புதன், 26 நவம்பர், 2025

காலத்தின் பயணத்தில் தமிழ் சினிமா ! #10




தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக விளங்கியவர் மறைந்த ரகுவரன். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவர், தனது ரியாக்ஷன்களால் மட்டுமே கதாபாத்திரத்தின் ஆழத்தை வெளிப்படுத்தும் திறன் கொண்டவர். ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், பின்னர் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்தார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தில் மார்க் ஆண்டனி என்ற வில்லன் கதாபாத்திரம், ரகுவரனின் நடிப்பை வேறொரு பரிமாணத்தில் காட்டியது. அந்த கதாபாத்திரம் பார்ப்பவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. ரஜினிகாந்தின் திரை பயணத்தில் முக்கியமான படமாக அமைந்த பாட்ஷா, ரகுவரனுக்கும் பெரும் புகழை பெற்றுத் தந்தது. அதேபோல் காதலன், முதல்வன் போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று ரசிகர்களை கவர்ந்தார். இதற்கிடையில் முகவரி, அமர்க்களம், திருமலை, யாரடி நீ மோகினி போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த அவர், வில்லனாக மிரட்டியவர் என்ற ரசிகர்களின் எண்ணத்தை முறியடிக்கும் வகையில் தனது நடிப்பை வெளிப்படுத்தினார் இன்னும் பல படங்களில் நடித்து புகழ் பெற வேண்டிய நிலையில், 49 வயதிலேயே 2008 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் மறைந்தார். தமிழில் அவரது இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாத அளவுக்கு குறுகிய காலத்தில் மறைந்தார் ரகுவரன். இந்நிலையில், இயக்குனர் தயா செந்தில், ரகுவரன் மற்றும் பிரகாஷ் ராஜ் இணைந்து நடித்த தயா படத்தில் நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார். படப்பிடிப்பின் போது முதலில் பிரகாஷ் ராஜ் காட்சிகளை எடுத்து விட்டு அவரை கிளம்பச் சொல்லுவாராம். ஆனால் அவர் கிளம்பாமல் அங்கேயே மறைந்து நின்று ரகுவரன் நடிப்பை ரசித்துக் கொண்டிருப்பார் - ஒரு வசனமே இல்லாத காட்சியில், கேமரா முகத்துக்கு அருகே வந்ததும், இயக்குனர் சொல்லாத விஷயத்தை உடல் பாவனையாக வெளிப்படுத்திய ரகுவரன், அனைவரையும் பிரம்மிக்க வைத்தார். அப்போது அமைதியாக இருந்த ஸ்பாட்டில், மறைந்து பார்த்த பிரகாஷ் ராஜ், தொடையில் தட்டி “ரகுவரன் பின்னிட்டான்” என மிரண்டு விட்டார். ரகுவரனின் இயல்பான நடிப்பு, குணச்சித்திரங்களிலும் வில்லன் கதாபாத்திரங்களிலும் அவர் காட்டிய ஆற்றல், தமிழ் சினிமாவில் என்றும் மறக்க முடியாத நினைவாகவே இருக்கும்

கருத்துகள் இல்லை:

SIVAJI THE BOSS (2007) - TAMIL MOVIE - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சிவாஜி ஆறுமுகம் என்ற மனிதர், அமெரிக்காவில் வெற்றிகரமாக இருந்த மென்பொருள் வல்லுநர், . ஆனால் அவர் தனது செல்வத்தை தனக்காக அரண்மனைகள...