுகிறது என்பதை இப்போதுதான் புரிந்து கொள்ள முடிகிறது


STORY TALKS - பகுத்தறிவு மக்களுக்கு தேவைப்படுகிறது !



ஒரு கிராமத்தில் குடிநீருக்காக ஒரே ஒரு கிணறு இருந்தது. ஒரு நாள் நாய் ஒன்று கிணற்றில் விழுந்து இறந்தது. தண்ணீர் அசுத்தமாகவும், குடிக்க முடியாததாகவும் மாறியது. 

இதனால் கவலையடைந்த கிராம மக்கள், அந்த ஞானியிடம் ஆலோசனை கேட்டு சென்றனர். சுத்தமான தண்ணீர் கிணற்றின் மேற்பரப்பிற்கு வரும் வகையில், கிணற்றில் இருந்து நூறு வாளி தண்ணீர் எடுக்கச் சொன்னார். 

கிராம மக்கள் நூறு வாளி தண்ணீர் எடுத்தார்கள் ஆனால் தண்ணீர் நிலை அப்படியே இருந்தது. அவர்கள் மீண்டும் ஞானியிடம் சென்றார்கள். இன்னும் நூறு வாளிகளை வெளியே எடுக்கச் சொன்னார். கிராம மக்களும் அதையே செய்தும் பலனில்லை.

 ஞானியின் அறிவுரையின்படி கிராமவாசிகள் மூன்றாவது முறையாக மற்றொரு நூறு வாளிகளை எடுக்க முயன்றனர், ஆனால் தண்ணீர் இன்னும் அசுத்தமாக இருந்தது. 

ஞானி கேட்டார், ”இவ்வளவு கணிசமான அளவு தண்ணீரை அகற்றி, கிணறு முழுவதும் எப்படி மாசுபட்டது. முந்நூறு வாளி தண்ணீர் எடுப்பதற்கு முன் நாயின் உடலை அகற்றிவிட்டீர்களா?”

கிராம மக்கள், ”இல்லை, நீங்கள் தண்ணீரை வெளியே எடுக்க மட்டுமே அறிவுறுத்தினீர்கள், நாயின் உடலை அல்ல!” என்றார்கள்.

பிரச்சனையின் மூலத்தை புரிந்து உழைத்தால், நம் பிரச்சனைகள் மீண்டும் ஏற்படாது. இதுவே நீங்கள் பிரச்சனையே புரியாமல் வேலையை பார்த்துக்கொண்டு இருந்தால் கஷ்டத்தில் மாட்டிக்கொண்டு விடுவீர்கள். 








 

GENERAL TALKS - மோசமான வாழ்க்கையை தவிர்த்தல் !


இங்கே நிறைய பேருடைய மோசமான வாழ்க்கைக்கு அவர்களுடைய இயலாமை மட்டும் தான் காரணம். உடலும் மனதும் அவர்களுக்கெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது ஆனால் அந்த இயலாமையை அவர்களுக்கு கொடுப்பது எதுவென்றால் மோசமான மக்கள் , மோசமான சூழ்நிலை , ஆதரவற்ற நம்பிக்கையில்லா இது போன்ற வெளிப்புற காரணிகள் மட்டும் தான்.

இந்த விஷயங்கள் இன்னும் பலமாக உள்ளது இந்த விஷயங்களில் இந்த கருத்து உங்களுடைய கருத்துதான் என்னவென்று கேட்டால் உங்களால் போதையாகவா இருக்கட்டும் பொழுதுபோக்காக இருக்கட்டும் சொந்தக்காரர்கள் தான் நண்பர்களால் பிரச்சனை என் கூட இருக்கட்டும் இல்லையென்றால் கடனாக இருக்கட்டும் எப்படிப்பட்ட விஷயமாக கூட இருக்கட்டும் ஆனால் உங்களுடைய எந்த பிரச்சனையுமே ஒரு நாளில் சரி பண்ண முடியாது 

ஒரு மாதத்தில் சரி பண்ணவும் முடியாது இவைகள் எல்லாமே மிகவும் கடினமான விஷயங்கள் தான் சுலபமான விஷயங்கள் கிடையாது என்று புரிந்து கொள்ளுங்கள் பாசிட்டிவிட்டி இருக்கலாம் ஆனால் கண்ணை மறைக்க கூடிய அளவுக்கு பாசிட்டி விட்டீர்கள் என்றால் அது டாக்ஸிக்கான ஆப்டிமிஸம் !

உங்களிடம் ஒரு பிரச்சினை இருந்தால் அந்த பிரச்சனைக்காக ஒரு 10 நிமிடம் 15 நிமிடம் யோசித்துப் பாருங்கள் இந்த யோசித்த இந்த யோசனையில் உங்களுக்கு சிறப்பாக ஒரு ஐடியா தோன்றும் அந்த ஐடியாவை முதலில் நீங்கள் எழுதி வைத்து நடைமுறையில் அப்ளை செய்து பாருங்கள்.  

அந்த ஐடியாவை மேற்கொண்டு மேம்படுத்த முடியும் என்றாலும் கூட அந்த ஐடியாவை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருங்கள் இப்படித்தான் பிரச்சனைகளை நிறுத்தி நிதானமாக கவனித்துக் கையாள வேண்டும். 

ஒரு நொடியில் உங்களுடைய பிரச்சினைகளை சரி செய்து விட்டேன் என்று சொல்லிட்டு நீங்கள் சந்தோஷமாக இருந்தால் நீங்கள் இதுவரை கண்ட தற்காலிகமான தீர்வு தான் நிரந்தரமான தீர்வு அல்ல என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். 

உங்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்றால் தெரிந்துகொள்ள வேண்டியது நீங்கள் பிரச்சனைகளை முழுமையாக சமாளிக்க வேண்டும் என்பதும் பின் நாட்களில் இந்த பிரச்சனைகள் என்னுடைய வாழ்நாளுக்குள் மறுபடியும் வரக்கூடாது என்றால் கொஞ்சம் நீங்கள் மெனக்கெட்டு தான் ஆக வேண்டும் என்பதும் நேரத்தை செலவு பண்ணி தான் ஆக வேண்டும் என்பதும்தான்


இந்த படத்துக்கு கதையில் திரைக்கதில் நல்ல புத்திசாலித்தனம் இருக்கிறது குறிப்பாக ஒரு குறிப்பிட்ட சிட்டுவேஷனை வந்துவிட்டால் அந்த சிட்டுவேஷனை எப்படி சமாளிப்பது என்பதற்காக ஒரு அனுபவம் மிக்க ஒரு அதிகாரியாக இருந்து அந்த இடத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதும் சாமர்த்தியமாக திட்டங்களை நகர்த்துவதும் மிகவும் குறைவான சேதத்தில் நான் இருப்பவர்களை அனைவரையும் காப்பாற்றுவதற்காகவும் இருக்க கூடிய முடிச்சுகள் நன்றாக இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் இருக்கக்கூடிய பிரச்சனை என்னவென்றால் இந்த படம் முழுவதுமே ஒரே குறிப்பிட்ட கதைக்குள்ளே கடினமாக அடைந்து கிடக்கக்கூடிய திரைக்கதையாக இருப்பதால் இந்த படத்தை அவ்வளவாக புதிய விஷயமாக கருத முடியவில்லை 


CINEMA TALKS - 21 BRIDGES - TAMIL REVIEW - திரை விமர்சனம் !




இந்த படத்துக்கு கதையில் திரைக்கதையில் நல்ல புத்திசாலித்தனம் இருக்கிறது குறிப்பாக கடினமான காவல் அதிகாரியாக ஒரு குறிப்பிட்ட சிட்டுவேஷனை வந்துவிட்டால் அந்த சிட்டுவேஷனை எப்படி சமாளிப்பது என்பதற்காக ஒரு அனுபவம் மிக்க ஒரு அதிகாரியாக இருந்து அந்த இடத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதும் சாமர்த்தியமாக திட்டங்களை நகர்த்துவதும் மிகவும் குறைவான சேதத்தில் மக்களாக இருப்பவர்களை அனைவரையும் காப்பாற்றுவதற்காகவும் இருக்க கூடிய நேரங்களில் மிரட்டல் நிறைந்த ஆக்ஷன் காட்சிகள் என்று முடிச்சுகள் நன்றாக இருக்கிறது. 

ஆனால் இந்த படத்தில் இருக்கக்கூடிய பிரச்சனை என்னவென்றால் இந்த படம் முழுவதுமே ஒரே குறிப்பிட்ட கதைக்குள்ளே கடினமாக அடைந்து கிடக்கக்கூடிய திரைக்கதையாக இருப்பதால் இந்த படத்தை ஆரம்பத்தில் அவ்வளவாக புதிய விஷயமாக கருத முடியவில்லை. கதை போகபோகத்தான் இன்வெஸ்டிகேஷன் தகவல்களை அலசி ஆராய்ந்து பார்க்கவே மங்காத்தா படம் போல காவல் துறையே குற்றங்களை அதிக்கப்படுத்த துணைபோன சதிகள் வெளியே வந்து ஒரு ஆக்ஷன் படத்துக்கான அர்த்தத்தை இந்த படம் கொடுத்து இருக்கிறது என்றே சொல்லலாம். 

சண்டைகள் , மோதல்கள், பரபரப்பு என்று ஒரு க்ரைம் இன்வெஸ்டிகேஷன் படத்தை வேற லெவல் ஆக்ஷன் பின்னணிக்குள்ளே எடுத்து இருப்பதால் உங்களுக்கு ஆக்ஷன் படங்கள் பிடிக்கும் என்றால் இந்த படத்தை கண்டிப்பாக உங்களுடைய பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். மறைந்த முன்னாள் நடிகர் சாட்விக் போஸ்மென் தரமான நடிப்பு திறனை வெளிப்படுத்தி ஒரு நல்ல படைப்பை கொடுத்து இருக்கிறார் என்றே சொல்லலாம் !

GENERAL TALKS - மேம்படுமே வாழ்க்கை முறைகள் !

 


சாலையோரங்களில் இது போன்ற ஒரு பொதுநல சுவரொட்டிகளை பார்க்கலாம் "மிதமான வேகம் மிகவுமே நல்லது" என்பது இந்த விஷயம் சாலையில் பயணிப்பதற்கு மட்டும் முக்கியமானது அல்ல நம்முடைய உடலையும் மனதையும் பாதுகாப்பதற்கும் மிகவும் முக்கியமானது

நம்மளுடைய மனதை மிகவும் மெதுவாகவும் வைத்திருக்கக் கூடாது மிகவும் வேகமாகவும் வைத்திருக்கக் கூடாது அடிப்படையில் நாம் செயல்களை தள்ளிப் போட்டால் முன்னேற்றம் வெற்றியும் தள்ளிப் போட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும் அதேபோல அடிப்படையில் நாம் செயல்களை அவசர அவசரமாக செய்து முடித்தால் அந்த செயல்களுடைய நல்ல அனுபவ அறிவை நாம் இழந்து விடுவோம் 

இப்போது நம் உடலை பயன்படுத்துதல் பற்றி யோசிக்கலாமே நம்முடைய உடலுக்கு வேலை கொடுக்காமல் இருந்தால் நம்மளுடைய உடல் வந்து போதுமான கலோரிகளை சேர்த்து வைத்து சேர்த்து வைத்து நம்முடைய உடல் அதே நேரத்தில் நம் கடினமாக வேலை பார்க்க ஆரம்பித்தால் மிகவும் கடினமாக கஷ்டப்பட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்தால் நம்முடைய உடல் தேய்மானம் அடைந்து நம்முடைய உடலில் எலும்புகள் தேய்ந்து போய் நரம்புகள் சோர்வடைந்து பின் நாட்களில் நம்முடைய வேலையின் பலனை நம்மால் அனுபவிக்க முடியாமலே போய்விடும்

நீங்கள் விளையாட்டு கொடுக்கிறீர்களோ அல்லது உடற்பயிற்சி கொடுக்கிறீர்களோ அல்லது உங்களுடைய வேலைகளே கவனம் செலுத்தி வேலைகளை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று ஒரு அமைப்பை உருவாக்கிக் கொள்கிறீர்களோ அது பற்றியெல்லாம் நமக்கு கவலை இல்லை ஆனால் இந்த உடலை நீங்கள் மிகவும் சரியாக பயன்படுத்த எப்போதுமே நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் 

குறிப்பாக பாதுகாப்பு மற்றும் தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ளுங்கள் அது உங்களுக்கு எப்போது வேண்டுமென்றாலும் பிரயோஜனமாக இருக்கும் இங்கே நிறைய பேர் என்ன நினைக்கிறார்கள் என்றால் பிரச்சனைக்கான தீர்வுகளை கண்டுபிடித்து பிரச்சினைகளை நிரந்தரமாக சரி செய்வது என்பது மிகவும் சாதாரணமான விஷயம் என்று நினைக்கிறார்கள். 

இந்த கற்பனையான நம்ப முடியக்கூடிய கருத்துதான் நிறைய பேருடைய வாழ்க்கையை நாசம் பண்ணி கொண்டு இருக்கிறது. இப்போது நிறைய பேருக்கு போதைபழக்கமும் பொழுதுபோக்கு பழக்கமும் இருக்கிறது இந்த இரண்டு பழக்கங்களுமே நம்முடைய நேரத்தையும் பணத்தையும் அதிகமாக விரயம் பண்ணக்கூடிய விஷயங்கள்தான். 

இதோ இப்போதே எந்த நொடியே விட்டு விடுகிறேன் இனிமேல் இந்த விஷயங்கள் என்னை பாதிக்காது என்று சொன்னால் இந்த விஷயங்கள் நம்மை விட்டு செல்ல போகிறதா என்ன ? போதை மற்றும் பொழுதுபோக்கு இந்த இரண்டு விஷயங்களை ஒரு சரியான அறிவியல் ஆராய்ச்சி பண்ணிப் பாருங்களேன் இந்த இரண்டு விஷயங்களும் நம்முடைய மூளைக்குள் நன்றாக பின்னிப்பிணைந்து இருக்கிறது இவைகளை ஒரே நொடியில் விடுவதை என்றால் கடவுளின் அவதாரமாக இருந்தாலும் கூட அவருடைய சக்தியை பயன்படுத்தினால் கூட மிகவும் கடினமான விஷயம் தான். 


GENERAL TALKS - மிகைப்படுத்தப்பட்ட கருத்துக்கள் !

இதுதான் நான் நிதானமாக யோசிக்க வேண்டிய தருணம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டிய காரணம். இந்த உலகத்தை இன்னும் கொஞ்சம் நன்றாக உற்று கவனிப்போமா ? 

நிறைய விஷயங்களை நீங்கள் யோசித்துப் பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் நிறைய மனிதர்களை நீங்கள் சந்தித்து இருப்பீர்கள் இந்த அனைத்து மனிதர்களைப் பற்றியும் நீங்கள் நிதானமாக ஒரு இரண்டு மணி நேரம் யோசித்துப் பாருங்கள் இந்த இரண்டு மணி நேரத்தில் நீங்கள் யோசிக்க வேண்டிய என்ன அலைகள் எப்படி இருக்க வேண்டும் என்றால் எல்லைக் கோடுகளை மீறிய மனிதர்கள் தான் இப்போது நன்றாக இருக்கிறார்கள் ! ஆனால் எல்லை கோட்டுக்குள்ளே தங்களை அடங்கிக்கொண்டு நல்ல பெயர்களை எடுத்தவர்கள் இப்போது எங்கே ? 

இந்த எல்லை கோடுகளை யார் வரைந்தார்களோ அவர்கள் நிச்சயமாக சாமர்த்தியமாக முன்னேறக் கூடிய புத்திசாலியாக இருக்க வேண்டும் இல்லை என்றால் கண்மூடிக்குத்தனமாக நம்பக்கூடிய மூடத்தனம் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும் காரணம் என்னவென்றால் இந்த எல்லை கோடுகளை மீறினால் தான் உங்களுக்கு எல்லாமே கிடைக்கிறது இந்த எல்லைக்கோடுகளுக்குள்ளே இருந்தால் உங்களுக்கு எதுவுமே கிடைக்கப் போவது கிடையாது. 

நீங்கள் சாதாரணமாக வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறீர்கள் திடீரென்று உங்களுக்கு நிறைய பணம் கிடைத்து விடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் இந்த படம் உங்களுக்கு சொந்தமில்லை என்றால் இந்த பணத்துக்கு சொந்தமானவர்களிடம் நீங்கள் முதலாவதாக கொடுக்கலாம் இல்லையென்றால் இரண்டாவதாக இந்த பணத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் ஆனால் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்னும் பட்சத்தில்தான் உங்களுக்கு மிகவுமே சரியான விஷயங்கள் உங்களுக்கு கிடைக்கும். 

இந்த பணத்துடைய தேவை உங்களுக்கு மிகவும் அதிகமாக இருக்கிறது என்றால் உங்களால் மறுபடியும் திரும்ப கொடுக்க முடியும் என்றால் பயன்படுத்திக் கொள்வதில் என்ன தவறு ? இந்த பணத்தை தொலைத்தவருக்கு இந்த பணம் மிகவும் அவசியமில்லை என்றால் இந்த பணத்தை கிடைத்தவருக்கு உங்களுக்கு அவசியம்தானே ? தவறான வழியில் சேர்த்த படம் என்றால் நீங்கள் யோசிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை இருக்காது இந்த ஒரு விஷயத்தை நீங்கள் நன்றாக யோசித்துப் பாருங்கள் எல்லைகளை மீறப் போகிறீர்களா ? இல்லை அடங்கி வாழ போகிறீர்களா ? 

அடக்கம் எந்த அருளையும் யாருக்குமே கொடுப்பதில்லை - அடக்கம் இருந்தவர்கள் எப்போதுமே வென்றதும் இல்லை இப்போது எல்லாம் ஒரு விஷயம் நடக்கப்போகிறது இந்த காலத்தை யாருமே புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் 

எப்போதுமே எனக்கு கடந்த காலத்தில் இருந்தது போல ஒரு சந்தோஷமான வாழ்க்கையை மட்டும் தான் வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள் ஆனால் கடந்த காலம் என்பது எப்போதும் முடிந்து போன விஷயம். கடந்த காலத்தில் இருக்கக்கூடிய தொழில்நுட்பம் எல்லாம் எப்போது காலாவதி ஆகிவிட்டது 

இன்னுமே கடந்த காலத்து பழைய பஞ்சாங்க கருத்துகளை மட்டுமே சொல்லி எத்தனை ஒழுக்கமாக இத்தனை புத்திசாலியாக இதனை நல்ல பெயர்களுடன் வாழ வேண்டும் என்பதை மட்டுமே மிகவும் உறுதியாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் ?

ஆனால் இப்போது எதிர்காலம் மாறிவிட்டது நீங்கள் ஒரு காலத்தில் வாழ்ந்திருப்பீர்கள் அப்போதெல்லாம் உங்களுக்கு தெரிந்த விஷயத்தை நீங்களாக சொன்னால் மட்டும் தான் மற்றவர்களுக்கு தெரியும் ஆனால் இப்போதெல்லாம் எல்லோருக்கும் எல்லா விஷயங்களும் தெரியும் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது எல்லோருமே கையில் இருக்கும் ஒரு குட்டி திரையில் உலகத்தில் அனைத்து விஷயங்களையும் கற்றுக்கொண்டு வெளியே வரும் போதே மாஸ்டராக வருகிறார்கள் 

மேலும் சமுதாயத்தின் இந்த விளையாட்டை சாமர்த்தியமாக விளையாடி இந்த விளையாட்டில் வெற்றியும் அடைந்து கிராண்ட் மாஸ்டராக மாறுகிறார்கள் மக்களைத் தானே ஒரு இயந்திரம் போல மேம்படுத்திக் கொள்கிறார்கள் இதனை அப்டேட் என்கிறார்கள் இல்லையென்றால் அப்கிரேடு என்கிறார்கள் இந்த காலத்தில் பிறந்த கைக்குழந்தை கூட தன்னுடைய உயிரை உள்ளங்கையில் பிடித்துக் கொண்டு போராடித்தான் ஆக வேண்டும் 

அந்த காலத்தில் இப்படிப்பட்ட போராட்டங்கள் இருக்காது அந்த காலத்தில் நீங்களாக போட்டுவிட்ட நிமிடங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதால் அந்த நிபந்தனைகளையும் கட்டுப்பாடையும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் மனதிற்காக நீங்களும் எக்கச்சக்கமான இலக்கியங்களை படைத்து விட்டதை நம்பிக்கொண்டு இருப்பதுதான் உண்மை !





GENERAL TALKS - கவனிக்கத்தக்க பாசிட்டிவ் யோசனைகள்

 



ஒரு நாளில் நமக்கான தேவையான மாற்றங்கள் எதுவுமே அமையவே அமையாது என்பது போன்ற ஒரு கட்டத்தை நாம் வைத்திருந்தால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளையும் நம்மால் சமாளிக்க முடியாது. காரணம் என்னவென்றால் கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சனைகளை சமாளிக்க முடியவில்லை என்ற வருத்தம் நம்முடைய மனதுக்குள்ளே.அதிகமாகி உண்மையான பிரச்சனைகளை விட இந்த வருத்தமே நம்மை அதிகமாக கரைத்துவிடும்.

இதனால்தான் பல புத்தகங்களும் திரைப்படங்களும் நம் மனதில் நேர்மறையான எண்ணங்களை மட்டுமே வைத்திருக்க வேண்டும், அப்போதுதான் மனம் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு முட்டாள்தனமாகச் செயல்பட வேண்டிய நிலையிலும் நம்மைக் காப்பாற்றும் என்ற சரியான கருத்துக்களைத் தெரிவிக்கின்றன.

ஒருவருக்கு சரியான நேர்மறை எண்ணம் இருந்தால், அவருக்கு எல்லாம் சரியாக நடக்கும். இருப்பினும், ஒருவர் உலகை தவறான கண்ணோட்டத்தில் பார்த்துக்கொண்டே இருந்தால், பல நல்ல விஷயங்கள் அவருக்கு நடக்காது, அவர் போய்விடுவார்.

இதனால் தான் நம்முடைய மனதுக்குள்ளே சரியான கருத்துக்களை விதைப்பது என்பது மிகவும் முக்கியமானது. தவறான கருத்துக்கள அல்லது தேவையற்ற தகவல்கள் நம்முடைய மனதுக்குள்ளே நிறைந்து கொண்டே இருந்தால், அந்த தகவல்களை குறித்த ஆராய்ச்சியை நம்முடைய மனது மேற்கொள்ளும் பொழுது இந்த உலகமே ஒரு கடினமான பாதையில் அமைந்துள்ளதாக.நம்முடைய மனதுக்கு தோன்ற ஆரம்பிக்கும்.

இன்னும் நிறைய தகவல்களை பற்றி நம்முடைய வலைப்பூவில் பேசலாம். தொடர்ந்து இணைந்திருங்கள். இது உங்களுக்கான ஒரு தமிழ் இணையதளம்.


இந்த காலத்தில் இப்படி ஒரு முன்னேற்ற யோசனையா ?

 



நிறைய நேரங்களில் நாம் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். கடினமான போராட்டங்களால் மட்டுமே விஷயத்தை சாதிக்க முடியும் என்றலாம். இல்லை. ஏற்கனவே போராடி அவர்களுடைய விஷயங்களை காப்பி எடுத்து கூட நாம் சாதித்து விடலாம் என்று கணக்கு போட முடிகிறது. காரணம் என்னவென்றால் உலகத்தின் அதிகபட்சமான குற்றங்களை கருத்தில் கொள்ளும்போது மற்றவர்களுடைய வெற்றிகரமான செயல்களை அப்படியே நகல் எடுப்பது என்பது ஒரு பெரிய குற்றமாக ஆகாது. இன்னும் சொல்லப்போனால் நமக்கான சாப்பாடு என்ற வகையில் ஒரு விஷயத்தை செய்யப் போகிறோம் என்றால் ஒரு விஷயம் நமக்கான சாப்பாட்டை உறுதிப்படுத்த போகிறது என்றால்.அந்த விஷயத்துக்காக நாம் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்றுதான் என்ற உலகத்தின் அதிகபட்சமான வறுமையும், பஞ்சமும் நமக்கு சொல்லிக் கொடுத்து இருக்கிறது. அதனால்தான் சரித்திரத்தை ஒரு நிமிஷம் எடுத்து பார்த்தபோது நகலெடுத்தவர்கள் எழுதியவர்களை விட அதிக மதிப்பெண்கள் பெற்றனர் என்ற கலகலப்பான நடைமுறையை நம்மால் பார்க்க முடிகிறது, இந்த யோசனை துடிப்பானது.



இது இந்த உலகில் பல நிறுவனங்களுக்கு நடக்கும் ஒன்று. தொலைக்காட்சி மற்றும் வானொலி முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டபோது, ​​மக்கள் அதை விளம்பரங்களாகவும் பணமாகவும் மாற்றினர். அவர்கள் நிறைய பணம் சம்பாதிக்க முடியும் என்று சொன்னார்கள். அவர்கள் தங்களுக்காக ஒரு நிறுவனத்தை உருவாக்கி, இருந்தவற்றை நகலெடுத்து மீண்டும் மேம்படுத்தினர், இன்று தொலைக்காட்சி நிறுவனங்கள் மிகப்பெரிய சேனல் நிறுவனங்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களாக இருப்பதைக் காணலாம். ஒரு சில நேரங்களில் இந்த மாதிரியான நகலெடுத்த செய்வது என்பது தவிர்க்க முடியாது. குறிப்பாக இசை என்ற வகையில் ஒருவர் ஒரு குறிப்பிட்ட இசை அமைத்து விட்டார் என்றால் அந்த இசையோடு காப்பி எடுத்து சொல்ல முடியாது. ஒரு ஒப்பீடு இருக்கக் கூடாது என்பதற்காக முற்றிலும் புதிதாக ஒரு விசையை கொண்டு வர இயலாது. ஒரு இசை அந்த இசையை கம்போஸ்.பண்ணிவர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்றும் மற்றவர்களுக்கு சொந்தமானது இல்லை என்றும் சொல்லப்போனால் ஒரு அருமையான பாடல் ஒரு அருமையான ஸ்டைல் ஒரு குறிப்பிட்ட தனி மனித சொத்தாக போய்விடும் அது மற்றவர்களுக்கும் கிடைத்தால் தான் மிக துல்லியமான அளவில் புது புதிய இசைகளை அவர்களால் உருவாக்க முடியும்

GENERAL TALKS - வேலை பார்க்கும் இடத்தை தேர்ந்தெடுப்பது !

 



நம் வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும், மாயாஜாலம் நடக்கும் என்று நம்புவதை நாம் ஒருபோதும் நிறுத்துவதில்லை. இந்த மாயாஜாலத்தை நாமே உருவாக்க முயற்சித்திருக்கலாம். இருப்பினும், தானாகவே நடக்கும் மாயாஜாலம் அந்த முயற்சிகளை விட அற்புதமானது. ஒரு நாட்டைக் காக்கும் ராணுவத்தை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் நாட்டின் நலனுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள். 

நம்முடைய வாழ்க்கையிலும் மாயாஜாலத்தை நடக்க வேண்டுமென்றால் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் அர்ப்பணிப்பு அதாவது நம்முடைய செயல்களில் எல்லா வகையிலும் செயல்கள் சரியான 100 சதவீதத்தை அடைந்து சரியான பிரதிபலனை நமக்கு கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். 

நம்முடைய கடினமான வேலைக்கும் அந்த வேலைக்கான சம்பளம் கிடைத்து விடும் என்பதை மிக அதிகமாக உறுதிப்படுத்திய அளவுக்கு ஒரு மனிதனும் வேலை செய்தால் அவனுடைய வாழ்க்கையை அந்த மாதத்துக்கு மிகவும் சரியாக அவனால் நகர்த்த முடியும். 

இதுபோன்ற ஒரு.உறுதியான அமைப்பை கொண்ட வேலைகளே நாம் அதிக காலங்களுக்கு நின்று வேலை பார்க்கலாம் என்றும் அளவுக்கு ஒரு சரியான வாய்ப்பாக அமையும். எப்பொழுது வேண்டுமென்றாலும் ஒரு நிறுவனம் நம்மை வேலையை விட்டு எடுத்துவிடலாம் என்ற வகையில் ஒரு வேலையை செலக்ட் செய்து.அந்த வேலைக்காக இரவு பகலாக உழைத்து சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்தால் அதனை நிலையற்ற தன்மையே உங்களை ஒரு நாள் பாதித்துவிடும்.

மேம்பட வேண்டும் வாழ்க்கை முறைகள் ! - #2


ஒருவர் பணத்தைக் கையாளும்போது, ​​அவர் மூன்று விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்: வருமானம், செலவு மற்றும் சேமிப்பு. சிலருக்கு வருமானம் பூஜ்ஜியமாக இருக்கும். மற்றவர்களுக்கு செலவு பூஜ்ஜியமாக இருக்கும். வருமானம் மற்றும் செலவு இல்லாத நேரங்களில் சேமிப்பு என்பது இல்லாமல் போய்விடும்.

உலகெங்கிலும் நடத்தப்படும் பல பள்ளிகளில், பள்ளி மாணவர்களுக்கு சிறு வயதிலிருந்தே தொழிற்கல்வி கற்பிக்கப்படுகிறது. ஒரு பொருளை எவ்வாறு உருவாக்குவது, அதை விற்பது மற்றும் அதன் மூலம் கணிசமான பணம் சம்பாதிப்பது, மற்ற நாட்களில் அந்தப் பணத்தை எவ்வாறு கையாள்வது என்பதை மாணவர்களுக்குக் கற்பிப்பதில் இந்தத் தொழிற்கல்வி ஒரு அடிப்படைப் பகுதியாகும், மேலும் இது முறையான கணக்கியலை அடிப்படையாகக் கொண்டது.

இன்றைய காலகட்டத்தில், துன்பப்படும் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற லட்சியத்துடன் வளர்ந்த இளைஞர்கள் ஒரு கட்டத்தில் துன்பப்படும் அந்த மக்களே நாம்தான் என்ற நிலையை புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளனர். இதை அவர்கள் தங்கள் போட்டிகளிலும் வெளிப்படுத்தியுள்ளனர்.

லைஃப் ஸ்டைல் என்பது வெறும் பணக்காரர்களுக்கு மட்டுமே சொந்தமான விஷயம் அல்ல. உதாரணத்துக்கு நடனம் தெரிந்தவர்களுக்கு அந்த நடனத்தில் தன்னுடைய ஸ்டைல் என்பதை கவனித்து வைத்து இருப்பார்கள். அதேபோல ஓவியம் தெரிந்தவர்களுக்கு அந்த ஓவியத்தில் தன்னுடைய ஸ்டைல் எது என்பதையும் கவனித்து வைத்திருப்பார்கள்.ஆனால் வாழ்க்கை என்பது இல்லருக்கும் பொதுவானது என்பதால் வாழ்க்கைக்கான லைஃப் ஸ்டைல் என்ற விஷயத்தை அனைவருமே நன்றாக கற்றுக் கொள்ள வேண்டும்.



 

மேம்பட வேண்டும் வாழ்க்கை முறைகள் ! - #1

 


பெரும்பாலான நேரங்களில், நாம் கடனில் சிக்கும்போது, ​​கடனின் தாக்கம் மிகவும் அதிகமாகி, வாழ்க்கையில் எதையும் அனுபவிக்க முடியாமல் போகும். கடன்களுக்குள்ளே கடினமான வகையில் சிக்கித் தவிக்கும் போது மட்டும் தான் இந்த தவிப்புகள் நம்முடைய கண்களுக்கு தெரியுமே தவிர்த்து.சரசரியாக வாழ்க்கையில் இந்த வகையான விஷயங்கள் நம்முடைய கண்களுக்கு தெரியாது. கடன்கள் இருக்கும்போது, ​​நம் வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுகிறது. நிம்மதியாக ஒரு படம் கூட பார்க்க முடியவில்லை. இந்த 3 மணி நேர இடைவெளி கூட கடனை எப்படி அடைப்பது? எப்படி அந்தக் கடன்களை எப்படி அடைப்பது ? என்பது நம் மனதில் திரும்ப திரும்ப எழும் கேள்வி நம்மை நிம்மதியற்ற மனிதனாக மாற்றிவிடுகிறது.


அப்படியிருந்தும், இவை ஒரு வகையில் நமக்கு நல்லதுதான். நம் வாழ்வில் இதுபோன்ற கஷ்டங்களைக் கண்டால் மட்டுமே வாழ்க்கையின் தன்மையைப் புரிந்துகொள்ள முடியும். வாழ்க்கை அனைவருக்கும் பொதுவானது அல்ல, வாழ்க்கையில் நாம் ஏதோ ஒரு வகையில் துன்பப்பட வேண்டும். கடனை அடைப்பதில் நமது வாழ்க்கை முறையை மாற்றுவது மிக முக்கியமான பகுதியாகும். கடனுக்கு முன்பு இருந்ததைப் போலவே நமது வாழ்க்கை முறைகளும் எப்போதும் இருந்தால், கடன் தொடர்ந்து அதிகரிக்கும். அதனால்தான் கடனை அடைப்பதற்கான சரியான தீர்வு, நமது வாழ்க்கை முறைகளில் தேவைப்படக்கூடிய மாற்றங்களை ஆராய்ந்து, நிஜ வாழ்க்கையில் அத்தகைய மாற்றங்களைச் செயல்படுத்துவதாகும்.

CINEMA TALKS - ETHTHAN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !



சமீபத்தில் விமல் நடித்த 'எத்தன்' படத்தைப் பார்த்தேன். குறைந்த பட்ஜெட் படமாக இருந்தாலும், மிக உயர்ந்த தரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. கதையைப் பொறுத்தவரை, இது ஒரு சராசரி குடும்ப உறவுகளில் வளரும் இளைஞர் பற்றிய ஒரு சாதாரண கதை. 

படிப்பு முடித்த நம் கதாநாயகன், ஒரு தொழிலைத் தொடங்க முயற்சித்து கடன் வாங்குகிறார், ஆனால் அந்தத் தொழில்கள் அவரது நண்பர்கள் காரணமாக தோல்வியடைகின்றன, மேலும் அவர் தனது முதலீட்டை இழந்து கடன்களுக்காக சிரமப்படுகிறார். 

அவ்வப்போது சில மோசடி வேலைகளையும் செய்கிறார். இந்த வழியில், கதாநாயகிக்கு நடந்த சில சிறிய மோசடி சம்பவங்கள் காரணமாக அவள் சிக்கலில் இருக்கும்போது அவளுக்கு உதவ வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். சூழ்நிலைகளால் வில்லன்களை எதிர்த்து போராடவும் கட்டாயப்படுத்தப்படுகிறார்.

வில்லனால் நிச்சயிக்கப்பட்ட கட்டாய திருமணத்திலிருந்து கதாநாயகியை நம் ஹீரோ காப்பாற்றுகிறார், இதனால் வில்லனின் ஆட்களால் தூரத்தப்படும் இருவரும் தங்களை காப்பாற்றிக்கொள்கிறார்களா என்பதே இந்த படத்தின் கதை ! 

படத்தின் நகைச்சுவை காட்சிகள் கதைக்கு சரியாக பொருந்துவதால், கதை வேகமாக நகர்கிறது. மேலும், ஒரு சராசரி புறநகர்ப் பகுதியின் கடைகளில் சிக்கித் தவிக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையை விமல் சிறப்பாக சித்தரித்துள்ளார். நெருங்கிய நண்பர்களாக வரும் கதாநாயகி மற்றும் துணை கதாபாத்திரங்களும் இந்தப் படத்தில் ஒரு சஸ்பென்ஸ் சூழலை உருவாக்க உதவியுள்ளன.

「 ✦ ​🇬​​🇪​​🇳​​🇪​​🇷​​🇦​​🇱​ ​🇹​​🇦​​🇱​​🇰​​🇸​ ✦ 」- #21

 


சமீபத்தில் நான் ஒரு சிமென்ட் நிறுவனத்தின் விளம்பரத்தை பார்க்க நேர்ந்தது. அந்த சிமென்ட் நிறுவனத்தின் விளம்பரத்தில் என்ன நடக்கிறதென்றால் கட்டிட வேலையில் பணிபுரியும் பெண்மணிகள் காரணமே இல்லாமல் அந்த நிறுவனத்தின் மேஸ்திரியை கன்னத்தில் அறைகிறார்கள்.

இன்ஜினியர் இந்த அதிர்ச்சியான சம்பவத்தை கண்டு வியக்கிறார் இந்த விஷயத்தை எதனால் நடக் கிறது என்று ஆராய்ந்து பார்த்தால் தண்ணீரை, பாலைவனம் போன்ற பகுதியில் இருந்து வெகு தொலைவில் கஷ்டப்பட்டு கொண்டு வரும் அந்த பெண்மணிகள் அந்த கட்டிடம் சிமென்ட்க்கு தண்ணீர் விடக்கூடிய அவசியமற்ற ஒரு வகை சிறப்பு சிமென்ட்டால் சிறப்பு கான்கிரீட்டால் கட்டிய கட்டிடமாக இருக்கிறது. 

இந்த வகை சிறப்பு சிமென்ட் உருவாக்குவது இந்த நிறுவனம்தான் விளம்பரத்தை கொடுக்கும் இந்த நிறுவனம் தான் இந்த விளம்பரத்தின் மூலமாக தங்களுடைய சிமென்ட்க்கு தண்ணீர் தேவைப்படாது என்று சொல்ல வேண்டியதுதான் இவ்வாறு சொல்லி இருக்கிறார்களாம்.

ஆகவே தேவையில்லாமல் தண்ணீரை கொட்டிய அந்த மேஸ்திரியை தான் அந்த பெண்கள் நடித்திருக்கிறார்களாம் கன்னத்தில் அறைந்து அறைந்துவிடுகிறார்களாம். தண்ணீரின் மதிப்பையும், அதைப் பெறுவதற்கு ஏற்பட்ட கஷ்டங்களையும் உணராமல் வீணடித்ததால் அந்தப் பெண்கள் கோபமடைந்து, அவரை கன்னத்தில் அறைந்தனர். இதனைத் தான் இந்த விளம்பரம் சொல்லுகிறது.

தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று கூறும் ஒரு சமூகச் செய்தி என்று வைத்துக் கொண்டு, நம்முடைய சொந்தக் கதையைச் சொல்லும் இந்த சிமென்ட் நிறுவனத்தின் விளம்பரத்தைப் பார்த்திருக்கிறீர்களா?

「 ✦ ​🇬​​🇪​​🇳​​🇪​​🇷​​🇦​​🇱​ ​🇹​​🇦​​🇱​​🇰​​🇸​ ✦ 」- #20

 



வாழ்க்கையின் இயந்திரத்தனமான தன்மை எனக்குள் நிறைய கேள்விகளைக் கேட்கிறது. நான் சுதந்திரமாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்று நினைத்து தவறான முடிவுகளை எடுத்தேனா? வாழ்க்கை மிகவும் நம்பிக்கையூட்டுவதாகத் தெரிகிறது. இவ்வளவு நம்பிக்கை கொடுக்கப்பட்டு இறந்த காலத்தில் படங்கள் இப்போது நம் கண்களுக்கு முன்பாக விரிகின்றன. இவை அனைத்துமே மனதுக்குள்ளே மிகப்பெரிய மனச்சோர்வை கொண்டு வந்துள்ளது. நாம் எவ்வளவுதான் போராடினாலும் இந்த விளையாட்டை நம்மள ஜெயிக்கவே முடியாது. காரணம் என்னவென்றால் இந்த விளையாட்டு நாம் அவர்களுக்கு அடிமையாகிவிட வேண்டியதற்காக தான் இந்த விஷயத்தில் சுதந்திரத்தை அடைவது என்பது யோசிக்காமல் வெகுவான புரட்சிகரமான மனநிலையை மட்டுமே கொண்டு அதை அடைந்துவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு சாத்தியமானது அல்ல. உண்மையில் என்ன வென்றால் எவ்வளவுதான் நாம் கஷ்டப்பட்டாலும் அதிர்ஷ்டம் இல்லாவிட்டால் நமக்கு எதுவுமே கிடைக்காது. அதிர்ஷ்டம் இருந்தால் தான் நமக்கான எல்லாமே கிடைக்கும். மனிதர்கள் அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை நம்புங்கள் என்று சொல்லுவதெல்லாம் சமூகத்தின் பெரிய மனிதர்களிடம் இருந்து சொல்லப்படும் கட்டுக்கதையாகத்தான் இப்பொழுதெல்லாம் தோன்றுகிறது. கருத்துக்களைக் கைவிட்டு செயல்படத் தொடங்குவதன் மூலம் மட்டுமே, வரும் நாட்களில் நாம் இதுவரை கண்ட இழப்புகளைக் கட்டமைத்து சரிசெய்ய முடியும், மேலும் வரும் நாட்களில் புதிய வருமானத்தை உருவாக்க முடியும்.


「 ✦ ​🇬​​🇪​​🇳​​🇪​​🇷​​🇦​​🇱​ ​🇹​​🇦​​🇱​​🇰​​🇸​ ✦ 」- #19

 


நிலைமைகள் நம்முடைய கட்டுப்பாடுகளை மீறி சென்றுவிட்டது. வாழ்க்கை நிறைய விஷயங்களை கற்றுக்கொடுக்கும் அந்த வகையில் ஒரு முக்கியமான விஷயம்தான் அதிர்ஷ்டம் நம்மோடு இருக்கவேண்டும் என்பதாகும், நாமும் எவ்வளவோ போராடலாம் ஆனால் அதிர்ஷ்டம் இல்லை என்றால் இந்த உலகத்தில் எதுவுமே நமக்கு கிடைக்காது. நம்முடைய போராட்டங்கள் கடலில் கலக்கும் நதியை போல பயனற்ற விஷயமாக மாறிவிடும், பெரும்பாலான நேரங்களில் அதிர்ஷ்டம் என்பது நல்ல வழியை அல்லது கெட்ட வழியை தேர்ந்தெடுப்பது குறித்த ஒரு செயல்பாடாக இருக்காது. உண்மையில் அதிர்ஷ்டம் என்பது யார் எந்த வழியை தேர்ந்தெடுத்தாலும் சப்கான்ஸியஸ மனதுக்குள்ளே நின்றுகொண்டு இருக்கும் ஒரு விஷயமாக மட்டுமே அமைகிறது. எப்படி சப்கான்ஸியஸான மனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளில் இருக்கும் நேர்மை அல்லது நியாயத்தை கணக்கில் எடுக்காமல் நல்ல செயல்களாக இல்லாமல் கெட்ட செயல்களாக இல்லாமல் இரண்டுக்குமே இடைப்பட்ட விஷயமாக இருக்கிறதோ அதுபோலவே சப்கான்ஸியஸ மனது போல அதிர்ஷடமும் இந்த காலத்து கொடியொருக்கு சாதகமாக அமைகிறது. நல்லோரை நாசமாக மாற்றுவதுக்கு அதிர்ஷ்டம் முக்கியமான பங்கு வகிக்கிறது. எல்லாமே நம்முடைய கைகளை மீறி சென்றுவிடுகிறது. யாருமே நம்மை கண்டுகொள்வது இல்லை. இந்த விஷயங்களுக்கு பிரபஞ்ச சக்தியாளர்களே காரணமாக அமைக்கிறார்கள் என்பது வருத்தமான நடைமுறை உண்மை. வலியும் வேதனையும் நிறைந்த உலகத்தில் பிரபஞ்ச சக்தியாளர்கள் சந்தோஷத்தை எதிர்பார்த்தே எல்லா விஷயங்களையும் செய்கிறார்களா ? நடப்பவை அனைத்துமே தப்பான திசையில் சென்றுக்கொண்டு இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. சக்திகள் குறைக்கப்பட்டு ஒரு மனிதன் இருக்கும்போது அவன் சந்திக்கும் போராட்டங்கள்தான் உண்மையில் பயங்கரமானது, ஒரு கட்டுமஸ்தான மனிதர் 15 கிலோ மூட்டைகளை நகர்த்துவதுக்கும் ஒரு மெலிந்த மனிதர் 10 கிலோவை நகர்த்தி செல்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. வலிமை உடலிலும் உள்ளத்திலும் இருக்க வேண்டும். இப்போது உலகம் சந்திக்கும் விஷயங்கள் அனைத்துமே கடினமான நேரங்கள் என்றே சொல்லலாம். இந்த கடினமான நேரங்களில் சரியான செயல்களை செய்வது இன்னமும் கடினமானது. 

MUSIC TALKS - MAALAI MANGUM NERAM - ORU MOGAM KANNIN ORAM - UNNAI PAARTHUKONDE NINDRALUM - PODHUM ENDRU THONDRUM - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன ? வெயில் எட்டி பார்த்தால் என்ன ?
கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்

பூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம் நேரம்
தீயாய் மாறும் தேகம் தேகம்
உன் கைகள் என்னை தொட்டு கோலம் போடும்
வாழ்வின் எல்லை தேடும் தேடும்

ஒரு வீட்டில் நாம் இருந்து ஓர் இலையில் நம் விருந்து
இரு தூக்கம் ஒரு கனவில் மூழ்கி வாழ்க்கை தொடங்கும்
நான் சமையல் செய்திடுவேன் நீ வந்து அணைத்திடுவாய்
என் பசியும் உன் பசியும் சேர்ந்தே ஒன்றாய் அடங்கும்

நான் கேட்டு ஆசைபட்ட பாடல் நூறு
நீயும் நானும் சேர்ந்தே கேட்போம்
தாலாட்டை கண்ணில் சொன்ன ஆணும் நீ தான்
காலம் நேரம் தாண்டி வாழ்வோம்

பால் சிந்தும் பௌர்ணமியில் நாம் நனைவோம் பனி இரவில்
நம் மூச்சுக் காய்ச்சலில் இந்த பனியும் நடுங்கும்
வீடெங்கும் உன் பொருட்கள் அசைந்தாடும் உன் உடைகள்
தனியாக நான் இல்லை என்றே சொல்லி சினுங்கும்
தீண்டாமல் தீண்டி போகும் வாடை காற்றே
தூக்கம் தீர்ந்து நாட்கள் ஆச்சு

உன் வாசம் என்னில் பட்டும் வாடி போனேன்
வாசல் தூணாய் நானும் ஆனேன்

generation not loving music