ஒரு கமெர்சியல் ஹீரோவாக இருந்தாலும் நடிகர் அர்ஜூன் அவர்களுடைய நடிப்பு மிகவும் எதார்த்தமானது. சமீபத்தில் தொலைக்காட்சி பர்சனாலிட்டியாக இருக்கக்கூடிய தங்கதுரை அவர்கள் அவருடைய வாழ்க்கையில் வளரும் வயதில் அர்ஜுன் அவர்களுடைய படங்களை பார்க்கும் போதெல்லாம் அர்ஜுன் அவர்கள் நிஜமாகவே ஒரு காவல்துறை அதிகாரி என்றுதான் நினைத்துக் கொண்டு இருந்தாராம்.
அவருடைய நண்பர்கள் எல்லாருமே.அர்ஜூன் அவர்களுடைய நடிப்பினை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டு ஒரு முன்னுதாரணமாக இருக்கக்கூடிய அர்ஜூன் அவர்களை பார்த்து காவல்துறை அதிகாரியாக மாற வேண்டும் என்ற ஆசையால் கஷ்டப்பட்டு படித்து காவல்துறை அதிகாரியாக மாறினார்கள் என்றும் சொல்லி இருக்கிறார்.
1990களின் சினிமா முழுக்க முழுக்க ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட்டை மையமாகக் கொண்டிருந்தாலும், நடிகர் அர்ஜுன் தனது சுவாரஸ்யமான நடிப்புகளாலும், மக்களுக்கு ஒரு ஹீரோவாக இருக்கக்கூடிய அவரது ஆளுமையாலும், தேசபக்தி கொண்ட கதாபாத்திரங்களில் நடித்த சமூக அக்கறை கொண்ட அதிகாரியாக நடித்த அந்த நட்சத்திரமான நடிப்பாலும் உண்மையான வாழ்விலும் ஒரு முன்மாதிரியான குடிமகனாக இருப்பதன் மூலமாகவும் நேர்மையின் அர்த்தத்திற்கு ஒரு கருத்தியல் அணுகுமுறையை வழங்கினார் என்றும் இந்த வலைப்பதிவு நம்புகிறது.
மக்களிடமிருந்து அவர் இவ்வளவு நல்ல கருத்தை பெற்ற ஆதரவை பெற்றதற்கு இதுவே ஒரு காரணம். தைரியம், மன உறுதி, கடின உழைப்பு இருந்தால் வாழ்க்கையில் ஒரு ஹீரோவாக வாழ முடியும் என்ற ஆசையை விதைத்தவர் நடிகர் அர்ஜுன் என்றும் சொல்லலாம் என்பதே தொண்ணூறுகளின் திரைப்பட ரசிகர்களின் பொதுவான காரணம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக