செவ்வாய், 18 நவம்பர், 2025

GENERAL TALKS - காதல் ஒரு பட்டர்பிளை போல வரும் ! #1

 


ஒரு காலத்தில் காதல் எல்லாம் மிகவுமே அதிகமான பிரபலமாக இருந்தது. அந்த காலத்தில் ஒரு குறுஞ்செய்தி கூட காதலில் மிகப்பெரிய பொக்கிஷமாக கருதப்படும். வெளியில் பார்த்துக் கொண்ட பேசிக்கொண்ட குறைஞ்சபட்சம் கண்களால் சந்தித்துக் கொண்ட ஒரு சில தருணங்கள் கூட வாழ்க்கையின் பொக்கிஷமா நிமிஷங்களாக மாறிக் கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட் மெசேஜிங் சகாப்தத்தில், பலருக்கு தங்கள் வாழ்க்கையில் ஒரு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க அதிக விருப்பங்கள் உள்ளன. ஆனால் கடந்த காலத்தில், காதல் என்பது அதிக விருப்பங்களைக் கொண்டிருப்பதைப் பற்றியது, எனவே அதிக அன்பு. விருப்பங்கள் என்றால் லட்சக்கணக்கில் பணம், வானளாவிய, விலையுயர்ந்த வீடு அல்ல. நாட்குறிப்புகளும் கவிதைகளும்  கடிதங்களும் கிரீட்டிங் கார்டுகளும் காதலிப்பதில் உருவாகும் ஆசைகளில் மிகவும் முக்கியமான பகுதியாக கருதப்பட்டுள்ளது, இந்த காலகட்டத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒருவரின் வாழ்க்கையின் இந்தக் குறிப்பிட்ட காலம், கிட்டத்தட்ட ஒரு கனவு சொர்க்கம் போன்ற வாழ்க்கையை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. எத்தனையோ நாட்களில் எந்த நாளிலிருந்து இணையதள அட்டென்ஷன்ங்கள் அதிகமாக கிடைத்தால் தான் காதல் அதிகமாக இருக்கிறது என்று ஒரு புதிய டிவிஷன் வந்தது என்று தெரியவில்லை. உணவு முதல் வாழ்க்கை முறை வரை, செலவுகள் முதல் பயணங்கள் வரை அனைத்தையும் இணையத்தில் பகிர்ந்து கொள்வதும், தொடர்ந்து ஏராளமான பார்வைகளையும் கருத்துகளையும் பார்ப்பதும் ஆரோக்கியமான காதல் வாழ்க்கை முறையாக கருதப்படுவது இல்லை. இந்த சோசியல் மீடியாவில் வெற்றியை எதிர்பார்க்கும் பல சந்தர்ப்பங்களில், கணவன் மனைவி இடையே உருவாகும் அன்பு நீடிக்கும் என்பதற்கு உதாரணங்களையோ உத்தரவாதங்களையோ நாம் கொடுக்க முடியாது. எந்த ஒரு கட்டத்திலும் உங்களுடைய காதலை சோசியல் மீடியாவோட போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம் என்பதுதான் இந்த வலைப்பூவின் சார்பாக இந்த காலத்து காதலர்களுக்கு ஒரு மெசேஜாக சொல்கிறோம். சோசியல் மெடியா தனியானது, காதல் தனியானது ! 

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - காதல் ஒரு பட்டர்பிளை போல வரும் ! #2

  காதல் பெரும்பாலும் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதன் மூலமும் ஏற்றுக்கொள்வதன் மூலமும் அடையப்படுகிறது என்பது எல்லாம் சினிமா கருத்துக்கள் மக்களே...