வியாழன், 2 நவம்பர், 2023

CINEMA TALKS - THE LEGEND - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!



THE LEGEND - பொதுவாக லேஜெண்ட் படம் ஒரு கமர்ஷியல் பிலிம்மாக எடுக்கபட்டதால் கமர்ஷியல் பிலிம்களுக்கு தேவையான எல்லா விஷயங்களையும் இந்த படம் கொடுத்து இருக்கிறது. 5 பாடல்கள் 3 சண்டைக்காட்சிகள் நிறைய லொகேஷன் சாய்ஸ் , நிறைய காஸ்ட்யூம்ஸ் டிசைன் ஆனால் ஃபார்முலா ரொம்ப தொண்ணூறுகளின் சாயல் இருக்கிறது. ஒரு சில நேரங்களில் 70 களின் சாயல் வரைக்குமே சென்றுவிடுகிறது. ஹீரோ ஹீரோயின் , வில்லன்கள் , காமெடியன்ஸ் , பேக்ரவுண்ட் ஆக்டர்ஸ் , கெஸ்ட் ஆக்டர்ஸ் என்று எல்லோருமே அவங்களால் முடிந்த அளவுக்கு பெஸ்ட்டாக கொடுத்து இருப்பதால் இந்த படம் வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. மற்றபடி பிளாட் மற்றும் ஸ்கிரீன் பிரசன்டேஷன் ரொம்ப ரொம்ப ரொம்ப அவுட் டேட்டட் என்பது ஆடியன்ஸ்ஸாக பார்க்கும்போதே புரிந்துகொள்ள முடியும். ஒரு கான்செப்ட் கொண்டுவரும்போது ரொம்ப கவனமாக கொண்டுவர வேண்டும். உலகம் சுற்றும் வாலிபன் என்று ஒரு எம். ஜி. ஆர் படம். அந்த படத்தில் மின்னல்லுடைய சக்தியை ஒரு சின்ன பொருளுக்குள் அடைத்து அறிவியல் கண்டுபிடிப்பாக சைண்டிஸ்ட் எம்.ஜி.ஆர் வைத்து இருப்பார். இன்னொரு எம்.ஜி.ஆர் சப்போர்டிங் ரோல் பண்ணி இருப்பார். கமர்ஷியல் படம்தான் பெரிய கான்செப்ட்தான் இருந்தாலும் டிஸப்பாயிண்ட்மெண்ட் பண்ணவே இல்லையே ? அந்த படத்துல வொர்க் அவுட் ஆன மேஜிக் இந்த படத்துல எப்படி மிஸ் ஆகியிருக்கும் ? இத்தனை சிரமம் எடுத்து எதுக்காக பேசுகிறேன் என்றால் ப்ரொடக்ஷன் வேல்யூ மற்றும் நடிப்புக்கும் பிலிம் மேக்கிங்க்கும் இந்த படத்துக்குள் கொடுத்து இருக்கும் டேடிகேஷன் ரொம்ப ரொம்ப அதிகம். ஒரு பிலிம் என்றபோது இருக்க வேண்டிய ஸ்டண்டர்ட்ஸ்ஸை கொண்டு வரவேண்டும் என்பதற்காக பிலிம்மையே விட்டுக்கொடுத்த படமாகத்தான் என்னால இந்த படத்தை பார்க்க முடிகிறது. சரவணன் அவருடைய பெஸ்ட் கொடுத்து இருப்பார் மேலும் இந்த படத்தின் அனைவருமே அவர்களுடைய பெஸ்ட்டைத்தான் கொடுத்து இருப்பார்கள். நெகட்டிவ்வாக அல்லது பாசிட்டிவ்வாக பார்க்க முடியாத ஒரு எக்ஸ்பெரிமெண்ட் ஃப்யூச்சர்ராக இந்த படம் இருக்கிறது. 

2 கருத்துகள்:

ராஜேஷ் குமார் சொன்னது…


தி லெஜென்ட் - தமிழ் சினிமா வரலாற்றிலேயே சலிச்சு எடுத்த ஒரு மொக்க படம்.இந்த படத்த பத்தி சொல்லனும்னா முன்னணி நட்சத்திர பட்டாளம் பிக்பாஸ் வீடு மாதிரி கிடக்குது. ஆனால் கதை எங்கயா போகும்போது இவங்க எல்லாரும் இங்க என்ன பண்ணிட்டு இருக்காங்க ? ஒன்னுமே புரியல.

படத்தை கலாய்க்கும் என்ற நோக்கத்தோடு போனால் கண்டிப்பாக செமயாக கலாய்க்கலாம் வந்துட்டாண்டா என் தலைவன் என்று என்ன நம்ம ஹீரோ சரவணன் அவர்களை பார்க்கும்போதெல்லாம்
அவர் சீரியஸ்சாக பண்ணும் காட்சிகள் எல்லாம் கலகலப்பாக போகுது, வயதுக்கு மீறி முயற்சிகளை எடுத்து நடிப்பை வெளிப்படுத்தியதை என்னவோ பாராட்டலாம் ஆனால் இந்த படத்தின் கதையை பார்க்கும் போதெல்லாம் என்ன கொடுமை சரவணன் இது என்றுதான் கேட்க வேண்டியதாக இருக்கிறது.

அடிப்படையில் இருந்தே முடியவில்லை.என்னடா நடக்குது இங்க?

சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க போறீங்களா?அதுக்கு பின்னாடி ஒரு மிகப்பெரிய வில்லன் கூட்டம் துரத்துகிறதா?கிளைமாக்ஸ் எண்பதுகளின் ஸ்டைல்லில் .மார்க்கெட் போன ஆட்கள் எல்லாம் வைத்துக் கொண்டு ஒரு உலகத் தரம் வாய்ந்த சூப்பர் ஹிட் கொடுத்துவிட முடியுமா ?

இப்படி ஒரு படத்த கொடுத்து தான் ஆகணுமா? கேமராவொர்க் மற்றும் சண்டை காட்சிகள் தவிர்த்து பாடல் காட்சிகளுக்கு.ஹரி ஜெயராஜ் ஓடிய பின்னணி இசையை தவிர்த்து படத்தில் சொல்லிக்கொள்ளும் படியாக ஒண்ணுமே இல்ல. இப்படியே போனால் தமிழ் சினிமா என்னாகுமோ என்று கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்து யோசிக்க வைத்து விட்டார்கள் ஜேடி - ஜெர்ரி !

Rocket Raja சொன்னது…

இதனால்தான் கவிஞர் அன்றே சொன்னார் எங்க மக்கா எங்க மக்கா எதிரிக்கெல்லாம் டண்டணக்கா என்று !! 🤣🤣🤣

காலத்தின் பயணத்தில் தமிழ் சினிமா ! #16

  நடிகர் மொட்டை ராஜேந்திரனின் வாழ்க்கைப் பயணத்தில், வில்லன் வேடத்திலிருந்து நகைச்சுவை நட்சத்திரமாக மாறிய விதம் மிகவும் சுவாரஸ்யமானது. ஆரம்பத...