கே. எஸ். ரவிகுமார் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், தேவயானி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை எஸ். ஏ. ராஜ்குமார் வெளியான காலத்தில் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.
சமீபத்தில் வெளிவந்த ட்யூட் என்ற திரைப்படத்துக்கு நிச்சயமாக இந்த படம் சம்பந்தமே இல்லாத இன்ஸ்பிரேஷனாக இருக்கும். காரணம் என்ன வென்றால் இந்த படத்தின் கதைக்களமும் கிட்டத்தட்ட இந்த புதிய படத்தை போலத்தான் இருக்கும்
தன்னுடைய சாதியைத் தவிர வேறு சாதியில் திருமணம் செய்து கொள்வது மிகவும் மோசமான செயலாக கருதி கடினமான தண்டனைகளைக் கொடுக்கக்கூடிய ஒரு பணக்காரராக இருக்கிறார் வில்லன்.
ஆனால் விதி எப்படி விளையாடுகிறது என்றால் இவருக்கு.சொந்தமான அந்த சொத்தின் வாரிசாக இருக்கும். சரத்குமார்.தன்னுடைய காதலித்து பழகிய பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியாமல் விதி வசத்தால் இந்த பணக்காரரின் மகளை திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உட்படுகிறார்
திருமணத்திற்குப் பிறகும் தன் காதலியையும், கருவில் இருக்கும் குழந்தையையும் காப்பாற்ற அவன் எவ்வளவு போராடுகிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
மேலும், இந்தப் படத்தின் கிளைமாக்ஸை எடுத்துக் கொண்டால், நீங்கள் பார்த்த டியூட் படம் போலவே இருக்கும். ஆனால் பழைய காலத்தில் பார்த்தது போல் இருக்கும். நேரம் இருந்தால், கண்டிப்பாக இந்தப் படத்தை ஒரு முறை பாருங்கள்.
கதைக்கு இடையேயான இணைப்பாக இந்தப் படத்தில் கொஞ்சம் நகைச்சுவை இருக்கிறது. ஒருமுறை பார்க்க வேண்டிய படம் என்று சொல்லலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக