நம் வாழ்வில் நாம் எப்போதும் பல கடினமான அனுபவங்களைச் சந்திக்கிறோம், ஆனால் நமது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களை விட்டுக்கொடுப்பது போன்ற அனுபவம்தான் எப்போதும் மிகவும் கடினமானது.
கபடி, கிரிக்கெட், கண்ணாமூச்சி அல்லது வேறு எந்த விளையாட்டாக இருந்தாலும், விளையாட்டில் வெற்றி பெறுவதுதான் அந்தக் காலத்தின் மிகப்பெரிய ஆசையாக இருந்தது அல்லவா ?. சம்பளத்திற்காக எங்கும் வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. பணத்திற்கான தேவையும் மிகக் குறைவு.
அந்தக் காலத்தில், வெயில், மழை, இயற்கை மற்றும் ஒரு சிறிய விஷயத்தை அனுபவிப்போம். இதுபோன்ற நாட்கள் மீண்டும் வருமா ? மறுபடியும் அதுபோன்ற வாழ்க்கையை பார்க்க அனைவருக்கும் ஏக்கம் இருக்கும்.
இந்தக் காலத்தில் யாருக்கும் சொல்ல முடியாத தகவல் இது. மனதில் கண்டெடுக்கப்பட்ட அந்த மகிழ்ச்சியான நினைவுகள். ஒரு கட்டத்தில், வெளிப்புற சமூகத்தைப் பற்றிய உண்மையான விஷயங்களை நாம் அறியாத அந்த நாட்களில் அறியாமையிலிருந்து எழும் மகிழ்ச்சிதான் அது என்று நாம் முடிவு செய்கிறோம்.
இப்போது சமூகத்தைப் பற்றிய சரியான அறிவைப் பெறக்கூடிய நாட்கள் அந்த அறியாமையாக இருந்த அந்த இளமை நாட்களை விட சிறந்தது என்று நான் முடிவு செய்கிறேன். அப்படியிருந்தும், அந்த மகிழ்ச்சிதான் அந்த கட்டற்ற மகிழ்ச்சிதான் இன்னுமே நமது கடந்த கால வெர்ஷன் மேலே நமக்கு பொறாமையை உருவாக்கிவிடும்.
கஷ்டப்பட வேண்டும் என்ற கட்டாயம் சங்கடமானது - அதுவே நம் வாழ்க்கையின் அதிகபட்ச விதியாக இருக்கும்போது பள்ளி நினைவுகளை கொண்டாடுகிறோம். நாம் அடுத்த நொடிகளில், அடுத்த நாட்கள், அடுத்த மாதங்கள், அடுத்த ஆண்டுகள், என்று காலம் மட்டுமே சென்றாலும் நம் வாழ்க்கை நாம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிகரமாகவும் மகிழ்ச்சியாகவும் இல்லை என்று ஒரு நிலை வந்தால் கல்லூரி நாட்களின் சந்தோஷங்களை நினைக்கின்றோம்,
கடந்த காலத்தின் அந்த மகிழ்ச்சியான நினைவுகளைப் பற்றியும், நண்பர்கள் குழுவுடன் விளையாடிய பருவங்களைப் பற்றியும் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருப்போம்.
இந்த நேரங்களில், நம் மனதில் தோன்றும் எல்லா விஷயங்களும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். மீண்டும், அறியாமையில் அன்போடு நட்போடு நல்ல நண்பர்கள் கிடைக்கும் மகிழ்ச்சி புத்திசாலித்தனமாக யோசித்தால் நமக்குத் தேவையற்றது.
எப்படியிருந்தாலும், இப்போது எந்த வேலைக்கும் செல்லாமல், அதுபோன்ற மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ நம்பிக்கையுடன் வாழ்ந்தால், வாழ்க்கை நரகமாகிவிடும் என்பதுதான் நமது உண்மை ரியாலிட்டி. எல்லாராலும் சூனா பானா ஆகிவிட முடியுமா என்ன ?
இருந்தாலும் அடுத்த நாள் பள்ளிக்கூடம் விடுமுறையாக இருப்பதையும், தொலைக்காட்சியில் விருப்பப்பட்ட சேனல்களில் விருப்பப்பட்ட நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டு சந்தோஷமாக இருப்பதையும் நண்பர்களோடு விளையாடிக் கொண்டு ஒரு சின்ன சின்ன விஷயத்துக்காகவும் வாய்க்கால் வரப்பு சண்டைகளை போட்டுக்கொண்டு கோபித்துக்கொண்டு கலகலப்பு பேசிக்கொண்டு ஊர் வம்பை வாங்கிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்த அந்த நாட்கள் எல்லாம் பொன்னான நினைவுகளாக தான் அனைவரது மனதிலும் இருக்கிறது.
காலங்கள் மாறும், காட்சிகள் மாறும் என்ற பழைய பாடல்களின் வரிகள், குறிப்பாக இந்தக் காலத்தில், நம் மனதை ஈட்டியைப் போலத் துளைத்துக் கொண்டிருக்கின்றன. இருந்தாலுமே சரியான வயதில் சரியான மாற்றங்கள் நிகழ்ந்தால் தான் வாழ்க்கை சந்தோஷமானதாக இருக்கும் என்பதே நிதர்சனம். இந்த வலைப்பூவின் பதிவுகளுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கம்பெனி சார்பாக கேட்டுக்கொள்கிறோம் மக்களே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக