சினிமாவில் எப்பொழுதும் தனி ஒரு மனிதனாக முன்னேற இயலாது என்ற ஒரு கருத்து இருக்கிறது. அந்தக் காலத்தில் பாக்கியராஜ் அவர்கள் செந்தில் அவர்களுடன் இணைந்து பணியாற்றும் பொழுது செந்தில் வளர்ச்சியடைந்த நடிகராக இல்லை.
மாறாக சினிமாவில் சின்ன சின்ன வேலைகளை செய்யக்கூடிய ஒரு மனிதராக மட்டுமே இருந்தார். அப்போது செந்தில் அவர்களை உடன் இருப்பவர்கள் நிறைய பேர் அவருடைய உயரத்துக்காகவும், முக அமைப்புக்காகவும் கிண்டல் செய்திருக்கிறார்கள்.
அந்த நேரத்தில் இயக்குநர் பாக்கியராஜ் அவர்கள் செந்தில் அவர்களுக்கு நிச்சயமாக தான் ஒரு நல்ல இயக்குனர் ஆனால் நடிக்கும் வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்ற முடிவை எடுத்தார்.
இப்பொழுது செந்தில் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற யோசனையில் முதல் முதலாக மௌன கீதங்கள் படத்தில் ஒரு வாய்ப்பை வழங்கினார்.
செந்தில் அவர்கள் வாய்ப்பை பயன்படுத்தி தன்னுடைய கேரக்டரில் மிகவும் சிறப்பாக செயல்பட்டதால் அடுத்தடுத்து தூரல் நின்னு போச்சு. இன்று போய் நாளை வா போன்ற திரைப்படங்களில் சரியான கதாபாத்திரங்களை பெற்றார்.
எப்பொழுதுமே திரைத்துறையில் இதுபோன்று கவனிக்கப்பட்ட ஒரு மனிதரிடம் இருந்து கிடைக்கக்கூடிய ஆதரவு என்பது மிகவும் முக்கியமானது.நகைச்சுவை நடிகராக இருக்கக்கூடிய நடிகர் செந்தில் அவர்கள் கடந்து வந்த பாதையில் இதுபோன்ற கஷ்டங்களும் இருந்துள்ளது என்பதை நாம் இங்கே தெரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு படத்தைக் கொடுப்பது என்பது ஒரு கூட்டு முயற்சி, அதை ஒரு தனி நபரால் மட்டும் செய்வது சாத்தியமில்லை. படங்களுக்குப் பின்னால் உள்ள கடின உழைப்பைப் பார்க்கும்போது, அந்தப் படங்களில் பணியாற்றியவர்களுக்கு ஏற்படக்கூடிய வலியை நீங்கள் எப்போதும் உணருவீர்கள் என்று இந்த வலைப்பூ பதிவு உணர்த்துகிறது ! - நன்றி : சினிமாபுரம் இணைய பக்கம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக