செவ்வாய், 25 நவம்பர், 2025

THE LIFE BOOK - PAGE 4


இந்த விஷயத்தை இன்னொரு வகையாகவும் சொல்லலாம் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியை போல வல்லவராயன் சமாதானத்துக்கு தூதுவிடும் புறாவை அனுப்பும் பொழுது புறாவை கையில் பிடித்து எடை போட்டு பின்னால் "என்ன கனம் என்ன கனம் இதனை நன்றாக நெய்யை தூக்கலாக போட்டு வறுவல் செய்துவிடுங்கள்" என்று சொல்லிவிட்டு அந்த அரசர் நடையை கட்டுவது போல ஒரு காட்சி சொந்த வாழ்க்கையில் வந்துவிட்டது.  "இந்த ஓலையை என்ன செய்வது ?" என்று அமைச்சரிடம் கேட்கும்போது பாதுகாப்பு காவலரிடம் அமைச்சர் "இந்த ஓலை மன்னர் உங்களுக்கு தரும் அன்பு பரிசு ! வைத்துக்கொள்" என்று சொல்வது போல நட்பின் உண்மையான வேல்யூவை தூக்கி எறிந்துவிட்டு நட்பில் இருந்து கிடைக்கக்கூடிய ஆதாயங்களை மட்டும் சந்தோஷமாக சாப்பிடுவதற்கு மட்டுமே ஒருவர் இப்போது இருந்து கொண்டிருந்தார் எப்படிதான் வாழ்க்கையில் சேர்ந்து முன்னேறுவது? ஏற்கனவே குடும்பத்தில் நிலைமை எப்படி இருக்கிறது என்றால் குடும்பத்தில் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையா என்று கேட்கும் போது குடும்பத்துக்கு பிரச்னையாக நான் தான் இருக்கிறேன் என்று சொல்லக்கூடிய நிலைமைக்கு வாழ்க்கையை தள்ளி வைத்திருக்கிறது ! நம் வாழ்க்கையில் நம்மை காயப்படுத்தியவர்களை காயத்துக்கு மருந்து போட வேண்டிய கட்டாயம் இருப்பதால் அவர்களை கெஞ்ச வேண்டிய யோசனைகளும் இருக்கிறது. நம் நண்பர்களை வெளியில் பார்க்கும்போது, ​​"நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?" அல்லது "நீங்கள் சாப்பிட்டீர்களா?" போன்ற ஒரு எளிய கேள்வியைக் கூட அவர்களிடம் கேட்க முடியாது. அவர்களும் தங்கள் வாழ்க்கையில் மிகவும் கடினமான காலகட்டத்தை கடந்து செல்கிறார்கள். இது தொடர்ந்தால், இந்தியா எப்படி உலக வல்லரசாக மாறும்? இளைஞர்களின் நிலைமையை மாற்ற அதிகாரிகள் சில புரட்சிகரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

 

கருத்துகள் இல்லை:

தமிழ் மோட்டிவேஷன் கருத்துக்கள் [TAMIL-MOTIVATION-QUOTES-BLOGSPOT]-#2-

1. நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய விதி நமக்கு நிரந்தரமாக பாதிக்கக் கூடிய அளவுக்கு மிகப்பெரிய ரிஸ்க்கை கொடுத்தாலும் சரியான அறிவுத்திறனும் கடி...