நம் வாழ்வில் பணம் சம்பாதிப்பது மிகவும் முக்கியம். பணம் இல்லையென்றால், நாம் வாழ்க்கையில் நம் சொந்த திசையை அமைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இந்த விஷயங்களில் நாம் சரியாக முடிவெடுக்கவில்லை என்றால் நம் வாழ்க்கையை சரியான திசையில் மாற்றி, அதைச் சரியாகச் செய்ய முயற்சித்தாலும் - நம் பலம் போதுமானதாக இருக்காது.
அப்புறம் என்ன ? தவறான திசையிலேயே வாழ்க்கை சென்று கொள்ளட்டும். நம்மால் தான் எதுவும் செய்ய இயலாது ! என்று நம்முடைய பலம் குறைந்த பலவீனத்தின் காரணமாக நம்முடைய வாழ்க்கையில் தோற்றுப் போகப் போகிறது என்று தெரிந்தும் அதே நிலையில் சென்றுகொண்டு இருக்கக்கூடிய தர்ம சங்கடம் உருவாகும்.
உங்களுக்காக ஒரு தனித்துவமான புதையல் வரைபடம் மறைக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த புதையல் வரைபடத்தைப் பெற்றாலும், நீங்கள் சரியான அளவு பொருள் செல்வத்தைக் கொண்ட நபராக இருந்தால் மட்டுமே அந்தப் புதையலை நோக்கி உங்களை நகர்த்த முடியும். நீங்கள் அந்தப் புதையலை அடைய முடியும்.
இந்த தத்துவத்தின் சாராம்சம் என்னவென்றால் உங்களுடைய பணம் தான் உங்களுடைய வாழ்க்கைக் கப்பலில் சரியான திசையில் நகர்த்தக்கூடிய வலிமையை கொண்டுள்ளது. நீங்கள் பணம் இல்லாத மனிதராக இருந்தால் கடல் காற்று வீசக்கூடிய திசையில் கப்பல் தாறுமாறாக சென்று கொண்டிருக்கும் என்பதையும் முறையான பயணம் அந்த கப்பலுக்கு இருக்காது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக