சமீபத்தில் ஒரு படம் , நூறு கோடி கலெக்ஷன் எடுத்த படம் திருமணம் நடந்த பின்னாலும் காதலை வைத்திருப்பது சரி என்று சொல்கிறது. இங்கேதான் நாம் டாக்ஸிக் பெமினிஸம் என்ற விஷயத்தை கவனிக்க வேண்டும். இந்த டாக்ஸிக் பேமினிஸம் இருக்கும் ஆண்கள் இப்போது எல்லாம் 2025 ல் பெண்கள் என்ன முடிவு எடுத்தாலும் சரியானது என்றும் ஆண்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு தர வேண்டும் அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்றும் நான் ஒரு பெமினிஸ்ட்டான ஆண் என்றும் முட்டாள்தனமாக பெண்களை சப்போர்ட் பண்ண சொல்லிக்கொள்வது அவ்வளவு சரியான கருத்து ஆகாது என்பது இந்த படத்தில் மக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடம்.
இங்கே படம் என்னவோ கமேர்சியல் படம்தான், இது எல்லாம் கேள்வி கேட்டால் சுந்தர் சி - ன் மதகஜராஜா , ஆம்பளை போன்ற திரைப்படங்களில் பெண்களை அழகை பார்த்து காதலில் விழுவதை பயங்கரமாக கலாய்த்த காட்சிகளை எல்லாம் உதாரணமாக காட்டலாம், இருந்தாலும் இந்த படத்தில் இந்த பெண் கதாப்பாத்திரத்தை தனக்கு முறைப்பையானாக இருந்த தன்னை காப்பாற்ற உதவி செய்த ஒரு நல்ல நன்றி விசுவாசம் கூட இல்லாமல் நிறைய சிக்கல்களில் மாட்டிவிட்டு சுய நலமாக மட்டுமே முடிவு எடுக்கும் பெண்ணாக மட்டுமேதானே காட்டி இருக்கிறார்கள்.
கதாநாயகராக நடித்த நடிகர் பின்னாளில் ஷூட்டிங்கில் படம் நடக்கும்போது குடும்பத்தில் ஒரே கேஸ்ட்டில் கல்யாணம் பண்ண ஃபோர்ஸ் பண்ணுவதாக கதையை மாற்றுங்கள் என்றும் திருமணம் கடந்த உறவை சப்போர்ட் பண்ணுவாதாக இந்த கதையை வைத்திருக்க வேண்டாம் என்று இயக்குனரிடம் சொல்லி மாற்றினாராம், அதனால்தான் படத்தில் கதாநாயகன் கேரக்ட்டருக்கு கொஞ்சம் பரிதாபம் கிடைத்து கதைக்கு கொஞ்சம் சப்போர்ட் கிடைத்து இருக்கிறது.
இந்த படம் அனிமல் படத்தை போல குப்பையான படம் அல்ல. மாறாக கதையை நன்றாக சோதப்பி எடுத்த ஒரு நல்ல மேக்கிங் இருக்கும் நல்ல மியூஸிக் இருக்கும் ஒரு மோசமான படம். இந்த படத்தில் அடிப்படை மனிதநேயம் என்ற கருத்துக்கு மட்டும் மார்க் கொடுக்கலாம், மற்றபடி கதாநாயகியின் சுயநலத்துக்கும் தான்தோன்றித்தனமான புத்திக்கும் கதாநாயகரை படுத்தும் பாடு எல்லாம் எந்த வகையிலும் ஒரு மக்களுக்கு இயல்பு வாழ்க்கைக்கு பொருந்தாத மோசமான கருத்துக்களே என்றே சொல்லலாம் - படத்தின் பெயர் "ட்யூட்"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக