செவ்வாய், 25 நவம்பர், 2025

CINEMA TALKS - URIYADI - TAMIL FILM - REVIEW - திரை விமர்சனம் !




இந்த உறியடி படத்தைப் பொறுத்தவரை, இது தமிழ் சினிமாவில் வெளியான முக்கியமான படங்களில் ஒன்றாகும்.இந்த படத்துடைய கதை கல்லூரி மாணவர்களின் நண்பர்கள் குழுவில், சாதி வெறுப்பு காரணமாக ஒரு அப்பாவி இளைஞன் தாக்கப்படுகிறான். 

அந்த இளைஞனின் வாழ்க்கையில் இதுபோன்ற அசம்பாவிதம் நேர காரணமாக இருந்தது என்ன ?, இதுபோன்ற ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் எவ்வாறு நிகழ்கிறது ? என்று தெரிந்துகொள்ளும் நண்பர்கள் சம்மந்தப்பட்ட ஆட்களை பழுவாங்குகிறார்கள் என்பது இந்த படத்தின் கதைக்கரு, 

பெரிய மனிதர்கள் என்று அழைக்கப்படக்கூடியவர்கள் சாதி மற்றும் அரசியல் ஆதாயத்திற்காக இளம் தலைமுறையை எவ்வளவு பாதிக்கிறார்கள் என்பதை இந்தப் படம் மிகத் துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளது. மேலும், இந்தப் படத்தில் பழிவாங்கும் காட்சிகள் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன. எதையும் மறைக்காமல், படம் நேரடியாகவும் நேர்மையாகவும் கதையைச் சொல்லியுள்ளது. 

இந்தத் திரைக்கதையின் மிகப்பெரிய பலம் என்னவென்றால் கதைக்காக படம் சரியான பாதையில் நகர்கிறது. மேலும், புதுமுகங்கள் இளைஞர்களாக இருந்தாலும், கதையின் அவசியத்தைப் புரிந்துகொண்டு இந்தப் படத்தில் கதையின் கதாபாத்திரங்களாக மாறிவிட்டனர். இது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் போன்ற கதையாக இந்த வன்முறை காட்சிகள் இருப்பதால் இது கமர்ஷியல் படங்களின் ஸ்டைல்லில் எடுக்கப்பட்ட படம் என்பதால், தர்க்கமும் மிகவும் சரியானது.

பட்ஜெட் படங்களை எடுக்க ஆசைப்படுபவர்களுக்கு இந்தப் படம் நிச்சயமாக ஒரு அளவுகோல் படமாக இருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை. இந்த விமர்சனத்தை எழுதும் நேரத்தில், நான் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தைப் பார்க்கவில்லை. நான் பார்த்தால், நிச்சயமாக அதை மதிப்பாய்வு செய்வேன்.

இந்த வலைப்பதிவைத் தொடர்ந்து பின்தொடர்ந்து, இதை வெற்றிகரமாக்க ஆதரவளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

THE LIFE BOOK - PAGE 2

நம் வாழ்வில் சிலருக்கு, ஒரு கார் வேகமாகச் செல்லக் கூடாது என்றால், வேகமானி ஊசியை அகற்றினால் போதும், கார் வேகமாகச் செல்லாது என்ற கருத்து உள்ளத...