நாய்கள் மன அழுத்தத்தை குறைக்கும் சக்தி கொண்டவை. அவற்றின் அன்பும், உற்சாகமும், நம்மை மனச்சோர்விலிருந்து மீட்க உதவுகிறது. இருந்தாலும் இந்த விஷயங்களில் மனிதர்களுக்கு பிரயோஜனப்படும் வகையில் நாய்களை பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளன , மனநல நிபுணர்களும், ஐ மனநல சிகிச்சைக்காக பரிந்துரைக்கின்றனர். நாய்கள் அருகில் இருப்பது, தனிமையை குறைத்து, நம்மை பாதுகாப்பாக உணர வைக்கிறது. வெகு இடங்களில் நாய்கள் குழந்தைகளுக்கு சிறந்த தோழர்களாக இருக்கின்றன. அவை பொறுமையுடன் குழந்தைகளுடன் பழகும். இது குழந்தைகளுக்கு அன்பு போன்ற பண்புகளை வளர்க்க உதவுகிறது. பல பெற்றோர்கள், குழந்தைகளுக்காக அவைகளின் நாய்களை வளர்க்க விரும்புகிறார்கள், ஆனால் அதன் பின்னணியில் உள்ள பொறுப்பையும் புரிந்து கொள்ள வேண்டும். நேர்மையான வளர்ப்பு என்றால் வயதான மூத்த குடிமக்களுக்கு நாய்கள் ஒரு உணர்வுப் பிணைப்பு மற்றும் உற்சாகம் தரும். தனிமையில் வாழும் வயதானவர்கள், நாய்கள் மூலம் ஒரு உறவுணர்வை பெறுகிறார்கள். இது அவர்களின் உடல் இயக்கத்தையும், மனநலத்தையும் மேம்படுத்துகிறது. நாய்கள் வீட்டை பாதுகாக்கும் திறன் கொண்டவை. அவை சத்தம் கேட்டு எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும். சில நாய்கள் போலீஸ், ராணுவம், மீட்பு பணிகள் போன்ற துறைகளிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை மனிதனுக்காக தங்கள் உயிரையும் பணயம் வைக்கும் அளவுக்கு விசுவாசமுள்ளவை. நாம் வளர்க்கும் நாய்கள் மட்டுமல்ல, தெருநாய்களும் அதே உணர்வுகளும், தேவைகளும் கொண்டவை என்ற யோசனைகளை வைக்க வேண்டாம், தாறுமாறான போராட்டம் இவைகளை கோபக்கார மக்களாக சுற்றிவர வைத்துள்ளது . இருந்தாலும் அவற்றை புறக்கணிக்காமல் இவைகளுக்கு குடும்ப கட்டுப்பாடு - கருத்தடை - உணவு, பாதுகாப்பு போன்ற அம்சங்களில் அரசு மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும். தெருநாய்கள் மீது கருணை காட்டுவது நம் சமூகத்தின் நாகரிகத்தைக் காட்டும், மேலும் வீடுகளில் நாய் வளர்ப்பு கவனிக்கப்பட்டு இவைகளை விட்டுவிடுதல் சட்ட நடவடிக்கைக்கு உட்பட்ட விஷயங்களாக மாற்றப்பட வேண்டும். நாய்கள் ஒரு நாள் விளையாடி விட்டு வைக்கப்படும் பொம்மைகள் அல்ல. அவை நிறைய மாதங்கள் வளர்க்க வேண்டிய உயிர்கள். அவற்றின் வாழ்க்கை முழுவதும் பராமரிக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது. ஒரு நாயின் ஆயுள் 10–15 ஆண்டுகள். அந்த காலம் முழுவதும் அதற்குத் தேவையான அன்பும், பாதுகாப்பும் வழங்க வேண்டும். இவைகளுக்கு கொஞ்சம் புத்திசாலித்தனம் இருப்பதால் நாய்கள் தங்கள் உணர்வுகளை முகபாவனைகள், வாலாட்டல், குரல், உடல் மொழி ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்துகின்றன. அவை மகிழ்ச்சி, பயம், கோபம், ஏமாற்றம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன் கொண்டவை. இது மனிதர்களுடன் ஒரு உணர்வுப் பாலம் அமைக்க உதவுகிறது. இன்றைய சமூக ஊடகங்களில் நாய்கள் முக்கிய இடம் பெற்றுள்ளன. நாய்களின் வீடியோக்கள், மீம்ஸ், புகைப்படங்கள் போன்றவை மக்களுக்கு மகிழ்ச்சியையும், மனநலத்தையும் தருகின்றன. இது நாய்கள் மீது உள்ள பாசத்தை மேலும் வலுப்படுத்துகிறது. ஆனால் இவைகளை கஷ்டப்படுத்தும் காணொளிகளை போடுவதும் தப்பான விஷயம். \ பல நாய்கள், தங்கள் உரிமையாளர்களின் மனநிலையை உணர்ந்து, அவர்களுக்கு ஆறுதல் அளிக்கின்றன. சில நாய்கள், உரிமையாளர்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது அருகில் வந்து உடனிருப்பதன் மூலம் சப்போர்ட் பண்ணுவது போல செயல்படுகின்றன, இருந்தாலும் இவை ஐந்தறிவு ஜீவன்கள் - எல்லைக்கோடு போட்டு வளர்க்கப்படுவதே நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக