நமது வாழ்க்கையில் நமக்குப் பிடித்த விஷயத்தை நாம் தேர்ந்தெடுப்பதை விட நமக்கு கிடைக்கும் விஷயங்களில் நமக்கு நன்றாக கற்றுக் கொள்ள முடியும். விஷயங்களில் அதிகபட்சமாக பணம் எதனை கொடுக்கிறதோ அந்த விஷயத்தை நாம் தேர்ந்தெடுப்பது மிகவும் நல்லது. நமக்கு பிடித்த விஷயத்தை செய்கிறோம் என்பதற்காக விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்ற கொள்கையின் அடிப்படையில் நம்முடைய வாழ்க்கை மாறிவிடும் என்று நம்ப கூடாது சமீபத்தில் பார்த்த ஒரு இணையதள வடிவமைப்பு நிறுவனர் ஒரு வீடியோவை உருவாக்கி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். அதாவது, கற்றது தமிழ் படத்தில் ஒரு இளைஞன் அவர் தனது படிப்பை தமிழில் தமிழ் சார்ந்த படிப்பு நிலைகளில் வேலை கிடைக்காத நிலையில் வெளியே தனது கோபத்தை வெளிப்படுத்தியதாகக் கூறினார். தமிழ் மூலம் மரியாதை பெற நினைத்தால், அவர் சில தமிழ் புத்தகங்களை எழுதியிருக்க வேண்டும் அந்த தமிழ் புத்தகங்களை விற்பனை செய்ய முயற்சி செய்திருக்க வேண்டும். அவற்றில் தோற்று இருக்க வேண்டும். அதைத் தவிர, தனது கோபத்தையும் கவலைகளால் அசைவையும் வெளியே காட்டுவது எப்படி நியாயம் என்று அவர் கேள்வி எழுப்பினார். இது நிஜமாகவே உண்மையான கருத்துதான். நம்முடைய வாழ்க்கையில் நாம் என்ன படிப்பு படிக்க வேண்டும்? எந்த மாதிரியான வேலைக்கு சென்று எவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும். நமக்கு பிடித்த விதத்தில் மட்டுமே இல்லாமல் வெளியே சமூகத்தையும், சூழ்நிலைகளிலும் ஏற்கனவே வேலை பார்த்துக் கொண்டு இருப்பவர்களுடைய நிலையும் நன்றாக ஆராய்ச்சி செய்து நமக்கான சரியான வேலையை தேர்ந்தெடுக்க வேண்டும் அந்த வேலைக்கு நமக்கு என்ன விஷயங்கள் தேவை என்பதையும் நன்றாக வேரிபிக்கேஷன் செய்து நிறைய நாட்களில் பணத்துக்கான முன்னேற்பாடுகளையும் செய்து நாம் அந்த வேலையே தேர்ந்தெடுத்து செல்ல வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக