தமிழ் சினிமாவில் நல்ல கதைகளுக்காகவும், அறிமுக நடிப்பிற்காகவும், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கதைக்காகவும், யதார்த்தமான மற்றும் இயல்பான கதைக்காகவும் கொண்டாடப்பட்ட ஒரு படம் இருந்தால், அது பிரபு சாலமன் இயக்கிய மைனா படம்தான். ஒரு சராசரி கிராமத்து இளைஞனான சுருளி, தான் சிறுவயதிலிருந்தே காதலித்து வந்த மைனாவை திருமணம் செய்து சேர்ந்து ஒரு அமைதியான வாழ்க்கையை முயற்சிக்கிறான். ஆனால் விதி அவன் வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் ஒரு கொடூரமான செயலைச் செய்கிறது.
மைனாவை தமிழ் சினிமாவில் மிகவும் அரிதான ஒரு சோகப் படம் என்று சொல்லலாம். ஆனால் உண்மையில், மைனா ஒரு வண்ணமயமான கதைக்களத்தைக் கொண்ட ஒரு சாகசப் படம். இந்த படத்தில் நடித்த விதார்த், அமலா சேது மற்றும் தம்பி ராமையா அவர்களுடைய கதாபாத்திரங்கள் பின்னாட்களில் மிகவும் அதிகமாக பாராட்டப்பட்ட கதாபாத்திரங்கள் என்று சொல்லலாம்.சராசரி.ஏழை வர்க்கத்தில் ஒரு காதல் ஜெயிக்க வேண்டும் என்றால் எந்த அளவுக்கு கஷ்டப்பட வேண்டும் என்றும்.கொஞ்சம் காவல்துறை அரசியலும் கலந்து இந்த படத்தில் சொல்லியிருக்கிறார்கள்
நம் வாழ்வில் எவ்வளவு துன்பங்களை அனுபவித்தாலும், நம் விதியை மாற்ற முடியாது. மனிதர்களின் மனதில் உள்ள கெட்ட எண்ணங்கள் எப்போதும் யாரையும் பாதிக்கத் தயாராக இருக்கும் என்பது போன்ற பல ஆழமான கருத்துக்களை இந்தப் படம் உணர்த்துகிறது. இந்தப் படம் வெளியானபோது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் இமான் இசையமைத்த பாடல்களின் வெற்றி இந்த படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக