புதன், 26 நவம்பர், 2025

தமிழ் மோட்டிவேஷன் கருத்துக்கள் [TAMIL-MOTIVATION-QUOTES-BLOGSPOT]-#1-

 1. விமர்சனம் என்பது நம் வாழ்வில் முக்கியமானது. அது நம் வாழ்க்கையில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதற்கான அளவீடு ஆகும். இருப்பினும், யாராவது நம்மை அதிகமாக விமர்சித்தால், அவர்கள் நம் மீது பொறாமைப்படுகிறார்கள் என்று அர்த்தம்.

2. உடல் நலத்தை பராமரிப்பு செய்ய விரும்பும் அனைவருக்கும் கனவாக இருக்கக் கூடிய ஒரு விஷயம். ஒரு பலமான உடலை அமைப்பு வேண்டும் என்பதுதான். ஆனால் நம்முடைய மனதை  வைத்திருக்க வேண்டும். நம்முடைய மனதுக்குள் சரியான கட்டுப்பாடுகள் வந்தால் தான் நம்முடைய உடலைப் பராமரிக்கவும் நம்முடைய உடல் நலத்தை மேம்படுத்த சத்துள்ள உணவுகள் சரியான உடற்பயிற்சியை மேற்கொள்ளவும், நமக்கான மனக் கட்டுப்பாடு கிடைக்கும்

3. ஒரு விஷயத்தை அது கடினமாக இருக்கிறது என்பதற்காக நாம் புறக்கணிக்கக் கூடாது. இந்த வயதில் நம்மால் அதைச் செய்ய முடியாவிட்டால், வேறு ஏதாவது வயதில் அதைச் செய்வோம் என்ற மனப்பான்மை நமக்கு இருக்க வேண்டும். கடினமான விஷயங்களைச் செய்வதன் மூலம் நாம் எப்போதும் நிறைய கற்றுக்கொள்கிறோம். எளிதான விஷயங்கள் பெரும்பாலும் நமக்கு பல வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொடுப்பதில்லை.

4. நம்முடைய வாழ்க்கையில் சரியான இடத்தில் நாம் சென்று கொண்டிருக்கும் பொழுது நமக்கான காலடி தடங்களை நாம் சரியான இடத்தில் வைக்கும் போது நம்மை பாராட்டி உடன் கூட்டிச் செல்பவர்கள் மிகவும் முக்கியமானவர்கள்.மேலும் நாம் தவறான இடத்தில் காலடி தடங்களை வைக்கும் பொழுது நம்மை கண்டிப்பு செய்பவர்களும் மிகவும் அவசியமானவர்கள்


கருத்துகள் இல்லை:

தமிழ் மோட்டிவேஷன் கருத்துக்கள் [TAMIL-MOTIVATION-QUOTES-BLOGSPOT]-#2-

1. நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய விதி நமக்கு நிரந்தரமாக பாதிக்கக் கூடிய அளவுக்கு மிகப்பெரிய ரிஸ்க்கை கொடுத்தாலும் சரியான அறிவுத்திறனும் கடி...