செவ்வாய், 25 நவம்பர், 2025

SPECIAL TALKS - வருடங்கள் முடிந்தாலும் வாழ்க்கை மாறவே இல்லை !

 



ஒவ்வொரு வருஷம் முடியும்போதும் இந்த வருஷம் கஷ்டமாக இருந்தாலும் அடுத்த வருஷம் நன்றாக இருக்கும் என்று ஆசைப்படக்கூடிய அந்த வலி இருக்கிறதே அந்த வலி - பெரும்பாலான நேரங்களில், எனக்கு ஒரு தனிப்பட்ட ஆரோக்கிய பயிற்சியாளர் (பெர்சனல் வெல்னஸ் கோச்) இருக்கிறார், 

அதனால் நான் சில ஆய்வுகளைச் செய்கிறேன் வாழ்க்கையின் முடிவுகளை மாற்ற போராடுகிறேன். அப்படியிருந்தும், இவ்வளவு குறைவாக சக்திகளோடு வாழ்க்கையில் நான் என்ன செய்ய முடியும் என்று யோசித்து பார்த்தாலே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதைப் பற்றி நான் நினைக்கும் போது, ​​கடலும் நதியும் எதிர்மறை எண்ணங்களுடன் கலப்பது போல் இருக்கிறது.

இதன் பொருள், நம் வாழ்வில் நல்லதாக இருந்திருக்கக்கூடிய அனைத்து விஷயங்களும் கெட்டதாக இருந்திருக்கக்கூடிய கடலில் மறைந்து போகின்றன என்ற உணர்வு, குறிப்பாக பொருளாதாரத்தை சொல்லலாம் நமது வருமானம் முழுவதும் கடனுக்காக கரைந்துவிட்டால் நாம் என்ன செய்வது?

சில நேரங்களில் நாம் மனதளவில் கஷ்டத்தில் இருப்பதால் காயப்படும்போதுவோ, கோபமாகவோ மற்றவர்களை பேசி விடுகிறோம். ஆனால் அதுவும் கூட பின்னாட்களில் மனதுக்கு மிகவும் வருத்தமானதாக தான் இருக்கிறது.என்ன வென்று சொல்லுவது சராசரியான மனிதர்களுக்குள்ளே சராசரியான உணர்வுகள் தான் இருக்கிறது. 

நாம் தான் நம்மை மேம்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறோம். இந்த அனைத்து விஷயங்களும் சரியாக இருக்க வேண்டும் என்றால் நமக்கு மேல் இருக்கக்கூடிய அமைப்பு தான் முடிவெடுக்க வேண்டுமே தவிர்த்து நம்மால் எதுவுமே முடிவெடுக்க முடியாத ஒரு நிலையாக இருக்கிறது

என்னதான் தனிமனித முயற்சியாக நிறைய விஷயங்கள் செய்தாலும் நமக்கு மேலே ஒரு அமைப்பு இருக்கிறது. மக்களே அந்த அமைப்பு சரியாக இருந்தால் மட்டும்தான் நம்முடைய வாழ்க்கை நன்றாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

தமிழ் மோட்டிவேஷன் கருத்துக்கள் [TAMIL-MOTIVATION-QUOTES-BLOGSPOT]-#2-

1. நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய விதி நமக்கு நிரந்தரமாக பாதிக்கக் கூடிய அளவுக்கு மிகப்பெரிய ரிஸ்க்கை கொடுத்தாலும் சரியான அறிவுத்திறனும் கடி...