வெள்ளி, 2 ஜனவரி, 2026

DREAMTALKS - EPISODE - 11 - அனுபவங்களில் தவறுகளும் இருக்கிறது.

 


எப்போதுமே நம்முடைய பொருளாதார சூழ்நிலை குறைவாக இருக்கும்போது ரிஸ்க் எடுத்து வெற்றி அடைய கற்றுக்கொண்டோம் என்றால் வாழ்க்கை போராட்டத்தில் நிறைய அனுபவங்கள் கிடைக்கும், வாழ்க்கையில் அனுபவங்கள் விலைமதிப்பு அற்றவை, நீங்கள் ஒரு பயணத்தை செய்யாமல் பயணத்தின் அனுபவத்தை விலைகொடுத்து வாங்க முடியுமா என்ன ? நிறைய விஷயங்களை அனுபவப்பட்டு மட்டும்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விதி இருக்கிறது. இவைகளை மாற்ற முடியாது. அனுபவங்கள் சொல்லும் பாடத்தில் இருந்து எப்படிப்பட்ட சாமர்த்தியசாலிகளும் தப்பிக்க முடியாது. அனுபவங்கள் நமது வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அம்சங்கள். ஆனால் எல்லா நேரங்களிலும், அவை கடினமானவையாக இருந்தாலும், அந்த அனுபவங்களைத் தாங்கிக்கொள்ளத் தயாராக இருங்கள். அவற்றைச் சமாளித்து, அவற்றிலிருந்து மீண்டு வருவதற்குத் தேவையான அறிவைப் பெறுவதற்காக உங்கள் மனதைத் திறந்த நிலையில் வைத்திருந்தால், நீங்கள் சிக்கல்களைத் தவிர்க்கலாம். ஒரு கட்டத்தில், மிகச் சிறிய விஷயங்கள்கூட தவறாகிவிடுமோ என்று நாமே பயப்படத் தொடங்கிவிடுகிறோம். ஆனால், எதுவுமே செய்யாமல் இருப்பது அதைவிட ஆபத்தானது. வேலையைச் செய்யுங்கள். அந்த வேலை தவறாகப் போகட்டும். அதனால் உங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டால்கூட பரவாயில்லை. ஆனால், இவை அனைத்தும் வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அந்த நஷ்டத்திலிருந்து நீங்கள் பெறும் அனுபவத்தின் மூலம், அடுத்த கட்டத்தில் லாபத்தைக் காண்பீர்கள். இது ஒருவிதமான யதார்த்தம், நண்பர்களே. போராட்டங்களைச் சந்தித்தவர்கள்தான் இதை உணர்ந்திருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

நீங்கள் சாடர்டே நைட் லைவ் பார்த்திருக்கிறீர்களா?

  அமெரிக்காவில் 'சாட்டர்டே நைட் லைவ்' என்ற ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நண்பர்களே, அந்த நிகழ்ச்சியைப் பற்றிய பெரும்பாலான தகவல்களை இ...