வியாழன், 27 நவம்பர், 2025

GENERAL TALKS - நம்முடைய வாழ்க்கையில் விதியா அல்லது தற்செயலா ?

 



நடிகர் சந்தனம் அவர்கள் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் ஒரு காமெடி காட்சியில் இந்த வசனம் கொடுப்பார் ! நான் ஒரு தடவ நாகூர் பிரியாணி சாப்பிடணும்னு ஆசைப்பட்டு பிரியாணி வாங்கினு பஸ்ல ஏறுனேன் சரக்கு அடிச்ச மப்புல சாப்பிடாம தூங்கிட்டேன். கண்ணு முழிச்சு பாக்குறேன் உளுந்தூர்பேட்டை !

காலையில விடிஞ்சிருச்சு சரி டீ குடிக்கிற நேரத்துல பிரியாணி எப்படா சாப்பிடுறதுன்னு அத தூக்கி கீழே போட்டுட்டேன். அங்க பசியில சுத்திட்டு இருந்த ஒரு தெருநாயே அந்த பிரியாணியை சாப்பிட்டது. இப்ப என் வாழ்க்கையோட அனுபவத்துல இருந்து நீ கத்துக்கிட்ட பாடம் என்ன சொல்லு ?

நாகூர் பிரியாணி உளுந்தூர் பேட்டையில இருக்கற நாய்க்கு தான் கிடைக்கும்னு எழுதி இருந்தா அதை யாராலும் மாத்த முடியாது  - என்ற வசனம் தான் எப்போதுமே வாழ்க்கையில் எல்லோருக்கும் எல்லாமே நல்லபடியாக நடக்காது. 

ஒரு மனிதரை நீங்கள் எந்த அளவுக்கு வெறுத்தாலும் உண்மையான முயற்சிகள் கொடுத்தலும் அதிர்ஷ்டம் மட்டும்தான் அந்த மனிதருடைய வெற்றியை தீர்மானிக்கிறது. வேறு எதுவுமே அவர்களுடைய வெற்றியை தீர்மானிப்பது இல்லை.  இந்த உலகம் நீங்கள் என்னதான் வேண்டிக்கொண்டாலுமே இப்படித்தான் தீர்மானங்களை எடுக்கும். 

உங்களுடைய வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் முயற்சிகள் மட்டுமே போதாது. நல்ல அதிர்ஷ்டமும் உங்களுக்கு தேவைப்படுகிறது. நிறைய பாவப்பட்ட மக்களுக்கு அந்த அதிர்ஷ்டம் எதனாலோ கைகொடுப்பது இல்லை. இது விதியா அல்லது தற்செயலாக நடக்கிறதா என்று எதுவுமே புரியாமல் குழம்பி போவதுதான் வாழ்க்கை மக்களே ! 

1 கருத்து:

Rocket Raja சொன்னது…

வாழ்க்கை எப்படி போவுதா ? ரொம்ப மோசமா போகுது !

GENERAL TALKS - டெர்மினேட்டர் படங்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் !

டெர்மினேட்டர் திரைப்படத் தொடர் வாழந்ததையும் வீழந்ததையும் பேசியே ஆகவேண்டும் மக்களே, புதுமையான கதை சொல்லல் மற்றும் காட்சித் தொழில்நுட்பத்தால் ...