நம் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளின் மன அழுத்தம் நம்மைத் தொந்தரவு செய்ய அனுமதிப்பது மிகவும் மோசமானது. நீங்கள் எப்போதும் பிரச்சனைகளை வேறுபட்ட கண்ணோட்டத்திலிருந்தும், அனைத்து கோணங்களிலிருந்தும் புத்திசாலித்தனமாகவும் அணுக வேண்டும். நம் வாழ்வில் எந்த நாளும் இன்னொரு நாள் போல இருக்கக்கூடாது என்பதற்காக, ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களைச் செய்ய பாடுபடுபவர்கள் மட்டுமே தொழிலில் வெற்றி பெறுகிறார்கள். இது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால், நாம் ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும், உதாரணத்துக்கு ஒரே மக்களுடன் வாழ வேண்டும், எப்போதும் ஒரே வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும், புதிய விஷயங்களைச் செய்வது அல்லது மாற்றத்தைக் கொண்டுவருவது சலிப்பூட்டுவது மற்றும் ஆபத்தானது என்ற மாயையை நம் மனம் உருவாக்கியுள்ளது. உள்ளார்ந்த பிரச்சனைகளையும் பின்னணியும் நாம் யோசிக்காமல் மேலோட்டமாக பார்க்கும் பொழுது எந்த ஒரு சின்ன பிரச்சினை கூட நம்முடைய பயத்தை மிகவும் அதிகப்படுத்திவிடும். நாம் இதுபோன்ற விஷயங்களுக்கு வந்து கொண்டிருந்தால் பெரிய பிரச்சனைகளை பார்த்து எப்படி நம்மால் சரி செய்ய முடியும்? இதனால் தான் நம்முடைய மனதை சரியாக வளப்படுத்திக் கொள்ள வேண்டும். நம்முடைய அறிவுத்திறனை மிகவும் அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும் இந்த உலகம் மிகவும் போட்டிகளும் பொறாமை குணம் நிறைந்தது. இந்த போட்டிகளில் முன்னிலை தரத்தில் நிற்பவர்கள் மட்டுமே நினைத்திருக்கிறார்கள். இந்த விஷயங்களுக்குக் கண்டிப்பாக கவனம் தேவை மக்களே. அப்படித்தான் நாம் வெற்றி பெற முடியும். நாம் கவனம் செலுத்தவில்லை என்றால், நாம் நம்மை நோக்கி வரும் வெற்றிகளை பற்றி தவறான புரிதலை வைத்து பேசுகிறோம் என்று அர்த்தம். சரியான புரிதல் இருந்தால்தான் வெற்றியை அடைய முடியும்.
1 கருத்து:
ஒரு நாள், இளைஞன் ஒருவன் ஒரு ஜென் குருவைச் சந்திக்க வந்தான். அவன் முகத்தில் சோர்வு, மனதில் குழப்பம் இருந்தது. “என் வாழ்க்கை எதுவும் சரியில்லை,” என்றான். “வீட்டிலும் பிரச்சனை, வேலையிலும் பிரச்சனை, நண்பர்களும் புரிந்துகொள்வதில்லை. இந்த உலகமே எனக்கு எதிராக இருக்கிறது!” என்றான். குரு அமைதியாக அவனை நோக்கி சிரித்தார். பிறகு மெதுவாக கேட்டார்: “இத்தனை பிரச்சனைகள் இருந்தும்… நீ ஏன் இன்னும் உயிரோடிருக்கிறாய்? ஏன் சாகவில்லை" - அவன் திகைத்து நின்றான். பிறகு சற்றே நிதானமாகச் சொன்னான்: “என் வாழ்க்கையில் சில நல்ல விஷயங்களும் இருக்கின்றன, அவைதான் என்னை தாங்கி நிற்க வைக்கிறது.” குரு சொன்னார்: “அப்படியானால், இனி அவை பற்றி நினைக்க ஆரம்பி. அந்த நல்ல விஷயங்களுக்காக கடவுளுக்கு நன்றி சொல். அவற்றின் மீது நீ உன் மனதை வைத்து வாழ்ந்தால், இன்னும் பல நல்ல விஷயங்கள் உன் வாழ்வில் நடக்கும். அப்போது உன் வாழ்க்கை அதன் அர்த்தத்தை இழப்பதில்லை. நீ அதை மறந்துவிட்டால் மட்டுமே அது எப்போதும் சோகமாகத் தெரியும்.” என்றார்.
கருத்துரையிடுக