Thursday, November 30, 2023

GENERAL TALKS - யோசிக்கணும் , எல்லமே யோசிக்கணும் - THINK FIRST ! PLAN EVERYTHING !

 உங்களிடம் ஒரு இன்பினிட்டி அளவுக்கு பணம் இருந்தால் என்ன பண்ணுவதாக உங்களுக்கு திட்டம் இருக்கிறது ? குறிப்பாக இப்படி ஒரு நடக்காத சூழ்நிலையையும் நடந்ததாக நினைத்து அஸம்ஷன் பண்ணிவிட்டு அடுத்து என்ன பண்ணவேண்டும் என்று முடிவு எடுப்பதும் ஒரு வகையில் விஷுவல்லைஷேஸன் தான். இது இந்த விஷயத்தில் மட்டும்தான் என்று இல்லை. மெட்டமார்ஃபேஸிஸ் போல ஒரு நாள் உங்கள் வீட்டில் இருப்பவர்கள் உங்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பினால் என்ன பண்ணுவீர்கள் ? அடிப்படையில் நன்றாக யோசித்து அடுத்து அடுத்த வேலையை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்படி யோசிக்காமல் போனால் எதிரப்பாராமல் நிறைய தப்புகள் நடந்துவிடும். இங்கே யாருமே நிபந்தனைகள் அற்ற உண்மையான அன்பை கொடுப்பது இல்லை. அப்படி இருக்கும்போது இன்னைக்கு உங்களுடைய நாள் எப்படி இருக்கிறதோ அதே போலத்தான் நாளைக்குமே இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒரு எடுத்துக்காட்டாக சொல்லவேண்டும் என்றால் மெடிக்கல் செலவுகளை எடுத்துக்கொள்ளலாம். உங்களுடைய மற்றும் உங்களை சார்ந்தவர்களின் மருத்துவ செலவுகளுக்கு எப்போதுமே உங்களுடைய சம்பாதியத்தில் இருந்து கொடுத்து உதவினால்தான் நன்றாக இருக்கும். இந்த உதவியை உங்களால் செய்ய முடியவில்லை என்றால் உங்களின் சொந்த இல்லத்தில் கூட உங்களுக்கு மதிப்பு இருக்காது. இப்படி எல்லா வகையான அன்பும் பொருட்களின் அடிப்படையில் மட்டுமே சென்றுக்கொண்டு இருந்தால் எப்படித்தான் ஒரு அன்பை எப்போதுமே எதையுமே எதிர்பார்க்காமல் ஒரு கொடுக்கல் வாங்கல் இல்லாமல் இருக்கும் நிபந்தனைகள் இல்லாத அன்பு என்று சொல்ல முடியும். இந்த மாதிரி விஷயங்களில்தான் அஸம்ஷன்கள் கைகளை கொடுக்கிறது. நம்மிடம் சரியான அஸம்ஷன் இருக்கும்பட்சத்தில் நம்முடைய மூளை நடக்கப்போகும் சம்பவங்களுக்கு தயாரானதாக இருக்கும். இங்கே நான் மனது அளவில் கூட யாருக்கும் கெடுதல் நினைப்பது இல்லை என்று சொல்பவர்கள் அடிப்படையில் விஷுவல்லாக நடக்கப்போகும் சம்பவம் எந்த எந்த வகையில் முடிவுகளை கொடுக்கும் என்று யோசிக்கவும் வேண்டுமென்றே மறுத்துவிடுகிறார்கள். வாழ்க்கையின் முக்கியமான ஒரு திறனை பயன்படுத்தாமல் விட்டுவிடுகிறார்கள். உண்மையான வாழ்க்கையில் ஒரு செயல் நடக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்களேன் , இல்லையென்றால் நடக்கப்போகிறது என்று வைத்துக்கொள்ளுங்களேன் நம்முடைய அறிவை பயன்படுத்தி எவ்வளவு நுணுக்கமாக உடைத்து ஆராய்ச்சி பண்ண முடியுமோ அந்த அளவுக்கு நிறைய ஆராய்ச்சி பண்ண வேண்டும் , அடுத்து இந்த செயல்தான் நடக்கும் என்று கணிப்பு பண்ண வேண்டும்! இயந்திரங்களுக்கு அறிவை கொடுத்து உயிர் இருக்கும் ஜீவன்களாக நடமாடவிட்டால் என்ன நடக்கும் என்பதை ஆராய்ச்சி பண்ணிக்கொண்டு இருக்கும் இந்த காலங்களில் யோசிக்கும் திறன் கூட இல்லாமல் இந்த நாளை போலவே அடுத்த நாளும் போகவேண்டும் என்று யோசிப்பவர்கள் நலமாக வாழவே முடியாது, தொடர்ந்து எல்லைகள் இல்லாமல் முன்னேறிக்கொண்டு இருக்க வேண்டும் !

1 comment:

Anonymous said...

https://www.imusti.com/ india - visit this website for music , cds and more !

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...