ஞாயிறு, 23 நவம்பர், 2025

GENERAL TALKS - உங்களின் சக்திகளை குறைவாக மதிப்பிடாதீர்கள் !

 



நிறைய நேரங்களில் நம்முடைய சக்திகளை குறைவாக மதிப்பிடுவது தான் நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய தவறாக இருக்கும். மனிதர்கள் தங்களை விட அதிகமான எடை உள்ள ஒரு பொருளை நகர்த்த முடியாது என்று நினைக்கும் பொழுது நெம்புகோல் தத்துவத்தை கண்டுபிடித்தார்கள். ஆகவே எப்பொழுதுமே நம்முடைய சக்திகள்.நம்மை நாம் நினைக்கும் விதத்தை விடவும் அதிகமாகத்தான் இருக்கிறது. நாம் குறைந்த அளவுக்குத்தான் சக்திகள் நம்மிடம் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் அதிக அளவுக்கு நம்மிடம் சக்திகள் எப்பொழுதுமே இருந்து கொண்டுதான் இருக்கிறது. நிறைய நேரங்களில் நாம் சக்திகளை பயன்படுத்துவதில்லை. குறிப்பாக சொல்லப்போனால் கண்டு கொள்வது கூட இல்லை. இந்த சக்திகளை நாம் எப்படி பயன்படுத்துவது என்றால் பொழுதுபோக்கு சாராத விஷயங்களில் நம்முடைய மனதை திசை திருப்ப வேண்டும். உண்மையை சொல்லப்போனால் ஒரு காலத்தில் நம்முடைய முக்கியமான வேலையே நமக்கான உணவை சேகரிப்பதாகத்தான் இருந்தது. ஆனால் இப்பொழுது பணம் என்ற ஒரு சட்டத்தை உருவாக்கிய பின்னால் உணவு என்பது பணத்தின் மூலமாக சம்பாதிக்கக் கூடிய ஒரு விஷயமாக மாறிவிட்டது.ஆகவே நாம் பணத்தின் பின்னால் நகர்ந்து கொண்டிருக்கிறோம். இந்த பணம் சம்பாதித்தில் இருக்க கூடிய பிரச்சினை என்னவென்றால் நம்முடைய மனதுக்கு உழைப்பை தவிர மீதி நேரத்துக்கு ரிலாக்சேஷன் என்று பொழுதுபோக்கு விஷயத்தை நாம் நாடுகிறோம். ஆனால் ஒரு கட்டத்தில் பொழுதுபோக்கே நாம் அடிமையாக மாறிவிடுகிறோம். இதுதான் மிகவும் தவறான செயல். இதனை தான் நாம் வன்மையாக கண்டிக்க வேண்டும்.பொழுதுபோக்கு என்பது நம்முடைய வாழ்க்கையில் 1 மணி நேரம் அல்லது 2 மணி நேரம் என்ற ரிலாக்சேஷன் ஓய்வு கொடுக்கலாம். ஆனால் அதிகமாக பொழுதுபோக்கே நம்பக்கூடிய காலகட்டத்தில் எப்பொழுது இலவசமாக நேரம் கிடைத்தாலும் அனைத்து நேரங்களிலும் உழைப்பை விட்டுவிட்டு பொழுதுபோக்கு நாம் தேர்ந்தெடுக்க கூடிய ஆப்ஷனாக மாறிவிடும். நமது பலம் நமது சக்தி அல்ல. நமது ஆரோக்கியமும் தெளிவாக சிந்திக்கும் திறனும் நமக்கு கருவிகளை உருவாக்கக்கூடிய கருத்துக்களை வழங்குகின்றன. எனவே, நமது ஆரோக்கியத்தையும் தெளிவாக சிந்திக்கும் திறனையும் உருவாக்கக்கூடிய ஒரே விஷயத்தை, அதாவது கல்வியை, நமது வாழ்க்கையின் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். வேலை, பயணம், பலரைச் சந்தித்துப் பேசுவது ஆகியவற்றை நம் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாக மாற்ற வேண்டும். வாழ்க்கையில் வெற்றியாளர்கள் செய்தது இதுதான்.

கருத்துகள் இல்லை:

THE LIFE BOOK - PAGE 2

நம் வாழ்வில் சிலருக்கு, ஒரு கார் வேகமாகச் செல்லக் கூடாது என்றால், வேகமானி ஊசியை அகற்றினால் போதும், கார் வேகமாகச் செல்லாது என்ற கருத்து உள்ளத...