செவ்வாய், 25 நவம்பர், 2025

காலத்தின் பயணத்தில் தமிழ் சினிமா ! #4



உனக்காக எல்லாம் உனக்காக படத்தில், நடிகர் கவுண்டமணி அவர்கள் தனது சாப்பாட்டு விருந்து இலையில் ஒரு பெரிய செங்கலை வைத்து, சாப்பாட்டில் கல் இருப்பதாக எல்லோரிடமும் கூறுகிறார். யாரையாவது சண்டைக்கு வரச் சொல்கிறார். ஆனால் அப்போதும் கூட யாரும் சண்டைக்கு வருவதில்லை. இந்தக் காட்சிக்குப் பின்னால் ஒரு உண்மையான சம்பவம் இருக்கிறது.

இந்தப் படத்தின் இந்த காட்சி எப்படி வந்தது என்றால் இந்த படத்தின் ஷூட்டிங்குக்காக நடிகர் கவுண்டமணி அவருடைய காரில் சென்றபோது ஒரு பஸ் டிரைவர் அவருடைய பஸ்ஸை அவருடைய காரின் மீது பலமாக மோதிவிட்டார். 

இதனால் கவுண்டமணி அவர்களுடைய கார் பாதிப்பு அடைந்தது. இதனால் கோபமுற்ற கவுண்டமணி அவர்கள் அந்த பஸ் டிரைவருடன் சண்டைக்கு சில செல்லும் பொழுது அந்த பஸ் டிரைவர் "கவுண்டமணி அண்ணே நல்லா இருக்கீங்களா? செந்தில் அண்ணனோட இருப்பீங்களே ? செந்தில் என்னை எப்படி இருக்காரு ?" என்று ஒரு சொந்தக்காரரை வெகு நாட்கள் கழித்து பார்த்தது போல அன்பாக பேச ஆரம்பித்தார். 

ஆமாம். கவுண்டமணி அண்ணன் என்னதான் கோபப் பட்டாலும் அந்த பஸ் டிரைவர்.அவரை பார்த்து விட்டோம் என்ற சந்தோஷத்திலேயே.மிகவும் ஆர்வமாக இருந்தாராம்.

இதனால் கோபப்பட வேண்டிய இடத்தில் கூட கோபப்படமுடியாத அளவுக்கு அவருடைய நகைச்சுவை காட்சிகள் பிரபலம் அடைந்ததை நினைத்து.சங்கடம் அடைந்த நடிகர் கவுண்டமணி அவர்கள் இந்த காட்சிக்காக இது போன்ற ஒரு ஐடியாவை யோசித்து செயல்படுத்தினார்.  

என்னோட யாரும் சண்டைக்கு வர மாட்டேன் என்கிறார்கள் என்ற கலகலப்பான வசனத்தையும் நமக்காக கொடுத்துள்ளார். நிறைய நேரங்களில் நம்முடைய நிஜ வாழ்க்கையில் நடக்கக்கூடிய விஷயங்கள் தான் நம்முடைய வேலைகளிலும் பிரதிபலிக்கிறது. 

அவைகள் நல்ல விஷயமாக இருந்தாலும் சரி, கெட்ட விஷயமாக இருந்தாலும் சரி நமது செயல்களால் உருவாகும் முடிவுகள் சந்தோஷமானதாக அமைந்தால் அனைவருக்கும் நலமே.

கருத்துகள் இல்லை:

THE LIFE BOOK - PAGE 2

நம் வாழ்வில் சிலருக்கு, ஒரு கார் வேகமாகச் செல்லக் கூடாது என்றால், வேகமானி ஊசியை அகற்றினால் போதும், கார் வேகமாகச் செல்லாது என்ற கருத்து உள்ளத...