செவ்வாய், 25 நவம்பர், 2025

காலத்தின் பயணத்தில் தமிழ் சினிமா ! #9




‘அரண்மனை கிளி’ திரைப்படத்தின் தொடக்கக் காரணம் இளையராஜா. இளையராஜா ஏழு பாடல்களை இசையமைத்து கொடுக்க, அந்தப் பாடல்களை மையமாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னர் ராஜ்கிரண் நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ மிகப்பெரிய வெற்றி பெற்றதால், அதே வெற்றியைத் தொடர்ந்து அவர் நடித்து, இயக்கி, தயாரித்த படம் தான் ‘அரண்மனை கிளி’. இந்த படம் 1993-ல் வெளியானது. தமிழில் பெரும் வெற்றி பெற்றதால், பின்னர் கன்னடத்தில் ‘நீலகண்டா’ என்ற பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டது. அங்கு ராஜ்கிரண் நடித்த கதாபாத்திரத்தை நீலகண்டன் ஏற்றார். இன்னொரு சுவாரசியம் என்னவென்றால், இளையராஜா இந்த ஏழு பாடல்களையும் வெறும் இரண்டு மணி நேரத்தில் கம்போஸ் செய்து முடித்தாராம். இந்த படத்துக்கு அவர் இசையமைக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தவர்கள் இயக்குநர்கள் ராஜ்கிரண் மற்றும் மாரிமுத்து. இறுதியில் அவர்களின் விருப்பம் நிறைவேறியது. அடி பூங்குயிலே, அம்மன் கோயில், ராசாவே உன்னை விடமாட்டேன், ராத்திரியில் பாடும், வான்மதியே, என் தாயெனும் கோயிலே போன்ற பாடல்கள் அனைத்தும் அந்நாளில் சூப்பர் ஹிட் ஆனது. இளையராஜாவின் இசை படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இந்த படத்தில், குஷ்புவின் தோற்றத்தை ஒத்த அஹானா கதாநாயகியாக அறிமுகமானார். அன்றைய காலத்தில் குஷ்புவுக்கு பின்னணி குரல் கொடுத்த அனுராதா, அஹானாவுக்கும் குரல் கொடுத்தார். இதனால் சில பத்திரிகைகள் அவரை “சின்ன குஷ்பு” என்று அழைத்தன. மேலும், வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் இன்றும் சிரிப்பை உண்டாக்கும் வகையில் பிரபலமாக உள்ளன. - நன்றி : மதன் குமார் !

கருத்துகள் இல்லை:

தமிழ் மோட்டிவேஷன் கருத்துக்கள் [TAMIL-MOTIVATION-QUOTES-BLOGSPOT]-#2-

1. நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய விதி நமக்கு நிரந்தரமாக பாதிக்கக் கூடிய அளவுக்கு மிகப்பெரிய ரிஸ்க்கை கொடுத்தாலும் சரியான அறிவுத்திறனும் கடி...