தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் என்று சொல்லப்பட வேண்டிய 'சூரரைப் போற்று' திரைப்படம், நிஜ வாழ்க்கையின் ஒரு படத்தின் கதை மட்டுமல்ல, மக்களை இந்தப் படத்திற்குள் ஆழமாக இழுக்கக்கூடிய ஒரு புதுமையான திரைக்கதை. இந்தப் படத்தில் வில்லன் அல்லது ஹீரோ சண்டைக் காட்சிகள் இருக்காது.
ஆனால் இந்தப் படத்தின் வேகமும் இந்தப் படத்தில் வரும் கதாநாயகனின் நாடித்துடிப்பும் இந்தப் படத்திற்காகவே இருந்தன. இந்த ஏற்பாட்டை உருவாக்க முயன்ற, ஒரு விமான நிறுவனத்தை உருவாக்க முயன்ற சராசரி இளைஞர்களின் போராட்டமும் இந்தப் படத்தில் ஒரு ஒரு காட்சியிலும் வெளிப்பட்டது.
ஒரு கதாநாயகனாக காட்டப்பட வேண்டும் என்றால் ஒரு சாதாரண வணிக கமர்ஷியல் படங்களின் ஃபார்முலாவைப் பயன்படுத்தி அவர் ஜொலிக்க முடியும். இந்த மாதிரியான ஒரு கதாபாத்திரமாக இல்லாமல், இந்தப் படத்தின் நெடுமாறன் ராஜலிங்கம் படத்தின் நங்கூரம் போன்ற கனமான ஒரு நிஜ வாழ்க்கை போராட்ட வீரராக ஒரு சராசரி இளைஞனின் வாழ்க்கையில் காணக்கூடிய போராட்டம், காதல், கோபம், இயக்கம் என அனைத்து அம்சங்களிலும் அவர் மிகவும் முன்மாதிரியான கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார்.
ஒரு கடினமான ஊர்க்குருவி பருந்தாக மாறிய கதையை அவர் வாழ்ந்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கு சூர்யா உயிர் கொடுத்திருப்பது இந்த படத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம். சுதா அவர்களுடைய இயக்கத்தில் ரசிகர்களுக்கு எதிர்பார்த்ததை விட மிகவும் அதிகமாகவே கொடுத்த ஒரு படம் என்றால் இந்த சூரரை போற்று திரைப்படத்தை சொல்லலாம். தமிழ் சினிமாவில் மதிக்கப்படக்கூடிய போற்றப்படக் கூடிய ஒரு படமாக இருக்க வேண்டிய ஒரு படம் தான் இந்த சூரரை போற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக