சனி, 29 நவம்பர், 2025

நமது வாழ்க்கையின் மோட்டிவேஷன் ! - #TAMILMOTIVATION-EP.004




உங்கள் செலவுகள் மீது சரியான கட்டுப்பாட்டை உருவாக்க வேண்டும். உதாரணமாக, இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி யோசித்துப் பாருங்கள். 

உங்கள் உணவு, உடை மற்றும் தங்குமிடம் மிகவும் முக்கியமானவை. நீங்கள் போருக்குச் செல்ல வேண்டியிருந்தாலும் கூட உங்களுடைய உடைமைகளை பாதுகாக்க ஒரு சமூகமாக சேர்ந்து அவர்களுக்காக ஒருவருடன் போருக்குச் செல்லலாம்.

பணம் ஒரு மதிப்பாக மாறிவிட்டதால், நாம் நிலையான சமூகத்தில், நிலையான அரசாங்கத்துடன் வாழ்கிறோம். ஆனால் பணத்தைச் சேகரிப்பது பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் குறைவாகவே உள்ளது. 

எப்போதும் ஏழைகளாக இருக்கக்கூடியவர்கள் தங்களை பணக்காரர்களாகக் காட்டிக்கொள்ள அதிகமாகச் செலவிடுகிறார்கள். 

பணக்காரர்கள் எப்போதும் தங்கள் பணத்தை சரியான இடங்களில் சரியான நபர்களிடம் முதலீடு செய்து அதை இன்னும் அதிகமான பணமாக மாற்றுகிறார்கள். 

அவர்கள் தங்களை முடிந்தவரை பணக்காரர்களாகக் காட்டுவதைத் தவிர்க்கிறார்கள். உண்மையில், அவர்கள் இயல்பாகவே தாங்கள் பணக்காரர்கள் என்று தங்களின் செல்வ வளத்தின் மூலமாகவும் புகழின் மூலமாகவும் வெளிப்படுத்துவதை செய்கிறார்கள். இது அவர்களுக்கு சாதகமாக இருக்கிறது.

பணம் உங்களுக்கு சக்தி, மரியாதை, அமைதி, மகிழ்ச்சி, பாதுகாப்பு, சுதந்திரம், நம்பிக்கை மற்றும் உங்களை வெளிப்படுத்தும் திறனை அளிக்கிறது. இந்த மந்திரக் கருவியை நீங்கள் சரியாகப் பயன்படுத்தாவிட்டால், உங்களுக்குத் தேவைப்படும்போது பணம் இல்லாத சூழ்நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள்.

வாழ்க்கையில் அதை விட பெரிய நரகம் எதுவும் இல்லை என்பதை எதிர்காலத்தில் நீங்கள் புரிந்துகொள்வீர்கள். இந்த விஷயங்களில் உங்களுக்கு மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். ஆனால் நடைமுறையில் உண்மை என்பது இதுதான் ஆகவே கவனமாக செயல்படுங்கள். மக்களே பணத்தை சேகரியுங்கள். சரியான இடத்தில் முதலீடு செய்யுங்கள். சரியாக செலவு செய்யுங்கள்

இந்த வலைப்பூவுக்கு தொடர்ந்து பேராதரவு கொடுத்து இந்த வலைப்பூவை சிறப்பான வெற்றிகளை அடைய செய்யுமாறு கம்பெனி சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது - 

கருத்துகள் இல்லை:

TECH TALKS - டெய்லிமொஷன் இணையத்தில் சம்பாதிப்பது குறித்த தகவல்கள் !

  Dailymotion offers an accessible Partner Program that lets creators monetize their content via native uploads and website video em...