இந்த ஆன்லைன் பதிவுகள்ல் பணத்தை அனுப்பக்கூடிய முறைகள் வந்தாலும் வந்துவிட்டது கைகளில் இருக்கும் பணத்தை செலவு செய்த காலங்களில் விட இப்பொழுது ஆன்லைன் முறையில் செலவு செய்து கொண்டிருக்கும் பொழுது பணத்தின் செலவுகள் தாறுமாறாக உயர்ந்து கொண்டிருக்கிறது.
விடுமுறை நாட்களில் சொந்த காரை விட்டு குழந்தைகள் நம்முடைய வீட்டுக்கு வந்தால் நமது வீட்டுப் பொருட்களை அவர்களுடைய சொந்த பொருட்களை போல தாறுமாறாக உடைத்துவிட்டு சொல்வார்களே அதுபோல நம்முடைய மனதும் ஒரு விஷயத்தை ஆசைப்பட்டுவிட்டால் அந்த விஷயம் அடையும் வரை நம்முடைய நிம்மதியை தாறுமாறாக உடைத்துக்கொண்டிருக்கிறது.
ஆனால், தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை வரும்போது, சம்பளச் செலவுகளும் போனஸும் பெரும்பாலும் மின்னல் வேகத்தில் செலவு செய்யப்படுவதை நம் கண்களால் பார்க்க முடியும். நிச்சயமாக,
இதை சரிசெய்ய வழி, நடிகர் மற்றும் தொழில் அதிபர் அரவிந்த் சுவாமி அவர்கள் சொல்வது போல், நம் வாழ்வில் அடுத்த ஆறு மாதங்களுக்குத் தேவையான பணத்தைச் சேமித்தால் மட்டுமே. எந்த வகையான மாற்றத்தையும் கொண்டு வர நம்முடைய மனதுக்குள் முடிவெடுக்கும் அளவுக்கு பலம் கிடைக்கும் , குறிப்பாக நமக்கு மன அமைதி கிடைக்கும்,
மேலும் ஒரு வேலையை விட்டுவிட்டு இன்னொரு வேலைக்குச் செல்ல முடியும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கும்போது, ஒரு புதிய உந்துதல் பிறக்கும். நாம் முதிர்ச்சியுடன் நம் வாழ்க்கையை வாழ்ந்தால் மட்டுமே அது சரியாக இருக்கும்.
இல்லையென்றால், உலகம் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டு தலை ஆட்டிக்கொண்டே இருந்தால், அது நம்மை நல்லவர்கள் என்று கருதும். ஆனால் நாம் அதற்கு எதிராகப் பேசினால், மற்றவர்களை காயப்படுத்தி மோசமாகப் பேசிய மனிதராக கருதும்.
மற்றவர்களைப் பற்றி நாம் தொடர்ந்து சிந்தித்தால், இந்த உலகில் நாம் ஒருபோதும் முன்னேற முடியாது. நாம் எதிர்காலத்தைப் பார்க்க வேண்டும், மக்களே. இந்த வலைப்பூக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வெற்றி அடையச் செய்யுமாறு கம்பெனி சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக