நாய்கள் மனிதனுடன் வாழும் பழக்கம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கிறது. வனத்தில் வாழ்ந்த நாய்கள் மனிதனுக்கு துணையாக இருந்தன. இன்று நாய்கள் வீட்டு உறுப்பினர்களாகவே கருதப்படுகிறார்கள். “நாய் பிடிக்குது பிடிக்கல” என்ற விவாதம் ஒரு பக்கம் இருக்கட்டும், ஆனால் நாய்கள் மீது மனிதனுக்கு ஏற்படும் பாசம் ஒரு தனி விஞ்ஞான ரீதியான காரணத்தால் உருவாகிறது. மனிதர்கள் நாய்களை பார்த்தபோது, அவர்களுடன் நேரம் செலவிடும் போது, நாய்கள் கண்களில் நேராக பார்ப்பதற்கும், நம்மை நக்குவதற்கும், நெருக்கமாக இருப்பதற்கும், நம்முடைய உடலில் ஆக்ஸிட்டோஸின் என்ற ஹார்மோன் அதிகரிக்கிறது. இதுவே காதல் ஹார்மோன் மற்றும் என்றும் சேர்த்து வைக்கும் பிணைப்பை உருவாக்கும் கெமிக்கல் என்றும் அழைக்கப்படுகிறது. இது தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஏற்படும் பாசத்தையும் உருவாக்குகிறது. அதேபோல் நாய்கள் மற்றும் மனிதர்களுக்கிடையேயும் ஒரு உணர்வுப்பூர்வமான பிணைப்பு ஏற்படுகிறது. இருந்தாலும் நமது ஊரில், எங்கேயாவது ஒரு நாயை வாங்கி, சில மாதங்கள் வளர்த்து பிடிக்கவில்லை என்றால் நடுரோட்டில் விட்டுவிடும் பழக்கம் சிலரிடம் இருக்கிறது. இது ஒரு சமூக சிந்தனையற்ற செயலாக பார்க்கப்படுகிறது. ஒரு உயிரை வளர்க்கும் பொறுப்பு என்பது ஒரு விளையாட்டு அல்ல. வீட்டில் வளர்ந்த நாய்கள், தெரு சூழ்நிலைக்கு பழகாததால், சண்டை, கடி, சாப்பாடு இல்லாமை போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றன. அவை சொந்தமாக யோசிக்க முடியாத ஜீவன்கள் என்பதால் வளர்த்தவர்கள் வந்து கூட்டிட்டு போய்விட மாட்டாங்களா?” என்ற ஆதங்கத்தோடு, தெருவில் அங்கயும் இங்கேயும் சுத்திக்கொண்டே இருக்கும். கழுத்தில் பெல்ட் இருந்தால், அது விட்டுவிடப்பட்ட நாயாக இருக்க வாய்ப்பு அதிகம். கழுத்தில் பெல்ட் இல்லை என்றால் பஞ்சாயத்துதான். மனிதன் செய்யும் தவறுகளுக்கு கர்மா சேரும் என்பது பல ஆன்மீக சிந்தனைகளின் அடிப்படை. ஆனால் வாயில்லாத ஜீவனுக்கும் நாம் செய்யும் தவறுகளுக்கு பாவம் சேரும் என்று சொல்கிறார்கள். ஒரு நாயை வளர்த்து, பின்னர் அதை விட்டுவிடுவது, ஒரு உயிரின் நம்பிக்கையை சிதைக்கும் செயல். என்கிறார்கள். நாய்கள் மனிதர்களின் முகபாவங்களை, மனநிலையை புரிந்துகொள்ளும் திறன் கொண்டவை. அவை உணர்வுகளை உணரக்கூடிய ஜீவன்கள். அதனால் தான், நம்மை விட்டுப் போனாலும், நம்மை எதிர்பார்த்து, நம்மை தேடி, நம்மை நினைத்து, ஒரு பாசத்தோடு வாழும். நாய்கள் வளர்ப்பது ஒரு பொறுப்பு. வளர்க்கும் முன், அதன் தேவைகள், பராமரிப்பு, மருத்துவம், உணவு, பயிற்சி ஆகியவற்றை கவனிக்க வேண்டும். வளர்க்க முடியாத நிலை ஏற்பட்டால், அனாதை நாய்கள் பாதுகாப்பு மையங்கள் அல்லது விலங்கு நல அமைப்புகள் மூலம் பாதுகாப்பாக ஒப்படைக்க வேண்டும். அதே சமயத்தில் குட்டி நாய்கள் மீது ஏற்படும் பாசம், ஆக்ஸிட்டோஸின் கெமிக்கல் மூலம் உருவாகும். ஆனால் அந்த பாசம் அக்கறையுடன் இணைந்திருக்க வேண்டும். இல்லையெனில், அது ஒரு உயிரின் வாழ்க்கையை காலி பண்ணிவிடும். நாய்கள் வளர்ப்பது பெருமைக்காக அல்ல, அதே சமயத்தில் இவைகள் ஐந்து அறிவு ஜீவன்கள். உதவிகளை பண்ணுகிறது என்பதற்காக இவைகளுக்கு சோறு போட்டால் வண்டிக்கு குறுக்கே செல்வது, குழந்தைகளை தாக்குவது போன்ற தெரு பிரச்சனைகளை கொண்டுவந்து சேர்க்கும் என்பதால் இவைகளுடைய வாழ்க்கையில் கடின கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டால் தயங்காமல் அனுமதியுங்கள் !
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இப்போது சமீபத்தில் சென்றுகொண்டு இருக்கும் தெருநாய்கள் பாதுகாப்பு பிரச்சனை ! - STREET DOGS ISSUE TAMIL #2
நாய்கள் மன அழுத்தத்தை குறைக்கும் சக்தி கொண்டவை. அவற்றின் அன்பும், உற்சாகமும், நம்மை மனச்சோர்விலிருந்து மீட்க உதவுகிறது. இருந்தாலும் இந்த வ...
-
இந்த படத்துடைய கதையை ஸ்பாய்லர் பண்ணாமல் இந்த படத்தை எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுவது கஷ்டம் , இந்த கதை சேலம் மாவட்டத்தில் நடக்கிறது நேர்மையான மனம் உ...
-
நம்ம பணத்தை செலவு செய்வதில் மிக முக்கியமான விஷயம் நம்முடைய கனவுகளை பேலன்ஸ் பண்ணுவதுதான். பணத்தை வேகமாக செலவு செய்யும்போது நம்முடைய கனவுகள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக